குவைத்தில் 2 தினாருக்காக கொடூரமாக தொழிலாளி மீது வண்டியை ஏற்றி கொலை செய்த வழக்கில் குடிமகனுக்கு 15 ஆண்டுகள் சிறை என்ற தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது
Image : செய்திக்காக பதிவிறக்கம் செய்யப்பட்டது
குவைத்தில் கொடூரமாக தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் குடிமகனுக்கு 15 ஆண்டு சிறை;வெளிநாட்டினருக்கு நீதி மறுக்கப்படுகிறதா....???
குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளியின் மரணத்திற்கு காரணமான குவைத் குடிமகன் ஒருவருக்கு குற்றவியல் நீதிமன்றம் விதித்த 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை இன்று(27/07/26) மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நீதிபதி நாசர் சலீம் அல்-ஹைத் தலைமையில், நீதிபதிகள் முதாப் அல்-அரிதி மற்றும் சவுத் அல்-சானி ஆகியோரைக் கொண்ட அமர்வு குற்றவியல் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது. கடந்த ஆண்டு இரவு நேரத்தில் அல்-முத்லா பகுதியில் இந்த துயரமான சம்பவம் நிகழ்ந்தது. அந்த நேரத்தில் இது தொடர்பான செய்தியை நமது தளத்தில் வெளியிட்டிருந்தோம்.
சம்பவம் நடந்த அன்று, குற்றவாளி அப்பகுதியில் உள்ள மொபைல் மளிகைக் கடைக்கு வாகனத்தில் வந்து, 2 தினார் மதிப்புள்ள பொருட்களை வாங்கிவிட்டு, பணம் செலுத்தாமல் வாகனத்தை ஓட்டிச் செல்ல முயன்றார். இருப்பினும் தப்பித்த வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்ற ஊழியரின் கையை கண்ணாடி ஜன்னலை மூடி, சுமார் 30 மீட்டர் தூரம் வாகனத்தில் இழுத்து சென்று பின்னர் ஜனலை திறந்தான் இது தூக்கி வீசப்பட்ட அவருடைய உடலில் பின்சக்கரம் ஏறி இறங்கியதால் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. பின்னர் கவலைக்கிடமாக இருந்த ஊழியரை ஜஹ்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவத்தில் உயிரிழப்பு என்றால்,இந்த 15 ஆண்டு சிறை தண்டனை பரவாயில்லை. ஆனால் இப்படி கொடூரமாக செய்யப்பட்ட கொலைக்கு குறைந்தது மரணதண்டனை என்பதை சரி. குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான பல கொடூரமான கொலை வழக்குகளில் சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் குடிமக்கள் குற்றவாளி என்றால் மரணதண்டனை என்பதே விதிக்கப்படவில்லை என்பதை பார்க்க முடிக்கிறது. சமீபத்திய தீர்ப்புகளை பார்த்தால் வெளிநாட்டினருக்கு நீதி மறுக்கப்படுகிறதா...?? என்ற எண்ணம் தோன்றுகிறது.
Kuwait Police | Kuwaity Man | Shop Worker

