சவுதியில் பேருந்தும்-பெட்ரோல் டேங்கர் லாரியும் மோதி தீப்பிடித்த துயரமான விபத்தில் 42 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்த செய்தி வெளியாகியுள்ளது
Image : பேருந்து தீ பிடித்து எரிந்த காட்சிகள்
சவுதியில் இன்று அதிகாலையில் பேருந்து விபத்தில் சிக்கியதில் 42 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்
இந்தியாவின் ஐதராபாத்திலிருந்து மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளின் பேருந்தும் பெட்ரோல் ஏற்றி சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதி இந்த துயரமான விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து மக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. யாத்திரிகர்கள் மக்காவில் தங்கள் புனித கடன்களை முடித்துவிட்டு மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்தனர். விபத்து நடந்தபோது நள்ளிரவு என்பதால் அனைத்து பயணிகளும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர்.
இந்திய நேரப்படி இன்று(17/11/25) அதிகாலையில் சுமார் 1 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டது. பேருந்தில் 43 இந்தியர்கள் இருந்தனர். இதில் முகமது சுஹப்த்(26) என்ற இளைஞர் மட்டும் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். மீதியுள்ள 42 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு வாகனங்களும் மோதிக்கொண்ட அடுத்த நொடியில் பெரிய வெடிகுண்டு வெடித்து சிதறியது போன்று எழுந்த தீ பிழம்பில் சிக்கிய அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும், எங்களால் எந்த மீட்பு நடவடிக்கையும் மேற்கோள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கண்ணிர் மல்க தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கியவர்களில் 20 பெண்கள்,11 குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் 4 பேர், மீதியுள்ளவர்கள் இவர்களுடைய குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் ஆவார்கள். உயிரிழந்தவர்கள் அனைவரும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்ற கூடுதல் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. 43 பேருமே ஒரு ஏஜென்சி வழியாக இந்தியாவில் இருந்து புனிதப்பயணம் மேற்கொள்ள வந்தவர்கள் ஆவார்கள். விபத்துக்கான காரணம் குறித்த கூடுதல் விபரங்கள் வரும் மணிநேரங்களில் வெளியாகும்.
இதற்கிடையே உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக்க தேவையான வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடல்கள் மதினாவில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை, இவர்களை அழைத்து வந்த ஏஜென்சி மற்றும் சவுதி இந்திய தூதரகம் ஆகியவை ஒருங்கிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.
மதீனா பேருந்து விபத்தை தொடர்ந்து குடும்பத்தினரும் உதவ ஜித்தாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கட்டுபாட்டு அறையினை திறந்துள்ளது. 8002440003 (கட்டணமில்லா),0122614093,0126614276 0556122301(WhatsApp).தெலுங்கானா அரசும் கட்டண அறையினை திறந்துள்ளது +91 7997959754,+91 9912919545.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK மீது CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL குழுவில் இணையுங்கள்
Indian Visitors | Saudi Accident | Today Accident


