குவைத்தில் 350 தினார் முதல் 1200 தினார் வரை பணம் வசூலித்து விசா விற்பனை மற்றும் ஆட்கடத்தல்களை செய்த இந்தியர்கள் உட்பட்ட கும்பல் கைது
Image : பிடிபட்ட ஆள்கடத்தல் கும்பல்
குவைத்தில் சட்டவிரோதமாக விசா விற்பனை செய்த இந்தியர்கள் உட்பட்ட கும்பல் சிக்கியுள்ளது
குவைத்தில் இந்தியர்கள் உட்பட்ட விசா விற்பனை மற்றும் சட்டவிரோதமாக ஆட்கடத்தல்களை செய்த கும்பல் கைது செய்யப்பட்டனர். இந்தக் கும்பலை குவைத்தின் குடிவரவுத்துறையின் குற்றப் புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது. 4 நிறுவனங்களைச் சொந்தமாகக் கொண்டவரும் மற்றும் சுமார் 25 நிறுவனங்களில் கையெழுத்திடும் அதிகாரம் கொண்ட ஒரு குடிமகனின் பெயரில் விசா விற்பனை மற்றும் கடத்தலை இவர்கள் நடத்தி வந்தனர்.
மேலும் வெளியாகியுள்ள செய்தியில் விசாரணையின் போது நாட்டிற்கு வெளியே இருந்தும் மற்றும் நாட்டிற்க்கு உள்ளேயும் தங்கியிருந்த பல தொழிலாளர்கள் இவர்களுடைய நிறுவனத்தின் கீழ் அவர்களின் விசாக்களை சட்டவிரோதமாக மாற்றி உள்ளதும் கண்டறியப்பட்டது. இந்த கும்பல் வெளிநாட்டிலிருந்து குவைத்திற்கு தொழிலாளர்களை அழைத்து வந்து 350 தினார் முதல் 1200 தினார் வரை பணம் வசூலித்து குவைத்திலுள்ள தங்களுடைய நிறுவனத்திற்கு அவர்களின் விசாக்களை மாற்றினர். இந்த சட்டவிரோதமாக குற்றத்தில் ஒரு குவைத்தி, இடைத்தரகர்களாக இரண்டு இந்தியர்கள், ஒரு சிரியரும் செயல்பட்டனர். குற்ற்றவாளின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Worker Visa | Indian Workers | Visit Visa