BREAKING NEWS
latest

Monday, August 10, 2026

அரபு தமிழ் டெய்லி தளத்தின் நிறுவனர் யார்..?

Who is the founder of the Arab Tamil Daily website?

Image : சாஜன் ராமச்சந்திரன்

அரபு தமிழ் டெய்லி தளத்தின் நிறுவனர் யார்..?

அரபு தமிழ் டெய்லி தளத்தின் நிறுவனர் சாஜன் ராமசந்திரன் என்பவர் ஆவார். இவர் கன்னியாகுமரியை பூர்வீகமாக கொண்டவர். இவர் தமிழ், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் புலமை கொண்டவர். இந்த செய்தி தளம் 2012 கடைசியில் துவங்கப்பட்டன. தற்போது சுமார் 5,00,000 தமிழர்கள் பின் தொடரும் வளைகுடாவின் தமிழ் செய்தி தளங்களில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Sajan Ramachandran | Tamil News | Atd News

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to

Monday, July 27, 2026

குவைத்தில் கொடூரமாக தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் குடிமகனுக்கு 15 ஆண்டு சிறை;வெளிநாட்டினருக்கு நீதி மறுக்கப்படுகிறதா....???

குவைத்தில் 2 தினாருக்காக கொடூரமாக தொழிலாளி மீது வண்டியை ஏற்றி கொலை செய்த வழக்கில் குடிமகனுக்கு 15 ஆண்டுகள் சிறை என்ற தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது

Image : செய்திக்காக பதிவிறக்கம் செய்யப்பட்டது

குவைத்தில் கொடூரமாக தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் குடிமகனுக்கு 15 ஆண்டு சிறை;வெளிநாட்டினருக்கு நீதி மறுக்கப்படுகிறதா....???

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளியின் மரணத்திற்கு காரணமான குவைத் குடிமகன் ஒருவருக்கு குற்றவியல் நீதிமன்றம் விதித்த 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை இன்று(27/07/26) மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நீதிபதி நாசர் சலீம் அல்-ஹைத் தலைமையில், நீதிபதிகள் முதாப் அல்-அரிதி மற்றும் சவுத் அல்-சானி ஆகியோரைக் கொண்ட அமர்வு குற்றவியல் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது. கடந்த ஆண்டு இரவு நேரத்தில் அல்-முத்லா பகுதியில் இந்த துயரமான சம்பவம் நிகழ்ந்தது. அந்த நேரத்தில் இது தொடர்பான செய்தியை நமது தளத்தில் வெளியிட்டிருந்தோம்.

சம்பவம் நடந்த அன்று, குற்றவாளி அப்பகுதியில் உள்ள மொபைல் மளிகைக் கடைக்கு வாகனத்தில் வந்து, 2 தினார் மதிப்புள்ள பொருட்களை வாங்கிவிட்டு, பணம் செலுத்தாமல் வாகனத்தை ஓட்டிச் செல்ல முயன்றார். இருப்பினும் தப்பித்த வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்ற ஊழியரின் கையை கண்ணாடி ஜன்னலை மூடி, சுமார் 30 மீட்டர் தூரம் வாகனத்தில் இழுத்து சென்று பின்னர் ஜனலை திறந்தான் இதில் தூக்கி வீசப்பட்ட அவருடைய உடலில் பின்சக்கரம் ஏறி இறங்கியதால் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. பின்னர் கவலைக்கிடமாக இருந்த ஊழியரை ஜஹ்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவத்தில் உயிரிழப்பு என்றால்,இந்த 15 ஆண்டு சிறை தண்டனை பரவாயில்லை. ஆனா‌ல் இப்படி கொடூரமாக செய்யப்பட்ட கொலைக்கு குறைந்தது மரணதண்டனை என்பதை சரி. குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான பல கொடூரமான கொலை வழக்குகளில் சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் குடிமக்கள் குற்றவாளி என்றால் மரணதண்டனை என்பதே விதிக்கப்படவில்லை என்பதை பார்க்க முடிக்கிறது. சமீபத்திய தீர்ப்புகளை பார்த்தால் வெளிநாட்டினருக்கு நீதி மறுக்கப்படுகிறதா...?? என்ற எண்ணம் தோன்றுகிறது.

Kuwait Police | Kuwaity Man | Shop Worker

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to

Wednesday, July 22, 2026

குவைத்தில் வசிக்கின்ற இந்தியர்களின் எண்ணிக்கை 1 மில்லியன் கடந்து முதல் வெளிநாட்டு சமூகம் என்ற இடத்தை பிடித்துள்ளது

குவைத் குடிமைத் தகவல் ஆணையம் வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின் படி நாட்டின் மொத்த மக்கள் தொகை 5.31 மில்லியனாக அதிகரித்துள்ளது

Image : குவைத் இந்திய தூதரக வளாகம்

குவைத்தில் வசிக்கின்ற இந்தியர்களின் எண்ணிக்கை 1 மில்லியன் கடந்து முதல் வெளிநாட்டு சமூகம் என்ற இடத்தை பிடித்துள்ளது

குவைத் குடிமைத் தகவல் ஆணையம் நேற்று(21/07/26) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, குவைத்தின் மொத்த மக்கள் தொகை ஜூன் 30 நிலவரப்படி 5.31 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதனுடன், இந்தியர்களின் எண்ணிக்கையும் 1.06 மில்லியனாக அதிகரித்துள்ளது(பத்து லட்சத்து அறுபதாயிரம்). நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 1.56 மில்லியன் பேர் குவைத் குடிமக்கள்(30 சதவீதம்) மற்றும் 3.74 மில்லியன் பேர் வெளிநாட்டவர்களும் ஆவார்கள்(70 சதவீதம்).

வெளிநாட்டவர்களில் 10,60,000(20 சதவீதம்) பேருடன் முதல் இடத்தில் உள்ள இந்தியர்களுக்கு அடுத்தபடியாக, சுமார் 670,000 பேருடன்(13 சதவீதம்) எகிப்தியர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளனர். 333,060 பேருடன்(6 சதவீதம்) வங்காளதேசத்தினர் மூன்றாம் இடத்திலும், 226,500 பேருடன்(4 சதவீதம்) பிலிப்பைன்ஸ் நாட்டினர் நான்காம் இடத்திலும், 201,500 பேருடன்(4 சதவீதம்) சிரியா நாட்டினர் ஐந்தாம் இடத்திலும், 197,400 பேருடன் (4 சதவீதம்) இலங்கையர்கள் ஆறாம் இடத்திலும், 186,600 பேருடன் (4 சதவீதம்) நேபாளிகள் ஏழாம் இடத்திலும், 155,500 பேருடன் (3 சதவீதம்) சவுதி நாட்டினர் எட்டாம் இடத்திலும், 105,700 பேருடன்(2 சதவீதம்) பாகிஸ்தானியர்கள் ஒன்பதாம் இடத்திலும் உள்ளனர்.

இதற்கிடையே நாட்டில் வேலை செய்கின்றவர்கள் எண்ணிக்கை 32.64 லட்சமாக உயர்ந்துள்ளது. இவர்களில் 28 லட்சம் பேர் வெளிநாட்டினர் ஆவார்கள். நாட்டின் மொத்த தொழிலாளர்களில் 28.8 சதவீதம் பேர் இந்தியர்கள். எகிப்து 14.6%, குவைத்திகள் 14.2%, பங்களாதேஷ் 9.9%, பிலிப்பைன்ஸ் 6.6%, இலங்கை 5.8%, நேபாளம் 5.7%, சிரியா 2.3%, பாகிஸ்தான் 2.3% மற்றும் ஜோர்டான் 1% என்றும் புள்ளிவிவரங்கள் தெளிவு படுத்துகின்றன.

அதேபோல் தனியார் துறையில் பணிபுரிபவர்களில் 30.7 சதவீதம் பேரும் இந்தியர்கள் ஆவார்கள், இந்தியர்களுக்கு அடுத்த படியாக இந்தத் துறையில் 23.6 சதவீத எகிப்தியர்களும், 11.2 சதவீத பங்களாதேசியர்களும் பணியாற்றுகின்றனர். அதேநேரம் அரசு துறைகளில் வேலை செய்கின்ற ஊழியர்களில் சுமார் 74.7 சதவீதம் பேரும் குவைத் நாட்டவர்கள் ஆவார்கள், அவர்களுக்கு அடுத்தபடியாக 7.1 சதவீத எகிப்தியர்களும், 5.1% இந்தியர்களும் பணிபுரிகின்றனர்.

நாட்டில் 8.83 லட்சம் வெளிநாட்டினர் வீட்டுப் பணியாளர்களாக உள்ளனர். நாட்டிலுள்ள மொத்த தொழிலாளர்களில் 27 சதவீதமும், மக்கள் தொகையில் 17 சதவீதமும் இவர்களே ஆவார்கள். அதேபோல் இவர்களில் 57.7 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள். இதிலும் இந்தியர்கள் முன்னணியில் உள்ளனர் 39 சதவீதம். இலங்கையர்கள் 17.9%, பிலிப்பைன்ஸ் 17.1%, பங்களாதேஷ் 12.1% மற்றும் நேபாளம் 7.8% வேலை செய்வதாகவும் புள்ளிவிவர கணக்குகள் தெரிவிக்கின்றன.

Kuwait Population | Gulf Workers | Indian People

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to

குவைத்தில் உங்களுடைய வேலைவாய்ப்பு ஒப்பந்தம் எந்தெந்த சூழ்நிலையில் முடிவுக்கு வரும் என்பது குறித்து மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது:

குவைத் மனிதவள ஆணையம் வெளியிட்ட விழிப்புணர்வுப் பதிவு ஒன்றில் தொழிலாளர் சட்ட விதிகளின்படி வேலைவாய்ப்பு ஒப்பந்தம் எந்தெந்த சூழ்நிலையில் முடிவுக்கு வரும் என்பது குறித்து விளக்கத்தை அளித்துள்ளது

Image : குவைத் திறந்த வெளி தொழிலாளர்கள்

குவைத்தில் உங்களுடைய வேலைவாய்ப்பு ஒப்பந்தம் எந்தெந்த சூழ்நிலையில் முடிவுக்கு வரும் என்பது குறித்து மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது:

குவைத் மனிதவள ஆணையம் இன்று(22/07/26) புதன்கிழமை வெளியிட்ட விழிப்புணர்வுப் பதிவு ஒன்றில், தொழிலாளர் சட்ட விதிகளின்படி வேலைவாய்ப்பு ஒப்பந்தம் எந்தெந்த சூழ்நிலையில் முடிவுக்கு வரும் என்பது குறித்து விளக்கத்தை அளித்துள்ளது. இதில், சட்டத்தின் அடிப்படையில் ஒப்பந்தம் தானாகவே முடிவுக்கு வரும் சூழல்கள் மற்றும் வேலையளிப்பவர் மற்றும் தொழிலாளி ஆகிய இரு தரப்பினரின் உரிமைகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட சூழல்களில் தொழிலாளியின் பணியை முடிவுக்குக் கொண்டு வரும் உரிமை வேலையளிப்பவருக்கு(முதலாளிக்கு) உண்டு என்று ஆணையம் விளக்கியுள்ளது. இதில், காலவரையற்ற ஒப்பந்தங்களில் உரிய அறிவிப்புக் காலத்தைக்(Notice Period) கடைப்பிடித்து பணிநீக்கம் செய்வது அல்லது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தீவிரமான குற்ற செயல்களில் ஈடுபட்ட காரணங்களுக்காகப் பணிநீக்கம் செய்வது ஆகியவை அடங்கும். அதேவேளையில், பணிநீக்க முடிவு தவறானது என்று கருதினால், தொழிலாளர் சட்டத்தின் 41, 44 மற்றும் 46-வது பிரிவுகளின்படி மேல்முறையீடு செய்வதற்கான உரிமை அத்தொழிலாளிக்கு உண்டு எனவும் விளக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் உரிமை தொழிலாளிக்கு உண்டு என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது. தொழிலாளர் சட்டத்தின் 48-வது பிரிவின்படி, வேலையளிப்பவர்(Sponsor) ஒப்பந்தம் அல்லது தொழில் சட்டத்தை மீறுதல், முதலாளி அல்லது அவரது நிறுவனத்தின் துணை அதிகாரிகளின் தாக்குதல் அல்லது தொழிலாளியின் பாதுகாப்பு அல்லது ஆரோக்கியத்திற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் போன்ற குறிப்பிட்ட நிகழ்வுகளில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வேலையை விட்டு விலகவும், அதே சமயம் பணிக்கால நிறைவுக்கான ஊக்கத்தொகையைப்(End Of Service Bonus) பெறவும் அவருக்கு உரிமை உண்டு.

அதேபோல் சில குறிப்பிட்ட சூழல்களில் வேலைவாய்ப்பு ஒப்பந்தம் தொழிலாளர் சட்டத்தின் 49 மற்றும் 50-வது பிரிவுகளின்படி தானாகவே முடிவுக்கு வருகிறது என்றும் ஆணையம் விளக்கியுள்ளது. இதில் தொழிலாளியின் மரணம், வேலை செய்ய இயலாமைக்கான ஆதாரம், மருத்துவ விடுப்பு முழுவதையும் பயன்படுத்திய பிறகும் தொடரும் நோய், நிறுவனத்தை நிரந்தரமாக மூடுதல் அல்லது தொழிலாளிக்கு வேலையளிப்பவர் திவாலானதாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும் இறுதித் தீர்ப்பு ஆகியவை சூழ்நிலைகளில் சட்டத்தின் செயல்பாட்டின் மூலம் ஒப்பந்தம் முடிவடைகிறது..

Kuwait Worker | Labor Law | Kuwait Workers

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to

Tuesday, April 21, 2026

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது பொய் வழக்குகள் சுமத்தி நாடுகடத்திய அதிகாரிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது:

குவைத்தில் தொழிலாளர்களை மிரட்டி பணம் பறிப்பதை தொழிலாக கொண்டிருந்த அதிகாரிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையினை குற்றவியல் நீதிமன்றம் விதித்துள்ளது

Image : செய்தி பதிவுக்காக பதிவிறக்கம் செய்யப்பட்டது

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது பொய் வழக்குகள் சுமத்தி நாடுகடத்திய அதிகாரிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது:

குவைத்தில் தொழிலாளர்களை மிரட்டி பணம் பறிப்பதை தொழிலாக கொண்டிருந்த அதிகாரிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையினை குற்றவியல் நீதிமன்றம் விதித்துள்ளது. குவைத்தில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களை நாடு கடத்துவதாக மிரட்டி அவர்களிடம் இருந்து தொடர்சியாக பணம் பறித்து வந்த ஒரு காவல்துறை உயர் அதிகாரிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், 800 தினார் அபராதமும் விதிக்கப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது.

நாட்டின் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல் வஹாப் அல்-முவேலி தலைமையிலான அமர்வு இந்த அதிரடியான தீர்ப்பை நேற்றைய(20/04/26) தினம் வழங்கியது. தலைநகர மாகாணமான Al Asimah பகுதியிலுள்ள ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அதிகாரிக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டன. மேலும் இந்தத் தீர்ப்பில் அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

இவர் மீது தொடரப்பட்ட வழக்கில் முக்கியமான ஒன்று நாட்டில் வேலையின் நிமித்தமாக தங்கியிருந்த பல வெளிநாட்டினரை மிரட்டி பணம் பறிப்பதாகும், இதற்கு இணங்காத,பலரை பொய்க் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து நாடு கடத்துவது இவர் வேலையாக செய்து வந்தார் என்பதாகும். அதேநேரம் இவருடைய பெயர் விபரங்கள், பதவி உள்ளிட்டவை தொடர்பான கூடுத‌ல் தகவல்கள் எதுவும் வெளியாகியுள்ள செய்தியில் வெளியிடவில்லை.

Kuwait Worker | Kuwait Police | Kuwait Jails

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to

Thursday, April 9, 2026

குவைத் விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டது மற்றும் தொடங்கும் என்று பரவிய செய்திகளை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரி மறுத்துள்ளனர்

குவைத் விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டது மற்றும் தொடங்கும் என்று பரவிய செய்திகளை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரி மறுத்துள்ளனர்

Image : செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல்-ராஜ்ஹி 

குவைத் விமான நிலையம் செயல்பட தொடங்கியதாக வெளியான செய்தி ஆதாரமற்றவை

குவைத் சர்வதேச விமான நிலையம் விரைவில் மீண்டும் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும், இதற்கான பணிகள் முன்னேறி வருவதாக, குவைத் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்ததாக தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டதாக பல சமூக வலைதளங்களில் இன்று(09/04/26) மதியம் முதல் செய்திகள் தீயாக பரவின. இதையடுத்து குவைத்தின் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாள அப்துல்லா அல்-ராஜ்ஹி இந்த செய்தியை தற்போது முற்றிலுமாக மறுத்துள்ளார்.

மேலும், இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் 1:00 மணிக்கு ஜசீரா ஏர்வேஸ் விமானம் ஒன்று குவைத் சர்வதேச விமான நிலையத்தில் நேரடியாகத் தரையிறங்கியதாகவும் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தவிர, இன்று மாலையில் மற்றொரு குவைத் ஏர்வேஸ் விமானம் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் நேரடியாகத் தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், விமான நிலையம் எந்த நேரத்திலும் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்திருந்தன. இந்த தகவல்களையும் அதிகாரிகள் மறுத்துள்ளார்.

மேல் குறிப்பிட்ட செய்திகள் அனைத்தும் தவறானது என்று வலியுறுத்திய அல்-ராஜ்ஹி, இன்று இதுவரை எந்த அனுமதிகளும் வழங்கப்படவில்லை என்றும், பொதுமக்கள் அதிகாரப்பூர்வ மூலங்கள் மூலம் தகவல்களைச் சரிபார்த்து, நம்பகமற்ற இணையச் செய்திகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பிராந்தியத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக, குவைத் தனது வான்வெளியை மூடி, விமான நிலையச் செயல்பாடுகளை கடந்த பிப்ரவரி-28,2026 முதல் இடைநிறுத்தியது குறி்ப்பிடத்தக்கது.

Indian Worker | Kuwait Airport | Airport Reopen

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to

Sunday, December 14, 2025

தமிழக வெற்றிக் கழகம் பஹ்ரைன் பிரிவு சார்பி்ல் நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாமை நடத்தியுள்ளது

பஹ்ரைனின் தேசிய தினத்தை முன்னிட்டு தவெக சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றன

Image : முகாம் நடைபெற்ற காட்சிகள்

தமிழக வெற்றிக் கழகம் பஹ்ரைன் பிரிவு சார்பி்ல் நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாமை நடத்தியுள்ளது

பஹ்ரைனின் 54-வது தேசிய தினத்தை முன்னிட்டு சல்மானிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விஜய் மக்கள் இயக்கமும், தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்தானம் செய்தார்கள்.

Image : முகாம் நடைபெற்ற காட்சிகள்

அவர்கள் அனைவருக்கும் பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம் என்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர். பஹ்ரைனில் டிசம்பர்-16 மற்றும் டிசம்பர்-17 ஆகிய இரு தினங்கள் தேசியதின கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

Image : முகாம் நடைபெற்ற காட்சிகள்

Indian Worker | Bahrain Tvk | Bahrain Vijay

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to

Thursday, December 11, 2025

குவைத்தில் மனைவியை சுத்தியலால் அடித்து கொன்ற வழக்கில் இந்தியருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது

குவைத்தில் தனது மனைவியை திட்டமிட்டு உயிர் போகும் வரையில் சுத்தியலால் அடித்து கொடூரமாக கொன்ற வழக்கில் இந்தியருக்கு இன்று வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது

Image : குவைத் நீதிமன்ற வளாகம்

குவைத்தில் மனைவியை சுத்தியலால் அடித்து கொன்ற வழக்கில் இந்தியருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது

குவைத்தில் தனது மனைவியைக் கொலை செய்ததற்காக இந்தியருக்கு இன்று(11/12/25) வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நயீப் அல்-டஹூம் தலைமையிலான அமர்வு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கொலையாளிக்கும் அவரது மனைவிக்கும் இடையே பணப்பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறில் ஈடுபட்டதன் விளைவாக ஏற்பட்ட விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டுச் செலவுகளுக்கு மற்றும் உணவை வாங்கவும் பணம் சரியாக வழங்காத காரணத்தால், செலவை ஆளுக்கு பாதி என்ற அளவில் சரிசமமாக செலவு செய்யலாம் என்று உயிரிழந்த மனைவி கூறியதால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கணவர் சமரசம் ஆனது மாதிரி நடித்து, சால்மி பாலைவன பகுதிக்கு அழைத்துச் சென்று சுத்தியலால் அடித்து மனைவியை கொலை செய்தார்.

மேலு‌ம் உயிர் போகும் வரையில் குற்றவாளி உயிரிழந்த தன்னுடைய மனைவியை தொடர்ந்து சுத்தியலால் தாக்கியதாகவும் குற்றவாளி காவல்துறை விசாரணையில் ஒப்புக்கொண்டிருந்தார். எனவே இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொடூரமான கொலை என்பதை உறுதி செய்த நீதிபதி கணவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். உயிரிழந்த மனைவி மற்றும் குற்றவாளியான கணவன் இருவரும் இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை.

Indian Worker | Killing Wife | Kuwait Court

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to

Tuesday, December 9, 2025

பிரபல லுலு குழும தலைவர் யூசுப் அலி அவர்கள் இலங்கை மக்களுக்காக 1,00,000 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளார்

பேரிடர் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கையின் புனரமைப்பு பணிகளுக்கான பிரபல லுலு குழும தலைவர் 1,00,000 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ள நெகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது

Image : யூசுப் அலி காசோலையினை வழங்கிய காட்சி

பிரபல லுலு குழும தலைவர் யூசுப் அலி அவர்கள் இலங்கை மக்களுக்காக 1,00,000 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளார்

இலங்கையின் வெள்ள நிவாரண முயற்சிகளுக்கு 1,00,000 அமெரிக்க டாலர்களை(இலங்கை ரூபாய் மதிப்பில் 3 கோடி ரூபாய்) வழங்கியதற்காக லுலு குழும நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான யூசுப் அலி அவர்களுக்கு அமீரகதற்கான இலங்கை தூதரகம் நன்றியைத் தெரிவித்துள்ளது .

அவருடைய பங்களிப்பு இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும், இந்தப் பங்களிப்பு லுலு குழுமத்தின் கருணை மற்றும் மனிதாபிமான உதவிகளை தொடந்து வழங்கும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக நிற்கிறது என்றும் வெளியிட்டுள்ள செய்தியில் தூதரகம் தெரிவித்துள்ளது.

Srilanka Workers | Yusufali Lulu | Srilanka Flood

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to

குவைத்தில் மண்ணில் புதைந்து இரண்டு தொழிலாளர்கள் இன்று சற்றுமுன் பரிதாபமாக உயிரிழந்தனர்

குவைத்தில் இன்று காலையில் மண்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து நடந்த விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image : மீட்பு நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள்

குவைத்தில் மண்ணில் புதைந்து இரண்டு தொழிலாளர்கள் இன்று சற்றுமுன் பரிதாபமாக உயிரிழந்தனர்

குவைத்தின் அல்-ராய் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த ஒரு கட்டிடத்திற்குள் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

Image: மீட்பு நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள்

இன்று(09/12/25) செவ்வாய்க்கிழமை காலையில் நடந்த இந்த துயரமான சம்பவத்தை தொடர்ந்து விரைந்து வந்த ஷுவாய்க் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்த துயரமான சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களுடைய உடல்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன.

மேலும் கட்டிடத்தின் கீழ் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தலைமையில் தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.உயிரிழந்த தொழிலாளர்கள் எந்த நாட்டவர்கள் என்ற கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை.

Indian Workers | Kuwait Accident | Gulf Worker

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to

Wednesday, December 3, 2025

குவைத்திலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு சென்ற இந்திய இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்

குவைத்திலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு சென்ற இந்திய இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த இளைஞர் பிருத்விராஜ்

குவைத்திலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு சென்ற இந்திய இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்

குவைத்தில் வேலை செய்து வந்த பிருத்விராஜ்(27) என்ற இந்திய இளைஞர் சொந்த ஊரில் நேற்றிரவு நடந்த விபத்தில் மரணமடைந்தார். இவர் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள முண்டூரைச் சேர்ந்தவர் ஆவார். பாலக்காடு கண்ணாடி அடுத்த லுலு மால் அருகே வைத்து நேற்று(02/12/25) செவ்வாய்க்கிழமை இரவு 11:00 மணி அளவில் நடந்த வாகன விபத்தில் சிக்கி கொண்டார்.

குவைத்தில் கடந்த பல வருடங்களாக வேலை செய்து வந்த பிருத்விராஜ், துபாய்க்கு வேலை மாற்றம் கிடைத்ததை தொடர்ந்து, விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்றிருந்த நிலையில் விபத்தில் சிக்கி கொண்டார். இவருடைய தந்தை ஹரிதாசன் முத்து குவைத்திலுள்ள நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றார். மகனின் மரண செய்தி அறிந்த அவர் இன்று(03/12/25) புதன்கிழமை இரவு ஊருக்கு திரும்புகிறார்.

Indian Worker | Road Accident | Kuwait Worker

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to

Monday, November 17, 2025

சவுதியில் இன்று அதிகாலையில் பேருந்து விபத்தில் சிக்கியதில் 42 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்

சவுதியில் பேருந்தும்-பெட்ரோல் டேங்கர் லாரியும் மோதி தீப்பிடித்த துயரமான விபத்தில் 42 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்த செய்தி வெளியாகியுள்ளது

Image : பேருந்து தீ பிடித்து எரிந்த காட்சிகள்

சவுதியில் இன்று அதிகாலையில் பேருந்து விபத்தில் சிக்கியதில் 42 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்

இந்தியாவின் ஐதராபாத்திலிருந்து மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளின் பேருந்தும் பெட்ரோல் ஏற்றி சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதி இந்த துயரமான விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து மக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. யாத்திரிகர்கள் மக்காவில் தங்கள் புனித கடன்களை முடித்துவிட்டு மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்தனர். விபத்து நடந்தபோது நள்ளிரவு என்பதால் அனைத்து பயணிகளும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர்.

இந்திய நேரப்படி இன்று(17/11/25) அதிகாலையில் சுமார் 1 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டது. பேருந்தில் 43 இந்தியர்கள் இருந்தனர். இதில் முகமது சுஹப்த்(26) என்ற இளைஞர் மட்டும் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். மீதியுள்ள 42 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இர‌ண்டு வாகனங்களும் மோதிக்கொண்ட அடுத்த நொடியில் பெரிய வெடிகுண்டு வெடித்து சிதறியது போன்று எழுந்த தீ பிழம்பில் சிக்கிய அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும், எங்களால் எந்த மீட்பு நடவடிக்கையும் மேற்கோள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கண்ணிர் மல்க தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கியவர்களில் 20 பெண்கள்,11 குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் 4 பேர், மீதியுள்ளவர்கள் இவர்களுடைய குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் ஆவார்கள். உயிரிழந்தவர்கள் அனைவரும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்ற கூடுதல் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. 43 பேருமே ஒரு ஏஜென்சி வழியாக இந்தியாவில் இருந்து புனிதப்பயணம் மேற்கொள்ள வந்தவர்கள் ஆவார்கள். விபத்துக்கான காரணம் குறித்த கூடுதல் விபரங்கள் வரும் மணிநேரங்களில் வெளியாகும்.

இதற்கிடையே உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக்க தேவையான வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடல்கள் மதினாவில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை, இவர்களை அழைத்து வந்த ஏஜென்சி மற்றும் சவுதி இந்திய தூதரகம் ஆகியவை ஒருங்கிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.

மதீனா பேருந்து விபத்தை தொடர்ந்து குடும்பத்தினரும் உதவ ஜித்தாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கட்டுபாட்டு அறையினை திறந்துள்ளது. 8002440003 (கட்டணமில்லா),0122614093,0126614276 0556122301(WhatsApp).தெலுங்கானா அரசும் கட்டண அறையினை திறந்துள்ளது +91 7997959754,+91 9912919545.

Indian Visitors | Saudi Accident | Today Accident

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to

Saturday, November 15, 2025

குவைத்தில் 4 இந்தியர்கள் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய கும்பல் கைதாகியுள்ளனர்

குவைத்தில் உரிமம் இல்லாமல் மருத்துவம் செய்தது மற்றும் அரசு மானிய விலையில் கிடைக்கும் மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டில் 4 இந்தியர்கள் மற்றும் 4 வங்காளதேச நாட்டவர்கள் உட்பட 8 பேர் கைதாகியுள்ளனர்

Image : அதிகாரிகளிடம் சிக்கிய கும்பல்

குவைத்தில் 4 இந்தியர்கள் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய கும்பல் கைதாகியுள்ளனர்

குவைத்தில் உரிமம் இல்லாமல் மருத்துவம் செய்தது மற்றும் அரசு மானிய விலையில் கிடைக்கும் மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டில் 4 இந்தியர்கள் மற்றும் 4 வங்காளதேச நாட்டவர்கள் உட்பட 8 பேர் கைதாகியுள்ளனர். 4 வங்காளதேச நாட்டவரில் ஒருவர் சுகாதாரத்துறை ஊழியர் ஆவார். Farwaniya பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் உரிமம் இல்லாமல் மருத்துவம் செய்தது மற்றும் மருந்துகளை விற்பனை செய்வது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை இரகசிய பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்து இந்த இடத்தை கைப்பற்ற முடிந்தது என்றும், இங்கிருந்து இந்திய நாட்டவரான நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் எனவும், அவர்களில் ஒருவர் உரிமம் இல்லாமல் மருத்துவம் செய்து வருவது கண்டறியப்பட்டது, அதே நேரத்தில் மற்ற மூவரும் சிகிச்சை பெறுவதற்காக உரிமம் பெறாத மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று வருவதும் கண்டறியப்பட்டது என்றும் வெளியிட்டுள்ள செய்தியில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேநேரம் பணத்திற்காக அரசாங்க மருந்துகளை சட்டவிரோதமாக எடுத்து வந்து விற்பனை செய்த 3 பேர் அடங்கிய வங்காளதேச நாட்டவரான மற்றொரு கும்பலையும் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணையில் அரசு சுகாதார மையங்களில் ஒன்றில் பணிபுரியும் வங்காளதேச நாட்டவர் ஒருவர் மருத்துவமனையில் இருந்து மருந்துகளைத் திருடி விற்பனை செய்வதற்காக தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததையும் அதிகாரிகள் கண்டறிந்து அவரையும் கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட இந்தியா மற்றும் வங்காளதேச நாட்டினரின் எண்ணிக்கை 8 ஆகியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகளை சுகாதார அமைச்சகத்தின் மருந்து கட்டுப்பாட்டுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. நாட்டில் நடைபெறும் சட்டவிரோத மருத்துவ சேவைகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு இயக்குநரக விவகாரத் துறை மற்றும் குற்றவியல் பாதுகாப்பு விவகாரத் துறை இடையேயான கூட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் வெளியிட்டுள்ள செய்தியில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Indian Workers | Kuwait Police | Fake Hospital

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to

Saturday, September 20, 2025

அதிகாலை 2.30 மணிக்குப் பிறகு ஒரு இளம் பெண் துபாய் சாலையில் தனியாக நடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு பலரும் பலவிதமான கருத்து தெரிவித்துள்ளனர்.

நேரம் அதிகாலை 02:37...இந்தியா மாதிரி கிடையாது இந்த ஊர்,துபாய் வாழ் இந்தியப் பெண் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது

Image: வீடியோ வெளியிட்ட இந்திய பெண்

அதிகாலை 2.30 மணிக்குப் பிறகு ஒரு இளம் பெண் துபாய் சாலையில் தனியாக நடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு பலரும் பலவிதமான கருத்து தெரிவித்துள்ளனர்.

பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வரும் இந்த காலகட்டத்தில், ஒரு பெண் இரவில் பயமின்றி சாலையில் தனியாக நடக்க முடியுமா...? இந்திய சூழலில் இது எளிதான காரியம் அல்ல. ஆனால் துபாய் உலகின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு இளம் இந்திய பெண்ணின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

அதிகாலை 2.30 மணிக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த வீடியோ, துபாயில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விவாதத்தைத் தொடங்கியுள்ளது. அதிகாலையில் துபாய் நகரத்தின் வழியாக ஒரு இந்தியப் பெண் தனியாக நடந்து செல்லும் வீடியோ இதுவாகும். துபாய் உலகின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகும் என்பதற்கு சான்றாக இந்த வீடியோவை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். இந்த வைரல் வீடியோவில் உள்ள பெண்ணின் த்ரிஷா ராஜ் என்பதாகும்.

அந்த வீடியோவில், த்ரிஷா அதிகாலை 2:30 மணிக்கு துபாய் தெருக்களில் தனியாக நடப்பது எப்படி பாதுகாப்பாக உணர்ந்தேன் என்று பேசுகிறார். வீடியோவில் இப்போது அதிகாலை 2.37 மணி என்றும், சாலையில் தனியாக நடந்து வருவதாகவும் கூறுகிறார். உலகிலேயே துபாயில் மட்டுமே இது சாத்தியம் என்றும், துபாய்க்கு வாருங்கள் என்றும் அந்தப் பெண் வீடியோவில் கூறுகிறார். இங்கு பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் த்ரிஷா கூறுகிறார்.

துபாயில் பெண்களின் பாதுகாப்பை தனது சொந்த நாடான இந்தியாவுடன் ஒப்பிட்டு விளக்குகிறார் த்ரிஷா ராஜ். இந்தியாவில், இதுபோன்ற நேரங்களில் தனியாக வெளியே செல்வது ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, ஆண்களின் துணை பொதுவாக தேடவேண்டியது அவசியம். ஆனால் துபாய் இதிலிருந்து வித்தியாசமான சூழ்நிலையைக் காட்டுகிறது என்று அவர் கூறினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் விரைவாக வைரலானது. உலகில் வெவ்வேறு நகரங்களில் உள்ள பாதுகாப்பு குறித்து அந்தந்த நாடுகளில் வசிக்கின்ற பலரும் தங்கள் அனுபவங்களைப் பற்றி பலர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே துபாயின் பாதுகாப்பைப் பாராட்டி பலரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

Indian Girl | Dubai Road | Girl Safety

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to

Thursday, September 11, 2025

குவைத்தில் 7 குற்றவாளிகளுக்கு இன்று அதிகாலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டன

குவைத்தின் மத்திய சிறை வளாகத்தில் இன்று காலையில் அரசு வழக்கறிஞர் மற்றும் சம்மந்தப்பட்ட மற்ற துறைகளின் அதிகாரிகள் முன்னிலையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஏழு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்

Image: குவைத் மத்திய சிறை

குவைத்தில் 7 குற்றவாளிகளுக்கு இன்று அதிகாலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டன

குவைத்தின் மத்திய சிறை வளாகத்தில் இன்று காலையில்,அரசு வழக்கறிஞர் மற்றும் சம்மந்தப்பட்ட மற்ற துறையின் அதிகாரிகள் முன்னிலையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஏழு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர். இதில் மூன்று பேர் குவைத் நாட்டினர், இரண்டு பேர் ஈரானியர்கள் மற்றும் இரண்டு பேர் வங்கதேச நாட்டவர் ஆவார்கள். இவர்களில் மூன்று குவைத் நாட்டினர் மற்றும் இரண்டு வங்கதேச நாட்டவர்கள் கொலைக் குற்றவாளிகள் என்றும், இரண்டு ஈரானியர்கள் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் என்றும் குவைத் குற்றவியல் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.

கடந்த ஞாயற்றுக்கிழமை எட்டு பேருக்கு இன்று(11/09/25) வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருப்பதாக நமது தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இருப்பினும், குவைத் நாட்டைச் சேர்ந்த ஃபஹத் முகமது என்ற குற்றவாளிக்கு இவரால் கொலை செய்யபட்ட நபரின் உறவினர்கள் மன்னிப்பு வழங்க முடிவு செய்ததை அடுத்து, இன்று காலையில் கடைசி நிமிடத்தில் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேசமயம் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களுக்கு வழங்க தேவையான இரண்டு மில்லியன் குவைத் தினார்கள்(20 லட்சம் தினார்கள்) இரத்தப் பணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் சேகரிக்கத் தவறியதைத் தொடர்ந்து அப்துல் அஜீஸ் அல்-அஸ்மி என்ற குவைத் நாட்டவரின் மரண தண்டனையும் இன்று நிறைவேற்றப்பட்டது. குவைத் சட்டம் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின்படி மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

Today Morning | Executed Kuwait | Central Jail

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to

Tuesday, July 22, 2025

விசா மோசடிக்கு எதிராக குவைத் கடுமையான நடவடிக்கையை தொடங்கியது

குவைத்தின் பிரபல தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் சட்டவிரோதமான விசா விற்பனை ஆட்கடத்தல் தொடர்பான போலி முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது

Image : ஷேக் ஃபஹத் யூசப்

விசா மோசடிக்கு எதிராக குவைத் கடுமையான நடவடிக்கையை தொடங்கியது

குவைத்தின் பிரபல தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் சட்டவிரோதமான விசா விற்பனை மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான செயல்களுக்கு எதிராக உள்துறை அமைச்சகம் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருவதாக அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி இன்று செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் யூசப்பின் உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, உள்துறை அமைச்சகத்தில் உள்ள குடியிருப்பு விவகார புலனாய்வுத்துறை அதிகாரிகள் சிறப்புத் திட்டங்களைத் தயாரித்து வருகிறது. தற்போது, விசா வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களும், இதற்காக போலி உரிமங்களை கைவசம் வைத்திருப்பவர்களும் புலனாய்வுத்துறையின் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் கண்டுபிடிக்கப்பட்டு சட்டப்பூர்வமாகக் கையாளப்படுவார்கள் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், யாரும் அநியாயமாக தண்டிக்கப்பட மாட்டார்கள் என்றும், இந்த குற்றத்துக்கு பொறுப்பானவர்கள் யாரும் சட்டத்திலிருந்து தப்ப முடியாது என்றும் வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.

விசா வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஸ்பான்சர்கள் மற்றும் முகவர்களைக் கண்டுபிடிக்க அமைச்சகம் இனிமுதல் ஒரு புதிய முறையைப் பின்பற்ற உள்ளது. அதன்படி குடியிருப்புச் சட்டத்தை மீறி வேலை செய்பவர்கள் பிடிபட்டால், விசா வழங்கிய நபர்களின் தகவல்கள் பிடிபட்ட அவர்களிடமிருந்து சேகரிக்கப்படும், பின்னர் முகவர்கள் கண்காணிக்கப்படுவார்கள், ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள். இதற்கிடையில், கடந்த ஆண்டு மனித கடத்தல் தொடர்பாக இயற்றப்பட்ட சட்டம் கடுமையான தண்டனைகளை வழங்குகிறது.

சட்டவிரோதமான விசா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10,000 தினார் வரை அபராதமும் விதிக்க சட்டம் வகை செய்கிறது. கடத்தப்பட்ட நபர்கள் மற்றும் விசாக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அபராதம் அதிகரிக்கும். குற்றவாளி அரசு ஊழியராக இருந்தால் தண்டனை இரட்டிப்பாகும் என்றும் சட்டம் கூறுகிறது.

Worker Visa | Indian Workers | Visit Visa

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to

குவைத்தின் மக்கள் தொகை 5 மில்லியனைத் தாண்டியுள்ளதாக சிவில் தகவலுக்கான பொது ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

குவைத்தின் மொத்த மக்கள் தொகை 5 மில்லியனை தாண்டியுள்ள நிலையில் இந்திய சமூகத்தினர் தொடந்து முதல் இடத்தில் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன

Image : குவைத் இந்திய தூதரக வளாகம்

குவைத்தின் மக்கள் தொகை 5 மில்லியனைத் தாண்டியுள்ளதாக சிவில் தகவலுக்கான பொது ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

குவைத்தின் மக்கள் தொகை 5 மில்லியனைத் தாண்டியுள்ளதாக சிவில் தகவலுக்கான பொது ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் முதல் பாதியின் இறுதியில் மக்கள் தொகை 5.098 மில்லியனை எட்டியுள்ளது. அதிகாரசபை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர், அதாவது 1.55 மில்லியன் பேர் குடிமக்கள் ஆவார்கள். அதேபோல் நாட்டில் 3.547 மில்லியன் வெளிநாட்டினரும் வேலையின் நிமித்தமாக வசித்து வருகின்றனர்.

இவர்களில் 29 சதவீதம் பேர்,அதாவது 1.036 மில்லியன் பேர் இந்தியர்கள். வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியர்களே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதற்க்கு அடுத்த படியாக 6,61,318 பேருடன் எகிப்தியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் 15 வயதுக்குட்பட்டவர்கள், 80 சதவீதம் பேர் 15 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் மட்டுமே என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மக்கள் தொகையில் 61 சதவீதம் பேர் ஆண்கள்,மொத்தம் 3.09 மில்லியன் ஆண்கள் மற்றும் 2 மில்லியன் பெண்கள். நாட்டின் தொழிலாளர் துறையில் மொத்தம் 2.283 மில்லியன் மக்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 5,19,989 பேர் அரசுத் துறையிலும், 1.763 மில்லியன் பேர் தனியார் துறையிலும் பணிபுரிகின்றனர். அரசுத்துறையில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுத் தொழிலாளர்களாக எகிப்து நாட்டவர்கள் 7.2 சதவீதம் பேருடன் முதலிடத்திலும், இந்திய தொழிலாளர்கள் 4.51 சதவீதம் பேருடன் இரண்டாது இடத்தில் உள்ளனர். அரசுத் துறையில் உள்ள மொத்த தொழிலாளர்களில் 75.57 சதவீதம் பேரும் குடிமக்கள் ஆவார்கள். தனியார் துறையில் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களாக 31.2 சதவீதம் பேருடன் இந்தியர்கள் முதல் இடத்திலும், எகிப்தியர்கள் 24.8 சதவீதம் பேருடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

அதேபோல் வீட்டு வேலைத்துறையில் அதிக எண்ணிக்கையில் 10 தேசிய இனத்தவர்கள் உள்ளனர். நாட்டில் உள்ள மொத்த 8,22,794 வீட்டுப்பணியாளர்களில்,58.2 சதவீதம் பேர் பெண்கள். இந்தத் துறையில் அதிக எண்ணிக்கையிலான இந்தியத் தொழிலாளர்கள் 41.3 சதவீதம் பேர் வேலை செய்கின்றனர். அடுத்ததாக 17.9 சதவீத பிலிப்பைன்ஸ் நாட்டவர்களும் 17.6 சதவீத இலங்கை நாட்டவர்களும் பணிபுரிவதாகவும் அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகிறது.

Kuwait Population | Gulf Workers | Indian People

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to

Monday, July 21, 2025

குவைத்தில் சட்டவிரோதமாக விசா விற்பனை செய்த இந்தியர்கள் உட்பட்ட கும்பல் சிக்கியுள்ளது

குவைத்தில் 350 தினார் முதல் 1200 தினார் வரை பணம் வசூலித்து விசா விற்பனை மற்றும் ஆட்கடத்தல்களை செய்த இந்தியர்கள் உட்பட்ட கும்பல் கைது

Image : பிடிபட்ட ஆள்கடத்தல் கும்பல்

குவைத்தில் சட்டவிரோதமாக விசா விற்பனை செய்த இந்தியர்கள் உட்பட்ட கும்பல் சிக்கியுள்ளது

குவைத்தில் இந்தியர்கள் உட்பட்ட விசா விற்பனை மற்றும் சட்டவிரோதமாக ஆட்கடத்தல்களை செய்த கும்பல் கைது செய்யப்பட்டனர். இந்தக் கும்பலை குவைத்தின் குடிவரவுத்துறையின் குற்றப் புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது. 4 நிறுவனங்களைச் சொந்தமாகக் கொண்டவரும் மற்றும் சுமார் 25 நிறுவனங்களில் கையெழுத்திடும் அதிகாரம் கொண்ட ஒரு குடிமகனின் பெய‌ரில் விசா விற்பனை மற்றும் கடத்தலை இவர்கள் நடத்தி வந்தனர்.

மேலும் வெளியாகியுள்ள செய்தியில் விசாரணையின் போது நாட்டிற்கு வெளியே இருந்தும் மற்றும் நாட்டிற்க்கு உள்ளேயும் தங்கியிருந்த பல தொழிலாளர்கள் இவர்களுடைய நிறுவனத்தின் கீழ் அவர்களின் விசாக்களை சட்டவிரோதமாக மாற்றி உள்ளதும் கண்டறியப்பட்டது. இந்த கும்பல் வெளிநாட்டிலிருந்து குவைத்திற்கு தொழிலாளர்களை அழைத்து வந்து 350 தினார் முதல் 1200 தினார் வரை பணம் வசூலித்து குவைத்திலுள்ள தங்களுடைய நிறுவனத்திற்கு அவர்களின் விசாக்களை மாற்றினர். இந்த சட்டவிரோதமாக குற்றத்தில் ஒரு குவைத்தி, இடைத்தரகர்களாக இரண்டு இந்தியர்கள், ஒரு சிரியரும் செயல்பட்டனர். குற்ற்றவாளின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Worker Visa | Indian Workers | Visit Visa

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to

Sunday, July 20, 2025

குவைத் விமான நிலையத்தில் 4 வ‌ங்கதேச பயணிகள் 200 கிலோ மெல்லும் புகையிலையுடன் பிடிபட்டனர்

குவைத் விமான நிலைய‌ம் வழியாக பெரும் அளவிலான புகையிலை பொருட்களை கடத்த முயன்ற 4 வங்காளதேச பயணிகள் நேற்றும் இன்றுமாக பிடிபட்டதாக சுங்கத்துறை இன்று மதியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது

Image : பிடிபட்ட புகையிலை பொருட்கள்

குவைத் விமான நிலையத்தில் 4 வ‌ங்கதேச பயணிகள் 200 கிலோ மெல்லும் புகையிலையுடன் பிடிபட்டனர்

குவைத் விமான நிலையத்தில் போதைப்பொருளை தடுப்பதற்கான சோதனைகளை தொடந்து நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்ட பொருட்களின் கடத்தலைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, விமான நிலையத்தின் முனையம் 4 (T4) யின் வழியாக நாட்டிற்குள் நுழைய முயற்சி செய்த பயணிகளிடம் இருந்து அதிக அளவு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள்(மெல்லும் புகையிலை) பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

இரண்டு தனிதனியான சம்பவங்களில், மெல்லும் புகையிலையை நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக நான்கு வங்காளதேச பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். நேற்று ஒரு பயணியிடமிருந்து 41 கிலோகிராம் மெல்லும் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. அடுத்த நாளான இன்று மற்ற மூன்று வங்காளதேச பயணிகளிடமிருந்து 159 கிலோகிராம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம், பறிமுதல் செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த அளவு 200 கிலோகிராமை எட்டியுள்ளது.

இதை தொடர்ந்து விமான நிலைய சுங்கத்துறை உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து,பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான அறிக்கைகளை தயார் செய்து, கைது செய்யப்பட்ட நபர்களை சம்பந்தப்பட்ட குற்றப்பிரிவு அதிகாரியிடம் ஒப்படைத்தது. இந்த வழக்கில் குவைத்திற்குள் இந்த புகையிலை பொருட்களை கடத்தி வருவதற்கு உதவி மற்றும் இவற்றை விமான நிலையத்தில் இருந்து பெற்று செல்ல காத்திருந்த மற்ற நபர்களைக் கண்டறிய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து பிடிபட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Kuwait Airport | Customs Checking | Tobacco Seizure

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to

குவைத் விமான நிலையம் வழியாக பயணிக்கும் உங்கள் கையில் 3000 தினார் அல்லது அதற்கு மேல் பணம் உள்ளதா...?

குவைத் விமான நிலையம் வழியாக பயணிக்கும் போது பணம் தங்கம் விலையுயர்ந்த கடிகாரங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் போன்றவை கைவசம் இருந்தால் சுங்க அறிவிப்பு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்

Image : குவைத் விமான நிலைய சோதனை பகுதி

குவைத் விமான நிலையம் வழியாக பயணிக்கும் உங்கள் கையில் 3000 தினார் அல்லது அதற்கு மேல் பணம் உள்ளதா...??

குவைத் சர்வதேச விமான நிலையம் வழியாக 3,000 தினார் அல்லது அதற்கு மேல் பணத்தை எடுத்துச் செல்லும் பயணிகளும், அதேபோல் தங்கம்(அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக), விலையுயர்ந்த கடிகாரங்கள், மின்னணு சாதனங்கள் போன்றவை கைவசம் இருந்தாலும் அவற்றை சுங்க அறிவிப்பு படிவத்தை(self declaration form) பூர்த்தி செய்வது கட்டாயம் என்று சுங்கத்துறை பொது நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேபோல் கை பையில் விலையுயர்ந்த சாமான்களை எடுத்துச் செல்லும் போது அந்த பொருட்களுக்கான விலைப்பட்டியல் மற்றும் உரிமை ஆவணங்களையும் சம்மந்தப்பட்ட பயணி கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. சுங்கத்துறைக்கு தெரிவிக்காமல் மேற்குறிப்பிட்ட பொருட்களை கொண்டு பயணம் செய்வது சட்ட மீறலாகக் கருதப்படும். இதுபோன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்படலாம் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

நாட்டிற்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் பயணிகள் சுங்கப் படிவத்தை நிரப்ப வேண்டும் என்றும், இது பாதுகாப்பு மற்றும் உலகளாவிய தரநிலைகளை உறுதி செய்வதற்கான ஒரு நடவடிக்கை என்றும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் தகவலுக்கு, சுங்கத்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது விமான நிலைய அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேல் குறிப்பிட்ட நடைமுறை குவைத் கடல் எல்லை வழியாகவோ அல்லது சாலை வழியாகவோ நாட்டின் எல்லை தாண்டி செல்லும் போதும் பொருந்தும் என்பதும் குறிப்பிடதக்கது.

Kuwait Airport | Customs Checking | Self Declaration

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to