BREAKING NEWS
latest

India News - Arab Tamil Daily - The 24×7 Gulf News

Latest India News News, Articles, India News Images, Videos, Full-Time GCC Arabic News in Tamil, Film, Entertainment, Politics, and Sports Updates from Arab Tamil Daily.

Friday, February 16, 2024

விமான நிலையத்தில் வீல் சேர் இல்லை என்பதால் மனைவியுடன் நடந்து சென்ற முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்

விமான நிலையத்தில் சக்கர நாற்காலி தட்டுப்பாடு காரணமாக நடந்து சென்ற முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்

Image : மும்பை விமான நிலையம்

விமான நிலையத்தில் வீல் சேர் இல்லை என்பதால் மனைவியுடன் நடந்து சென்ற முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்

மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி தட்டுப்பாடு காரணமாக நடந்து சென்ற முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட ஏர் இந்தியா 116 விமானம் மும்பை விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் சிறிது தாமதமாக 2.10 மணியளவில் வந்தடைந்தது.இந்த விமானத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 80 வயது முதியவர் தனது மனைவியுடன் மும்பைக்கு வந்திருந்தார். வணிக வகுப்பு இருக்கையில் பயணம் மேற்கொண்ட இருவரும், முன்னதாகவே சக்கர நாற்காலியை முன்பதிவு செய்திருந்தனர்.

ஆனால், சக்கர நாற்காலி தட்டுப்பாடு காரணமாக ஒரே ஒரு சக்கர நாற்காலி மட்டும் கிடைத்துள்ளது. அதனை மனைவிக்கு கொடுத்த முதியவர், விமானத்திலிருந்து குடியேற்ற சோதனை மையம் வரை சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்துள்ளார். இந்த நிலையில், குடியேற்ற சோதனை மையம் அருகே வந்த முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக விமான நிலைய ஊழியர்கள் மருத்துவமனைக்கு முதியவரை அழைத்துச் சென்ற நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் அளித்த விளக்கத்தில்,குறிப்பிட்ட விமானத்தில் பயணம் செய்தவர்களில் 32 பேர் சக்கர நாற்காலி கேட்டிருந்தனர். ஆனால், 15 நாற்காலி மட்டுமே இருந்ததால், அடுத்த சுற்றில் அனுப்பி வைப்பதாக முதியவரிடம் தெரிவித்தோம். ஆனால், வயது மூப்பால் இருவருக்கும் உள்ள உடல் பிரச்னை காரணமாக ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டும் எனக் கருதி அவர் தனது மனைவியுடன் நடந்து சென்றார்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவ சான்று வைத்துள்ள பயணிகளை தவிர மற்ற பயணிகள் விமான நிலையங்களில் சக்கர நாற்காலி பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த எதிர்ப்பு காரணமாக மருத்துவ சான்று முறை நிறுத்திவைக்கப்பட்டு முதியவர்களுக்கு இலவச நாற்காலி சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நடக்க முடிந்தவர்களும் சக்கர நாற்காலியை பயன்படுத்துவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று விமான நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாட்டின் மிகப் பரபரப்பான மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சக்கர நாற்காலி தட்டுப்பாட்டால் முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Old Citizen | Mumbai Airport | Passenger Death

Add your comments to India News

Tuesday, February 13, 2024

மாலத்தீவில் தமிழக இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த துயர செய்தி தற்போது வெளியாகியுள்ளது

தமிழக இளைஞர் தவறி விழுந்ததில் மாலத்தீவில் உயிரிழந்தார்

Image : உயிரிழந்த ராஜேஷ்(வயது-20)

மாலத்தீவில் தமிழக இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த துயர செய்தி தற்போது வெளியாகியுள்ளது

மாலத்தீவு தலைநகர் மாலியில் இந்தியா,தமிழகம், மயிலாடுதுறையை அடுத்த சீர்காழியைச் சேர்ந்த ராஜேஷ்(வயது-20). அவர் இன்று(13/02/24) காலையில் அந்நாட்டின் சாந்தினி மாகுவில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் வேலை செய்யும் போது சீலின் உடைந்து 10-வது மாடியில் இருந்து தவறி படி கட்டுகளுக்கு இடையேயுள்ள இடைவெளி வழியாக தரைத்தளத்திலேயே விழுந்துள்ளார். உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து விரைந்து வந்த மீட்பு குழுவினர் கவலைக்கிடமாக இருந்த அவரை மீட்டு அங்குள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையின்(IGMH) தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றன. இந்த செய்தியை அங்குள்ள தினசரி செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Tamil Worker | Maldives News | Indian Worker

Add your comments to India News

Wednesday, January 31, 2024

இனிவரும் காலங்களில் தமிழ் சினிமாவிலும் இதை பின்பற்றலாம்

சாதாரணமாக படத்திற்காக பல கோடி ரூபாய் செலவழித்து கடைசியில் செட் இடிக்கப்படுவது வழக்கமான ஒன்று அதை மாற்றி அமைத்து காட்டி சினிமா குழுவினர்

Image : படப்பிடிப்புக்காக கட்டப்பட்ட வீடு

இனிவரும் காலங்களில் தமிழ் சினிமாவிலும் இதை பின்பற்றலாம்

சாதாரணமாக படத்திற்காக பல கோடி ரூபாய் செலவழித்து கடைசியில் செட் இடிக்கப்படுவது வழக்கமான ஒன்று. ஆனால் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரு படத்தின் குழுவினர் மாற்றி யோசித்து உள்ளனர். வரும் காலங்களில் இந்திய சினிமாவே இமிடேட் செய்யக்கூடிய கூடிய மாதிரியை இவர்கள் ஆரம்பித்து வைத்துள்ளனர்.

Image : வீடு முன்பு மற்றும் பின்பு

அதாவது அவர்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்ட பகுதியில் முதலில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து படத்தை முடிக்க திட்டமிட்ட பட குழுவினர். ஆனால் பட குழுவினர் பிறகு அந்த ஊரில் கஷ்டத்தில் உள்ள ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வீடு கட்டி கொடுத்து அதில் படப்பிடிப்பை முடிக்க முடிவு செய்தனர். அத‌ன்படி வீட்டை கட்டி முடித்த பிறகே இந்த படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

Image : திறப்பு நிகழ்ச்சி

இந்தியா கேரளா மாநிலம், கண்ணூர் அடுத்த பானூரில் சினிமா படப்பிடிப்புக்காக கட்டப்பட்ட வீடு ஒரு குடும்பத்திற்கு இனிமுதல் நிழல் தரும். அன்போடு கண்மணி படத்தின் படப்பிடிப்பிற்காக கட்டப்பட்ட வீடுதான் ஏழ்மையான குடும்பத்திற்கு நிரந்தரமான வீடாக மாறியுள்ளது. கடந்த நாள் படப்பிடிப்பு முடிந்த நாளே நடிகர் சுரேஷ் கோபி வீட்டை திறந்து வைத்து இதற்கான சாவியை குடும்பத்திடம் வழங்கினார்.

இந்த புதிய முன்னுதாரணமானது பானூரில் உள்ள பினு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பான வீடு என்ற கனவு படத்தின் மூலம் நனவாகியுள்ளது. பெயரைப் போலவே, இந்த வீடு ஒரு அடையாளமாகவும், நினைவகம் மற்றும் மகிழ்ச்சியின் சின்னமாகவும் என்றும் இப்படியே அழகாக இருக்கட்டும் என்று வாழ்த்துவோம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to India News

Wednesday, October 18, 2023

அனைவரும் Share செய்யுங்கள்;போலி ஏஜெண்டுகளிடம் ஏமாறாமல் இருக்க உதவியாக இருக்கும்:

இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஏஜென்சிகளில் மத்திய அரசின் அனுமதி பெற்ற ஏஜன்சிகளின் விவரங்கள் பின்வருமாறு

Image : செய்தி பதிவிற்க்காக பதிவிறக்கம் செய்யப்பட்டது

அனைவரும் Share செய்யுங்கள்;போலி ஏஜெண்டுகளிடம் ஏமாறாமல் இருக்க உதவியாக இருக்கும்

இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஏஜென்சிகளில் மத்திய அரசின் அனுமதி பெற்ற ஏஜன்சிகளின் விவரங்கள் பின்வருமாறு.அனுமதி பெற்றுள்ள ஏஜென்சிகள் விபரங்களை அரசு இடையிடையே புதுப்பித்தல் செய்து வெளியிடும். அத‌ன்படி நிலுவையிலுள்ள அனுமதி பெற்றுள்ள ஏஜென்சிகள் விவரங்கள்

இனி வரும் காலங்களில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல இருப்பவர்கள் மத்திய அரசால் பதிவு செய்யப்பட்ட ஏஜன்சிகளின் மூலம் சென்றால் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஒருவேளை அப்படியே பிரச்சனைகள் வந்தாலும் அந்த ஏஜன்சிகள் பொறுப்பேற்பார்கள்.

ஏனெனில் அரசு அறிவுறுத்தி உள்ள விதிகளின் படி இந்த நிறுவனங்கள் செயல்படுகிறது. இந்த தகவல்களை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் அதன் மூலம் சில நேரங்களில் பலர் காப்பாற்றப்படலாம். தமிழகத்தில் அனுமதி பெற்றுள்ள ஏஜென்சிகள் விபரங்களை அறிய இந்த PDF File- ஐ Download செய்து 151-166 வரையிலான பக்கங்களை பார்க்கவும். PDF DOWNLOAD LINK

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to India News

Wednesday, December 21, 2022

இந்தியா வருகின்ற விமானப் பயணிகளுக்கு மீண்டும் ரேண்டம் கோவிட் பரிசோதனை:

சீனாவை மீண்டும் நெருக்கடிக்குள்ளாக்கியா கொரோனாவின் புதிய மருபணுமாற்ற வைரஸ் காரணமாக நடவடிக்கை

Image : Chennai Airport

இந்தியா வருகின்ற விமானப் பயணிகளுக்கு மீண்டும் ரேண்டம் கோவிட் பரிசோதனை:

சர்வதேச பயணிகளுக்கு விமான நிலையங்களில் ரேண்டம் கோவிட் பரிசோதனை. இன்று முதல் தொடங்கும் என்று சுகாதார அமைச்சக அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவ்யா நாட்டில் கோவிட் நிலைமையை மதிப்பிடுவதற்கான கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு நிலைமை மதிப்பிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார். நாடு கோவிட் நோயிலிருந்து முழுமையாக விடுபடவில்லை. கடுமையான கண்காணிப்பைத் தொடர வேண்டும் எனவும், எந்தச் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கவும் சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சீனாவை மீண்டும் நெருக்கடிக்குள்ளாக்கியா கொரோனாவின் புதிய மரபணுமாற்ற வைரஸ் BF-7 பாதிக்கப்பட்ட மூன்று நபர்களிடம் நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளன.குஜராத்தில் இருவர் மற்றும் ஒடிசாவில் ஒருவரும் கொரோனாவின் இந்த மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிடிஐ வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. இந்த மாறுபாட்டின் முதல் பாதிப்பு அக்டோபர் மாதம் குஜராத் உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.

கோவிட் பாதிப்பு விகிதம் தற்போது நாட்டில் அதிகரிப்பு இல்லை என்றாலும், புதிய மரபணுமாற்ற வைரஸ் BF-7 க்கு எதிராக விழிப்புடன் இருக்க தொடர்ந்து கண்காணிப்பு அவசியம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Search_tags

Add your comments to India News

Monday, February 14, 2022

சர்வதேச பயணிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய சலுகைகள் குவைத் மற்றும் அமீரகத்திற்கு பொருந்தாது

சர்வதேச பயணிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன

Image : Chennai Airport

சர்வதேச பயணிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய சலுகைகள் குவைத் மற்றும் அமீரகத்திற்கு பொருந்தாது

சர்வதேச பயணிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய சலுகைகள் இன்று(14/02/2022) திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.இருப்பினும், குவைத் மற்றும் அமீரகத்தில் இருந்து தாயகம் செல்லும் பயணிகளுக்கு புதிய சலுகைகள் பொருந்தாது. அதன் விரிவான விபரங்கள் பின்வருமாறு:

குவைத் மற்றும் அமீரகம்( UAE) உள்ளிட்ட இரு நாடுகளைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசியை முடித்துவிட்டனர். அதுபோல் இந்த இரு நாடுகளிலும் கோவிட் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இருந்த போதும் ஏன் இந்த இரண்டு நாடுகளும் Green பட்டியலில் இடம்பெறவில்லை என்பது தெரியவில்லை. புதிய முடிவுகளின்படி வெளியிடப்பட்டுள்ள 87 நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR பரிசோதனை தேவை என்ற நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இவர்களுக்கு நடைமுறையிலுள்ள 7 நாள் தனிமைப்படுத்தலுக்குப் பதிலாக 14 நாட்கள் சுய கண்காணிப்பு போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த 87 நாடுகளில் இருந்து வருகின்ற நபர்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை உங்களுடைய தடுப்பூசி சான்றிதழை Air-Suvidha தளத்தில் பதிவேற்றுவது. அதேநேரம் தடுப்பூசி எடுக்காத நபர்களுக்கு PCR பரிசோதனை சான்றிதழ் கண்டிப்பாக தேவை. மத்திய அரசு வெளியிட்டுள்ள Green பட்டியலில் வளைகுடா நாடுகளான பஹ்ரைன், கத்தார், ஓமன், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அதேநேரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் ஆகியவை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இந்த முடிவுக்கு இந்த இரு நாடுகளைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று பலர் கருதுகின்றனர். வரும் நாட்களில் திருத்தப்பட்ட புதிய பட்டியில் வெளியாகுமா....??? என்பது குவைத் மற்றும் அமீரக இந்தியர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

Add your comments to India News

Monday, November 29, 2021

இந்தியாவில் கடைபிடிக்கப்படும் டிசம்பர்-1 முதல் நடைமுறையில் வருகின்ற புதுப்பிக்கப்பட்ட சர்வதேச விமானங்களுக்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவிற்கு டிசம்பர்-1,2021 முதல் செல்கின்ற சர்வதேச விமான பயணிகளுக்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

Image : Mumbai Airport

இந்தியாவில் கடைபிடிக்கப்படும் டிசம்பர்-1 முதல் நடைமுறையில் வருகின்ற புதுப்பிக்கப்பட்ட சர்வதேச விமானங்களுக்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

ஆப்பிரிக்காவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனாவின் மரபணுமாற்ற Omicron வகை கண்டறியப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவுக்கு 1-டிசம்பர்-2021 புதன்கிழமை முதல் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கான பயண விதிமுறைகளை புதுப்பித்து இந்திய சுகாதரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது அதன் விபரங்கள் பின்வருமாறு:

பயணிகள் பயணம் மேற்கொள்ளும் முன்னரே Air-Suvidha தளத்தில் தங்களுடைய கடந்த 14 நாட்களுக்கான பயண விபரங்கள், 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட RT-PCR பரிசோதனையின் எதிர்மறை(Negative) சான்றிதழ் மற்றும் உண்மையான உறுதிமொழி ஆகியவை பதிவேற்ற வேண்டும். தவறான விபரங்கள் பதிவு செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். Website Link: https://www.newdelhiairport.in/airsuvidha/apho-registration

அதேபோல் United Kingdom, South Africa, Brazil, Bangladesh,Botswana, China, Mauritius, New Zealand, Zimbabwe, Singapore, Hong Kong மற்றும் Israel உள்ளிட்ட தீவிரமான'At-Risk" பிரிவில் உட்படுத்தப்பட நாடுகளில் இருந்து வருகின்ற பயணிகளுக்கு நிபந்தனை அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் இந்த நாடுகளில் இருந்து வருகின்ற பயணிகள் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை முடிவு கிடைத்த பிறகு மட்டுமே விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல முடிவும். முடிவு எதிர்மறையாக(Negative) இருந்தால் விமான நிலையத்தில் இருந்து வெளியேறி 7 நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தல் செய்துக்கொள்ள வேண்டும். 8 வது நாள் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் அதிலும் Negative ஆக இருந்தால் சுய தனிமைப்படுத்தல் செய்துக்கொள்ள வேண்டும்.

பட்டியலில் இல்லாத வளைகுடா உள்ளிட்ட மற்ற நாடுகளில் இருந்து வருகின்ற பயணிகள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தல் செய்துக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நாடுகளில் இருந்து வருகின்ற விமானங்களில் உள்ள 5 சதவீதம் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுவார்கள். எதாவது சூழ்நிலையில் இப்படிப்பட்ட பயணிகள் யாராவது Positive என்று தெரிய வந்தால் Isolation வார்டுக்கு மாற்றப்படுவார்கள். இந்த விதிமுறைகள் கடல் மற்றும் தரைவழியாக இந்திய எல்லைகளை அடையும் நபர்களுக்கும் பொருந்தும்

வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வருகைக்கு முந்தைய மற்றும் பிந்தைய சோதனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும் வருகையின் போது அல்லது வீட்டுத் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் போது கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டால் அவர்களும் வகுக்கப்பட்ட நெறிமுறையின்படி சோதனை மற்றும் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

Image credit: Moh India

Add your comments to India News

Friday, October 29, 2021

வெளிநாடுகளில் இருந்து இறப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக நாட்டிற்கு வருகின்ற நபர்களுக்கும் இனிமுதல் PCR பரிசோதனை சான்றிதழ் தேவை என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

வெளிநாடுகளில் இருந்து அவசர தேவைகளுக்காக நாட்டிற்கு வருகின்ற நபர்களுக்கும் இனிமுதல் PCR பரிசோதனை சான்றிதழ் தேவை

Image : செய்தி பதிவுக்கான மட்டுமே

வெளிநாடுகளில் இருந்து இறப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக நாட்டிற்கு வருகின்ற நபர்களுக்கும் இனிமுதல் PCR பரிசோதனை சான்றிதழ் தேவை என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

வ‌ளைகுடா உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்ற இந்தியர்கள் குடும்பத்தில் உள்ள நபர்களின் மரணங்கள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட அவசரகால தேவைகளுக்காக தாயகம் திரும்புகின்ற நேரத்தில் அவர்கள் பயணம் மேற்கொள்ள PCR பரிசோதனை தொடர்பான Negative சான்றிதழ் தேவையில்லை என்ற முடிவை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளன. எனவே இனிமுதல் எல்லா பயணிகளுக்கும் Air Suvidha தளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றால் PCR பரிசோதனை தொடர்பான Negative சான்றிதழ் தேவைப்படும்.

அதுபோல் குவைத்,சவுதி,கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அவசரகால தேவைக்காக தாயகம் திரும்புகின்ற நபர்களை இது பாதிக்கும். இந்த புதிய முடிவு மூலம் Exceptional என்ற Option-ஐ தேர்வு செய்து இனிமுதல் விபரங்கள் பதிவு செய்ய முடியாது.எனவே இனிமுதல் அவசரகால தேவைக்காக தாயகம் திரும்ப வேண்டும் என்றாலும் PCR பரிசோதனை செய்து அதனுடைய Result வரும் வரையில் குறைந்து 12 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் அமீரகத்தில் துபாய் மற்றும் ஷார்ஜா விமான நிலையத்திலும் 3 மணிநேரத்தில் PCR பரிசோதனை செய்து Result கிடைக்கும் என்பதால் அங்கிருந்து வருகின்ற இந்தியர்களுக்கு பிரச்சனை இருக்காது.

அதேபோல் இன்றிலிருந்து 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR பரிசோதனை சான்றிதழ் Air Suvidha வில் பதிவேற்றம் செய்த பிறகுதான் பயணம் செய்ய அனுமதி பெற முடியும். எனவே இரண்டு டோஸ் தடுப்பூசியுடன் பூஸ்டர் டோஸ் கூட எடுத்துக்கொண்ட வளைகுடா மக்களை பாதிக்கும் இந்த முடிவை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது வளைகுடா மக்களின் கோரிக்கை ஆகும். மேலும் இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை இன்று(29/10/21) சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்தியில் அக்டோபர்-31,2021 வரையில் நீட்டிக்கப்பட்டிருந்த சர்வதேச விமானங்களுக்கான தடை நவம்பர்-30,2021 நள்ளிரவு 23:59 வரையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதேநேரம் Air-Bubble ஒப்பந்தப்படி சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ள வழித்தடங்கள் பயணிகள் விமானங்கள் சேவை தொடர்ந்து இயக்கப்படும். அதுபோல் சரக்கு விமானங்களின் சேவைகள் எந்த தடையும் இன்றி தொடர்ந்து இயக்கப்படும்.

Add your comments to India News

Wednesday, October 13, 2021

சர்வதேச விமான சேவைகள் தொடர்ந்தும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ள வழித்தடங்களில் மட்டுமே இயக்கப்படும்

இந்தியாவில் அக்டோபர்-18 முதல் 100 சதவீதம் உள்நாட்டு விமானங்களும் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Image : டெல்லி விமான நிலையம்

சர்வதேச விமான சேவைகள் தொடர்ந்தும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ள வழித்தடங்களில் மட்டுமே இயக்கப்படும்

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருகின்றன நிலையில் வருகின்ற அக்டோபர்-18,2021 முதல் 100 சதவீதம் உள்நாட்டு விமானங்களும் இயக்க விமான நிறுவனங்களுக்கு இந்திய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தற்போது நடைமுறையிலுள்ள கோவிட் விதிமுறைகள் பின்பற்றி மட்டுமே இதை நடைமுறைப்படுத்தவும் அறிவுத்தல் செய்யப்பட்டுள்ளது. கோவிட் பரவல் காரணமாக தற்போது நாட்டிலுள்ள 85 சதவீதம் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் நாட்டில் கோவிட் பரவல் காரணமாக முழுமையாக விமான சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில். கொரோனா பரவல் முதல் அலைக்கு பிறகு கடந்த மே முதல் 33 சதவீதம் விமானங்கள் முதல்கட்டமாக இயக்க அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் பல கட்டங்களாக விமான சேவைகள் இயக்கும் விகிதம் உயர்த்தப்பட்டு தற்போது 85 சதவீதம் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அக்டோபர்-18,2021 முதல் 100 சதவீதம் உள்நாட்டு விமானங்களும் இயக்க,விமான நிறுவனங்களுக்கு இந்திய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் நேற்று நடைபெற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்திற்கு பிறகு அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் சர்வதேச விமானங்களுக்கு கடந்த ஒ‌ன்றரை வருடங்களாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஒவ்வொரு மாத இறுதியிலும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அது எப்போது நீக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனவே சர்வதேச விமான சேவைகள் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ள வழித்தடங்களில் மட்டுமே தொடர்ந்து இயக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது. வரும் நாட்களில் இதில் எதாவது மாற்றம் ஏற்படுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய நிலையில், குடும்ப வாழ்வாதாரத்துக்காக வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்கின்ற இந்தியர்கள் லட்சங்கள் செலவு செய்து தங்கள் பணியிடங்களுக்கு திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Add your comments to India News

Wednesday, September 29, 2021

இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டது;வளைகுடா நாடுகளில் இருந்து விமான சேவைகளுக்கு பிரச்சனை இருக்காது

இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை அக்டோபர்-31 வரையில் மீண்டும் நீட்டித்து உத்தரவு வெளியாகியுள்ளன

Image : DGCA India

இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டது;வளைகுடா நாடுகளில் இருந்து விமான சேவைகளுக்கு பிரச்சனை இருக்காது

இந்தியாவில் கோவிட் பரவல் தீவிரமடைந்த நிலையில் இந்திய சிவில் விமான போக்குவரத்து ஆணையம்(டிஜிசிஏ) சர்வதேச விமானங்களை இயக்குவதற்காக தற்காலிகமாக தடையினை அறிவித்தது. இந்த தடை கடந்த வருடம் பாதியில் அறிவிக்கப்பட்ட நிலையில் கோவிட் பரவல் கட்டுக்குள் வாராத நிலையில் பலமுறை நீட்டிக்கப்பட்டது. கடைசியாக இந்த செப்டம்பர்-30,2021 வரையில் தடை நிலுவையில் இருக்கும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்திய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் நேற்று(28/08/21) செவ்வாய்கிழமை மாலையில் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் சர்வதேச விமானங்களுக்கான தடை உள்ளூர் நேரப்படி (இந்திய நேரப்படி) அக்டோபர்-31,2021 நள்ளிரவு 23:59 வரையில் மீண்டும் நீட்டித்து புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தற்போதும் பல நாடுகளில் பரவி வருகின்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் அந்த அறிக்கையில் டிஜிசிஏ-யின் சிறப்பு அனுமதி அடிப்படையிலான விமான சேவைகள் மற்றும் Air-Bubble ஒப்பந்தம் அடிப்படையில் மலேசியா, சிங்கப்பூர் மாற்றும் வளைகுடா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இடையேயான வழித்தடங்களில் கடந்த பல மாதங்களாக இயக்கப்பட்டு வருகின்ற விமான சேவைகள் தொடர்ந்து எந்த தடையும் இன்றி இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்காக இயக்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சரக்குகளை எடுத்து செல்கின்ற Cargo விமானங்களின் சேவைகளும் எந்த தடையும்யின்றி இயக்கப்படும் எனவும் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே அனைத்து நாடுகளின் பயணிகளும் இந்தியா வந்து செல்லும் விதமான இந்திய விமான நிலையங்கள் சாதாரண நிலைக்கு திருப்புவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என்பது தெளிவாகியுள்ளன.

Add your comments to India News

Sunday, August 29, 2021

இந்தியா சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் சர்வதேச விமான தடையை மீண்டும் நீட்டித்துள்ளது

இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை செப்டம்பர்-30 வரையில் நீட்டித்து சற்றுமுன் செய்தி வெளியாகியுள்ளது

Image : செய்தி பதிவுக்கான மட்டுமே

இந்தியா சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் சர்வதேச விமான தடையை மீண்டும் நீட்டித்துள்ளது

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை தொடர்பான உத்தரவு கடந்த பல மாதங்களாக தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த ஜூலை மாத இறுதியில் ஆகஸ்டு-31,2021 வரையில் தடை நீட்டிப்பதாக இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் உலக நாடுகளில் பல இடங்களிலும் தற்போதும் கொரோனா பரவல் கட்டுக்குள் வாராத நிலையில் இந்தியாவில் இருந்து சாதாரணமாக இயக்கப்படும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகின்ற சர்வதேச விமானங்களுக்கான தடையை செப்டம்பர்-30-2021 நள்ளிரவு 23:59 வரையில் மீண்டும் நீட்டிப்ப்பாத DGCA இன்று(29/08/21) ஞாயற்றுக்கிழமை சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடுள்ளது.

அதேநேரம் மீட்பு நடவடிக்கை உள்ளிட்ட அவசரகால அனுமதி அடிப்படையில் இயக்கப்படும் விமானங்கள், Air-Bubble ஒப்பந்தப்படி வளைகுடா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்துவர அனுமதி வழங்கப்பட்டுள்ள விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் ஆகியவற்றின் சேவைகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்ளூர் விமான சேவைகளுக்கு கடந்த டிசம்பர் முதல் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்க அனுமதி வழங்கப்பட்டது. அதுபோல் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இந்தியர்கள் உள்ளூர் விமானங்களில் பயணம் மேற்கொள்ளும் நேரத்தில் கொரோனா தொடர்பான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றால் பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை என்றும் இரு தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது குறிப்பிடதக்கது.

Add your comments to India News

Friday, August 6, 2021

அமீரகம் செல்ல தற்போது சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் Rapid-Test பரிசோதனை செய்ய முடியும்

அமீரகம் செல்லும் பயணிகள் கவனத்திற்கு சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் விரைவு பி.சி.ஆர் பரிசோதனை வசதி உள்ளது

Image : திருச்சி விமான நிலையம்

அமீரகம் செல்ல தற்போது சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் Rapid-Test பரிசோதனை செய்ய முடியும்

இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு நேரடியாக செல்வதற்கான பயணத்தை நேற்று நீங்கிய நிலையில் அமீரகத்தில் இருந்து 2 டோஸ் தடுப்பூசி எடுத்து, Validity Work Permit உள்ளவர்கள் பிற பயண விதிமுறைகள் பின்பற்றி நேற்று(05/08/21) முதல் செல்ல முதல்கட்டமாக அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் அமீரகம் பயணிக்க அறிவிக்கப்பட்டுள்ள முக்கியமான விதிமுறைகளில் ஒன்று பயணத்திற்கு 4 மணிநேரத்திற்கு முன்பு விமான நிலையத்தில் வைத்து எடுக்கப்படும் விரைவு பி.சி.ஆர் பரிசோதனை(Rapid-Test). அதற்கான வசதி தமிழகத்தில் சென்னை விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது திருச்சி விமான நிலையத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே அமீரகம் செல்கின்ற பயணிகள் மற்ற பயண விதிமுறைகள் முடித்தால் விமான நிலையத்தில் வைத்து எடுக்கப்படும் Rapid-Test தொடர்பான கவலை கொள்ள வேண்டியது இல்லை.

சென்னை விமான நிலையத்தில் Rapid-Test எடுத்து 30 நிமிடத்தில் பரிசோதனை முடிவு கிடைக்கும் 4000 ரூபாய் கட்டணம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் திருச்சி விமான நிலையத்தில் 1575 ரூபாய் கட்டணத்தில் 2 மணிநேரத்திற்குள் பரிசோதனை முடிவு கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோல் தமிழக-கேரளா எல்லைகளில் உள்ளவர்கள் திருவனந்தபுரம்,கொச்சி உள்ளிட்ட கேரளா மாநிலத்தின் 4 சர்வதேச விமான நிலையத்திலும் வைத்து Rapid-Test எடுக்கும் வசதிகளை அந்த மாநிலம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 3400 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் அமீரக அதிகாரிகளின் அனுமதி உள்ளிட்ட மற்ற அனைத்து பயண விதிமுறைகள் முடித்த நபர்கள் அமீரகம் புறப்படுவதற்கு சாதாரணமாக 3 மணிநேரத்திற்கு முன்பு விமான நிலையம் வருவோம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் Rapid-Test உள்ளிட்ட பரிசோதனைகள் உள்ளத்தால் 5 முதல் 6 மணி நேரத்திற்கு முன்னரே விமான நிலையத்திற்கு வருவது நல்லது. இதுவே அவசரம் எதுவும் இல்லாமல் விமான நிலையத்தில் உள்ள மீதி பயண விதிமுறைகளை முடிக்க வசதியாக இருக்கும்.

Add your comments to India News

Friday, July 30, 2021

இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டது

இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து இன்று சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டது

இந்தியாவில் சர்வதேச விமானங்களின் சேவைகள் தொடங்குவது மீண்டும் தாமதமாகும் என்ற தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்திய சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் சர்வதேச விமானங்களுக்கான தடையை மேலும் ஒரு மாதத்திற்கு அதாவது ஆகஸ்டு-31 வரை நீட்டிக்க முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக இன்று(30/07/21) வெள்ளிக்கிழமை சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் உட்பட கோவிட் வைரஸ் பரவுவது குறையாத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னர் இந்தியாவிலிருந்து புறப்படும் மற்றும் வருகை தருகின்ற சர்வதேச விமானங்களுக்கான தடை இம்மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் இந்த புதிய அறிவிப்பு இன்று மாலையில் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் இந்தியா பல்வேறு நாடுகளுடன் செய்துள்ள Air-Bubble ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சிறப்பு சேவைகளை இயக்குவதிலும் மற்றும் சரக்கு விமானங்களை இயக்குவதிலும் எந்த தடையும் இல்லை எனவும் செய்தியில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Add your comments to India News

Thursday, July 22, 2021

ஏர் இந்தியாவின் PCR பரிசோதனை தேவையில்லை என்ற அறிவிப்பு உள்ளூர் விமானங்களுக்கு மட்டுமே என்ற புதிய விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது

ஏர் இந்தியா நேற்று வெளியிட்ட 3 மாநிலங்களுக்கான PCR பரிசோதனை தேவையில்லை என்ற அறிவிப்பு உள்ளூர் விமானங்களுக்கு மட்டுமே என்ற புதிய விளக்கம் அளித்துள்ளது

Image credit: Air India

ஏர் இந்தியாவின் PCR பரிசோதனை தேவையில்லை என்ற அறிவிப்பு உள்ளூர் விமானங்களுக்கு மட்டுமே என்ற புதிய விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது

ஏர் இந்தியா நேற்று கேரளா, மகாராஷ்டிரா மற்றும் மேற்குவங்கம் உட்பட மூன்று மாநிலங்களுக்குச் செல்வோரியில் தடுப்பூசி இரண்டு டோஸ் எடுத்திருந்தால் பி.சி.ஆர் பரிசோதனை செய்ய தேவையில்லை என்று நேற்று(21/07/21) காலையில் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் விமான நிறுவனம் நேற்று மாலையில் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் அந்த அறிவிப்பு உள்ளூர் விமானங்களுக்கு மட்டுமே என்று தெளிவுபடுத்தியுள்ளது. விமான நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தெளிவில்லாத நிலையில் பயணிகளின் கேள்விக்கு பதிலாக விமான நிறுவனம் நேற்று(22/07/21) மாலையில் இந்த புதிய விளக்கத்தை அளித்துள்ளது.நேற்று வெளியிடப்பட்ட செய்தியின் Link: https://www.arabtamildaily.com/2021/07/passengers-entering-the-tamil-nadu-border-via-kerala-from-abroad-will-not-be-required-to-undergo-pcr-testing.html

Add your comments to India News

Wednesday, July 21, 2021

வெளிநாடுகளில் இருந்து கேரளா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு வருகின்ற பயணிகளுக்கு PCR பரிசோதனை தேவையில்லை

வெளிநாடுகளில் இருந்து வருகின்ற பயணிகளில் கேரளா வழியாக தமிழக எல்லைகளில் நுழையும் பயணிகள் PCR பரிசோதனை செய்ய தேவை இருக்காது

Image credit: Air India

வெளிநாடுகளில் இருந்து கேரளா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு வருகின்ற பயணிகளுக்கு PCR பரிசோதனை தேவையில்லை

வளைகுடா உள்ளிட்ட எந்த நாடுகளில் இருந்தும் கேரளா, மகாராஷ்டிரா மற்றும் மேற்குவங்கம் உட்பட மூன்று மாநிலங்களுக்குச் செல்வோர் தடுப்பூசி இரண்டு டோஸ் எடுத்திருந்தால் பி.சி.ஆர் பரிசோதனை செய்ய தேவையில்லை என்று இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும் இந்த சலுகை பெறுவதற்கு பயணிக்கும் பயணி இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டு 15 நாட்கள் கடந்த நபராக இருக்க வேண்டும். இதன் மூலம் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்கள் பயணம் மேற்கொள்ளும் நேரத்தில் ஆர்டி-பிசிஆர்(RT-PCR) பரிசோதனை எடுத்துக்கொண்ட எதிர்மறையான சான்றிதழ் சமர்ப்பிக்க தேவை இருக்காது, மாறாக தடுப்பூசி எடுத்துக்கொண்ட சான்றிதழ்கள் சமர்பித்தால் போதுமானதாக இருக்கும் என்றும் விமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இதன் மூலம் திருவனந்தபுரம் வழியாக தமிழகத்தில் நுழையும் பயணிகள் மற்றும் கொச்சி வழியாக கோயம்பத்தூர் உள்ளிட்ட தமிழக எல்லைகளில் நுழையும் நபர்களும் பயணத்திற்கு முன்பாக இந்த புதிய அறிவிப்பு தொடர்பான தகவலை பயணச்சீட்டு எடுக்கும் டிராவல் ஏஜென்சிகள் அல்லது அந்தந்த வ‌ளைகுடா நாடுகளில் உள்ள ஏர் இந்தியா அலுவலக தொடர்பு எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் தெளிவான விளக்கத்தை பெறுவது சிறந்ததாக இருக்கும்.

Add your comments to India News

Saturday, July 3, 2021

வெளிநாடு செல்வோருக்கு பயிற்சி,காப்பீடு உள்ளிட்டவை அரசு சார்பில் வழங்க திட்டம் என்று அமைச்சர் மஸ்தான் தகவல்

வெளிநாடு செல்வோருக்கு பயிற்சி மற்றும் காப்பீடு உள்ளிட்டவை அரசு சார்பில் வழங்க திட்டம் என்று அமைச்சர் மஸ்தான் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்

Image credit: Official Soure

வெளிநாடு செல்வோருக்கு பயிற்சி,காப்பீடு உள்ளிட்டவை அரசு சார்பில் வழங்க திட்டம் என்று அமைச்சர் மஸ்தான் தகவல்

தமிழக அரசின் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று(03/07/21) வெள்ளிக்கிழமை அன்று சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் மஸ்தான் தலைமையில் வெளிநாடு வாழ் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் மஸ்தான் கூறியதாவது:

வகுப்பு வாரிய தனது துறையின் நிர்வாகத்தை 3 மாதங்களுக்குள் சீரமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நலனை பாதுகாப்பது குறித்து கூட்டத்தில் பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில், தமிழகத்தில் இருந்து வெளிநாடு செல்வோர் முதலில் தமிழகத்தில் அதற்கான விபரங்களை பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும். தமிழக அரசு சார்பில் இதற்காக பதிவேடு தொடங்கி, தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் வசதி ஏற்படுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்காக செல்பவர்களுக்கு காப்பீடு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனவும் குறிப்பாக, வெளிநாடு செல்வதற்கான காரணம், எந்த நிறுவனம் போன்ற விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்று சேகரித்து வைக்கவும், வெளிநாடு செல்பவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்களை அனுப்பும் முகவர்கள், பணி செய்ய உள்ள நிறுவனங்கள் குறித்த உண்மைத்தன்மையை அரசே அறிந்து, அவர்களை அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடு சென்று சிரமத்துடன் திரும்புவோர் தொழில் தொடங்க 5 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவது, 60-வயதுக்கு மேற்பட்டோருக்கு ரூபாய் 5000 ஓய்வூதியம் தரலாம் என்றும் கூறியுள்ளனர். இவை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இதற்கான வாரியம் அமைத்து திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

இக்கூட்டத்தில்,மறுவாழ்வு துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையரக இயக்குநர் திருமதி.ஜெஸிந்தா லாசரஸ், இ.ஆ.ப., K.ரமேஷ், துணை இயக்குனர், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் M.H.ஜவாஹிருல்லா,கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய தலைவர் திரு.பொன்குமார், சகோதரி.வளர்மதி, அருட்தந்தை வேளாண்கன்னி,(F.J) அருட்தந்தை.பிரபு,(F.J), டாக்டர். பெர்னார்டு, டாக்டர் D.பாலமுருகன், திரு.P.ரூப பாலன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Add your comments to India News

Wednesday, June 30, 2021

இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை ஜூலை-31 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை ஜூலை-31 வரையில் நீட்டித்து சற்றுமுன் அறிவிப்பு வெளியாகியுள்ளது

Image credit: Air India

இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை ஜூலை-31 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து அணையம் இன்று(30/06/21) புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் கொரோனா பரவலை தொடர்ந்து சர்வதேச விமானங்களுக்கான தடை ஜூலை-31 வரையில் நடைமுறையில் இருக்கும் என்று அறிவித்துள்ளது. Air-Bubble ஒப்பந்தம் போன்ற சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ள வழித்தடங்களில் மட்டும் விமான சேவை இயக்கப்படும் எனவும், சரக்கு விமானங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image credit: Official Soure

Add your comments to India News

Thursday, June 24, 2021

தடுப்பூசி சான்றிதழில் ஆதார் எண் உள்ளவர்கள்,பாஸ்போர்ட் எண் இணைப்பதற்கான வழிமுறைகள்

இந்தியாலில் தடுப்பூசி எடுத்து சான்றிதழில் ஆதார் எண் உள்ளவர்கள்,அதில் பாஸ்போர்ட் எண் இணைப்பதற்கான வழிமுறைகள்

Image credit : Indian Heath Department

தடுப்பூசி சான்றிதழில் ஆதார் எண் உள்ளவர்கள்,பாஸ்போர்ட் எண் இணைப்பதற்கான வழிமுறைகள்

இந்தியாலில் தடுப்பூசி எடுத்து சான்றிதழில் ஆதார் எண் உள்ளவர்கள்,அதில் பாஸ்போர்ட் எண் இணைப்பதற்கான வழிமுறைகள்:


  1. இந்திய சுகாதரத்துறை அமைச்சகத்தின் கொரோனா வைரஸ் தொடர்பான சேவைகளுக்கான இந்தhttps://www.cowin.gov.in/home என்ற இணைய தளத்தை Click உள்ளே நுழைய வேண்டும் 
  2. அதன் பிறகு முத்திரையில் மஞ்சள் நிறத்தில் தெரியுய்க Register/Sign in Yourself  என்ற Option-ஐ கிளிக் செய்ய வேண்டும் 
  3.  தொடர்ந்து தடுப்பூசி எடுத்துக் கொண்ட நேரத்தில் மருத்துவமனையில் வழங்கிய கைபேசி எண்ணை டைப் செய்து Submit செய்ய வேண்டும் 
  4. சில நொடிகளில் மருத்துவமனையில் நீங்கள்  வழங்கிய கைபேசி எண்ணுக்கு ஒரு OTP வரும் அந்த எண்களை இணையதளத்தில் தெரியும் அடைப்பு பகுதியில் கொடுக்க வேண்டும்.
  5.  உடனே உங்களுக்கு மருத்துவமனையில் கொடுத்த அதே தடுப்பூசி சான்றிதழ் அப்படியே உங்கள் முன் தெரியும் 
  6.  தொடர்ந்நு Raise Issue என்ற Option--ஐ கிளிக் செய்யவும் சில நோடிகளில் Add Passport Details என்பதை தேர்ந்தெடுத்து கிளிக் செய்து உங்கள் பாஸ்போர்ட் எண்ணை நிரப்பவும்
  7. நிரப்பி பிறகு கீழே உள்ள ✔ டிக் மார்க்கை Click செய்து  Submit கொடுக்கவும். இப்போது உங்களின் திருத்தம் செய்யப்பட்ட பாஸ்போர்ட் எண் உள்ள புதிய சான்றிதழை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம். இதை உங்கள் வளைகுடா வரும் நண்பர்களுக்கு பகிர்வு செய்யவும். பெரும்பாலான வளைகுடா நாடுகளில் கோவிட்சீல்ட் ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளது. எனவே அந்த தடுப்பூசியே எடுக்க முயற்சி செயுங்கள். 

Add your comments to India News

Monday, June 21, 2021

வெளிநாடு செல்பவர்களுக்கு தமிழகத்தில் சிறப்பு தடுப்பூசி மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

வெளிநாடு செல்பவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 75 சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்பாடு பயன்படுத்தி கொள்ளுங்கள்

வெளிநாடு செல்பவர்களுக்கு தமிழகத்தில் சிறப்பு தடுப்பூசி மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

வெளிநாடுகளுக்கு குறிப்பிட்ட பிரிவில் செல்லும் பயணிகளுக்கு மட்டும் கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு அனுமதி அடிப்படையில் முன்கூட்டியே போடலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. இந்தியாவில் தற்போதைய சூழ்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்ட பின்னர் இரண்டாவது டோஸ் 84 நாட்களுக்கு பிறகுதான் போட வேண்டியுள்ளது. எனினும் வெளிநாடுகளில் கல்வி, வேலை,விளையாட்டு போட்டிகள் போன்ற முக்கியமான காரணங்களுக்காக செல்லும் பயணிகளின் நலன் கருதி, கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 28 நாட்களுக்கு பிறகு போடலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த பிரிவில் தடுப்பூசி போடுவதற்கு முன் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் பயணிகள் மாநிலத்தில் ஏற்பாடு செய்துள்ள 75 சிறப்பு தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்தலாம். இதற்கு மாவட்டங்கள் வாரியாக தடுப்பூசி செலுத்திகொள்ள செல்ல வேண்டிய இடங்களின் விபரங்களை தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று(20/06/21) ஞாயற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது. தடுப்பூசி மையங்களின் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Image : தடுப்பூசி செலுத்த செல்ல வேண்டிய இடங்களின் விபரங்கள்

Add your comments to India News

Thursday, June 10, 2021

குடும்பத்தினருக்கு பயந்து காதல் மனைவியை 10 வருடங்களாக யாருடைய கண்ணிலும் படாமல் தங்க வைத்த கணவர்

குடும்பத்தினருக்கு பயந்து காதல் மனைவியை தன்னுடைய வீட்டில் 10 வருடங்களாக யாருடைய கண்ணிலும் படாமல் தங்க வைத்த கணவர் அதிர்ச்சியும் சுவாரஸ்யமான சம்பவமும் நடந்துள்ளது

Image credit:தம்பதிகள் மற்றும் மனைவி

குடும்பத்தினருக்கு பயந்து காதல் மனைவியை 10 வருடங்களாக யாருடைய கண்ணிலும் படாமல் தங்க வைத்த கணவர்

நம்மால் ஒருவரை ஒரு வீட்டில் யாருக்குமே தெரியாமல் எ‌த்தனை நாட்கள் தங்கவைக்க முடியும். ஒரு சில நாட்களில் எப்படியும் வீட்டில் உள்ளவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் கேரளா மாநிலம் பாலக்காடு,நென்மாற,ஆயலூர் பகுதியை சேர்ந்தவர் ரகுமான் இவருடைய காதல் மனைவியான சஜிதாவை தன்னுடைய குடும்பத்தினருக்கு பயந்து 10 வருடங்களாக யாருடைய கண்ணிலும் படாமல் அதே வீட்டில் தங்க வைத்த அதிர்ச்சியும் சுவாரஸ்யமான சம்பவமும் நடந்துள்ளது. இருவரும் வெவ்வேறான மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இது குறித்த தகவல் நேற்று முதல் வெளியான நிலையில் இன்று அவர்கள் இருவரும் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் சஜிதா தனது பக்கத்து வீடு என்பதால் தன்னுடைய அக்கா மற்றும் குழந்தைகள் வீட்டில் உள்ளதால் அடிக்கடி வருவாள் எனவும் இதனால் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது எனவும், இது யாருக்கும் தெரியாது எனவும்,பின்னர் சேர்ந்து வாழ முடிவு செய்த நிலையில் யாருக்கும் தெரியாமல் ஒரு கோவிலில் வைத்து தாலி காட்டினேன் எனவும் பின்னர் அவள் அவளுடைய வீட்டிற்க்கு சென்றாள் எனவும் தெரிவித்தார்.

Image : பெண்மணி தங்கியிருந்த அறை

பின்னர் சஜிதாவின் வீட்டில் பையனை பார்க்க துவங்கிய போது அதற்குமேல் தன்னுடைய வீட்டில் நிற்க முடியாது என்று கூறவே,ஒருநாள் ரகுமான் யாருக்கும் தெரியாமல் தன்னுடைய வீட்டில் உள்ள அவர் தங்கியிருந்த அறையில் கொண்டுவந்து தங்க வைத்தார். மேலும் கழிவறை இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் வெளியே சென்று குளிப்பது மற்றும் கழிவறை செல்வது உள்ளிட்ட அன்றாட கடன்களை செய்தார். ரகுமான் தன்னுடைய அறையில் யாரும் நுழையாத வண்ணம் பிரத்யேகமான பூண்டை பயன்படுத்தினார். மேலும் அத்தியாவசிய தேவைக்கு யாரும் பார்க்காமல் வெளியே செல்லும் விதத்தில் தன்னுடைய அறையின் ஜன்னல்கள் வடிவமைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

தன்னுடைய வீட்டில் தனக்கு வழங்குகின்ற உணவை இருவரும் பகிர்ந்து சாப்பிட்டு வந்தனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக தன்னுடைய வீட்டில் தொடர்ந்து தங்க முடியாத நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு மற்றொரு வீட்டை எடுத்த ரகுமான் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக புதுவிட்டிற்கு அழைத்து சென்றார். இதற்கிடையே கடந்த 3 மாதங்களாக தம்பியை காணாத ரகுமானின் அண்ணன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து கண்டுபிடிக்க முயற்சி செய்தும் கண்டுபிடிக்க முடியாம‌ல் போனது. இதற்கிடையே சஜிதா மாயமான வழக்கும் கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. சஜிதாவின் பெற்றோர் அவள் இறந்து விட்டதாக கருதினர்.

ஆனால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சாலையில் செல்லும்போது ரகுமானின் அண்ணன் அவரை அடையாளம் கண்டார். சாலையில் கொரோனா காரணமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்தார். தொடர்ந்து ரகுமானை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. இதன் காரணமாக இவர்களின் தலைமறைவு வாழ்க்கை வெளியுலகுக்கு தெரிய வந்தது என்றார். இதன் காரணமாக தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் மற்றவர்களை போன்று தாங்களும் எந்த பிரச்சனையும் இன்றி வெளிப்படையாக வாழமுடியும் என்று தெரிவித்தார். அதுபோல் இருவரும் தங்கள் இருவரின் மத நம்பிக்கையின் அடிப்படையிலேயே மீதியுள்ள வாழ்கையும் மகிழ்ச்சியாக வாழ முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.இருவரும் திருமணம் செய்யும் நேரத்தில் சஜிதாவுக்கு 18-வயது மற்றும் ரகுமானுக்கு-23 வயதும் இருந்தது. தற்போது இந்த தம்பதிக்கு 28 மற்றும் 33 வயது ஆகிறது.

Add your comments to India News