குவைத்தில் உரிமம் இல்லாமல் மருத்துவம் செய்தது மற்றும் அரசு மானிய விலையில் கிடைக்கும் மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டில் 4 இந்தியர்கள் மற்றும் 4 வங்காளதேச நாட்டவர்கள் உட்பட 8 பேர் கைதாகியுள்ளனர்
Image : அதிகாரிகளிடம் சிக்கிய கும்பல்
குவைத்தில் 4 இந்தியர்கள் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய கும்பல் கைதாகியுள்ளனர்
குவைத்தில் உரிமம் இல்லாமல் மருத்துவம் செய்தது மற்றும் அரசு மானிய விலையில் கிடைக்கும் மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டில் 4 இந்தியர்கள் மற்றும் 4 வங்காளதேச நாட்டவர்கள் உட்பட 8 பேர் கைதாகியுள்ளனர். 4 வங்காளதேச நாட்டவரில் ஒருவர் சுகாதாரத்துறை ஊழியர் ஆவார். Farwaniya பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் உரிமம் இல்லாமல் மருத்துவம் செய்தது மற்றும் மருந்துகளை விற்பனை செய்வது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை இரகசிய பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்து இந்த இடத்தை கைப்பற்ற முடிந்தது என்றும், இங்கிருந்து இந்திய நாட்டவரான நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் எனவும், அவர்களில் ஒருவர் உரிமம் இல்லாமல் மருத்துவம் செய்து வருவது கண்டறியப்பட்டது, அதே நேரத்தில் மற்ற மூவரும் சிகிச்சை பெறுவதற்காக உரிமம் பெறாத மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று வருவதும் கண்டறியப்பட்டது என்றும் வெளியிட்டுள்ள செய்தியில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேநேரம் பணத்திற்காக அரசாங்க மருந்துகளை சட்டவிரோதமாக எடுத்து வந்து விற்பனை செய்த 3 பேர் அடங்கிய வங்காளதேச நாட்டவரான மற்றொரு கும்பலையும் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணையில் அரசு சுகாதார மையங்களில் ஒன்றில் பணிபுரியும் வங்காளதேச நாட்டவர் ஒருவர் மருத்துவமனையில் இருந்து மருந்துகளைத் திருடி விற்பனை செய்வதற்காக தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததையும் அதிகாரிகள் கண்டறிந்து அவரையும் கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட இந்தியா மற்றும் வங்காளதேச நாட்டினரின் எண்ணிக்கை 8 ஆகியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகளை சுகாதார அமைச்சகத்தின் மருந்து கட்டுப்பாட்டுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. நாட்டில் நடைபெறும் சட்டவிரோத மருத்துவ சேவைகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு இயக்குநரக விவகாரத் துறை மற்றும் குற்றவியல் பாதுகாப்பு விவகாரத் துறை இடையேயான கூட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் வெளியிட்டுள்ள செய்தியில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Indian Workers | Kuwait Police | Fake Hospital

