BREAKING NEWS
latest

Wednesday, December 16, 2020

குவைத்திலிருந்து இந்தியாவுக்கு ஒரு கார் பயணம்;சிலிர்க்கவைக்கும் செய்தி தொகுப்பு:


Photo Credit: Monorama

Dec-16,2020

பாகிஸ்தானின் லாகூர் ரயில் நிலையத்தில் டிசம்பர் மாதத்தின் கடும் குளிரில் அவ்வளவு நாட்கள் உடன் பயணித்த பாகிஸ்தான் நண்பரிடம் விடைபெறும் நேரத்தில்..... அவர் நாம் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்ப்போமா.....??? என்று கேட்ட கேள்விக்கு.... மவுனம் மட்டுமே பதில்,தாமஸும் பாபுவும் எதுவும் பேசவில்லை.

புறப்படுவதற்கு முன், அவர் ரயில் நிலையத்தின் தெற்கு பகுதியை நோக்கி தன்னுடைய விரல் நீட்டி "அது முஹம்மது ரபியின் வீடு" என்று கூறினார்.  தாமஸும் பாபுவும்  தலை உயர்த்தி பார்த்தார்கள்.  'தோஸ்தி' ஹிந்தி படத்தின் 'கோய் ஜப் ரஹ்னா பேய்...." என்ற அவருடைய பாடல் டிசம்பர் மாதத்தின் அந்த கடுமையான குளிரில் கூட என் நினைவுக்கு வந்தது. தொடர்ந்து இருட்டையும் குளிரையும் உடைத்தெறிந்து மிட்சுபிஷி காலண்ட்(Mitsubishi Galant) மீண்டும் அதன் இலக்கை நோக்கி விரைந்தது.

மிட்சுபிஷி காலண்ட் ஈராக்-குவைத்( ஈராக் குவைத்தை நாட்டை கைப்பற்றிய நேரத்தில் வானத்தின் நம்பர் பிளேட் அப்படி மாற்றினால் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கபட்டது) பதிவு செய்யப்பட்ட கார் 1990-களின் வளைகுடா போரின் போது, ​​தாமஸ் குவைத்திலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களை கடந்து தனது சொந்த ஊருக்கு ஓட்டி வந்த கார் இதுவே.

தற்போது கார் எந்தவிதமான பயனும் இல்லாமல் அசைக்க முடியாத நிலையில் இருந்தாலும் இந்த வயதான காலத்திலும் தாமஸ் தான் பயன்படுத்திய இந்த காரை விற்காமல் குடும்ப உறுப்பினராக பாதுகாக்க இதுவே காரணம்.  கால் நூற்றாண்டின் உணர்ச்சி ரீதியான தொடர்பின் கதை. 29 ஆண்டுகளுக்குப் பிறகும், தாமஸ் தனது கார் பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் நினைவில் கொள்கிறார்.  மேலும் தாமஸ் ஜோசப், வீட்டை ஒட்டிய ஒரு மூடிய அறையை தயார் செய்து காரை இந்த நாள் வரையிலும் பராமரித்தும் வருகிறார்.

குவைத் மீது படையெடுப்பு:

1990-களின் துவக்கத்தில் மிட்சுபிஷி காலண்ட் காரை தாமஸ் வாங்கும்போது, அதே காரில் குவைத்தில் இருந்து இந்தியா திரும்புவார் என்று கனவில் கூட நினைக்கவில்லை. ஆனால் குவைத் போர் எல்லாவற்றையும் மாற்றியது, ஆகஸ்ட் 1990 இல் சதாம் ஹுசைன் குவைத் மீது படையெடுத்ததின் காரணமாக, இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரின் வாழ்க்கையை அது புரட்டிப்போட்டது. போர் தீவிரமடைந்ததால், அனைவரும் வீடு திரும்பத் தொடங்கினர்.

அந்த நாளில் மறக்கமுடியாத மீட்புப் பணிகளில் ஒன்று ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியர்களை அன்றைய அரசு மீட்ட கதை ஆகும்.  மேலும் இந்த மீட்பு நடவடிக்கையில் இந்தியர்களை பாதுகாப்பாக விமான நிலையம் வரையில் அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்ட பத்தனாதிட்டா பகுதியை சேர்ந்த மாதுன்னி மேத்யூஸ் என்று அழைக்கப்படும்  டையோட்டா சன்னி முக்கிய பங்கு வகித்தார் என்று தாமஸ் கூறுகிறார். மேலும் எந்த நேரத்திலும் தங்களை சுற்றி தொடர்ந்து வெடிக்கும் வெடிகுண்டுகள் மற்றும் பற்றியெரியும் எண்ணெய் வயல் வெளிகளும் வெளிநாட்டவர்களை பயமுறுத்தியது.

பதட்டமான அந்த நாட்கள்:

அந்த நாட்களில் மக்கள் தங்கள் வேலைகளையும் சேமிப்பையும் விட்டுவிட்டு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஈராக்கிற்கு எதிராக இந்தியா ஒருபோதும் எந்தவிதமான நிலைப்பாட்டையும் எடுத்ததில்லை என்பதால், ஈராக் இராணுவம் இந்தியர்களின் மீட்பு நடவடிக்கையை தடுக்கவில்லை. ஆனால் அது போர்,  எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். குவைத் விமான நிலையம் போர் காரணமாக முற்றிலுமாக செயலிழந்த நேரம். அருகிலுள்ள மற்றொரு விமான நிலையம் என்பது ,ஜோர்டானின் "அம்மான்" ஆகும். அந்த நேரத்தில் இந்திய அரசு இந்தியர்களை மீட்க தேவையான  நடவடிக்கைகளை மேற்க்கொண்டது.

ஈராக் அரசாங்கம் அண்டை நாடுகளுக்கு மக்கள் சாலை வழியாக திரும்புவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது. ஆயினும்கூட போர்க்களம் வழியாக இதுபோன்ற பயணம் ஆபத்தானது. மேலும் அந்த நேரத்தில் சாலை வழியாக தங்கள் நாடுகளுக்கு திரும்புவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதிகளைப் பெறுவதும் கடினமான இருந்தது. மேலும் ஈராக்கிலும் குவைத் வாகனங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற கடுமையான கட்டுப்பாடு இருந்தது. அதற்காக தாமஸ் ஈராக் போக்குவரத்துத் துறைக்கு நான்கு முறை செல்ல வேண்டியிருந்தது.  ஈராக் போக்குவரத்துத் துறை அலுவலகம் அமைந்துள்ள 'தூக்' என்ற இடத்திலிருந்து புதிய நம்பர் பிளேட்டைப் தாமஸ் பெற்றார்.

திரும்புவதற்கு தயார் நிலை:

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.  பெரும்பாலனோர் பாகிஸ்தான் நாட்டவர்கள், இவர்களுடன் இந்தியர்களைத் தவிர, ஈரான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களும் சாலை வழியாக சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். தாமசுடன் காரில் காஞ்சிரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பாபு என்ற நபரும் பயணம் செய்தார். மேலும், திரிசூர், கோழிக்கோடு, ஹரிப்பாட் ஆகிய இடங்களை சேர்ந்த ஒரு சிலர் வாகனத்தில் வரத் தயாராக இருந்தனர். தாமஸிடம் அந்த நேரத்தில் கைவசம் இருந்தது 1989 மாடல் மிட்சுபிஷி காலண்ட் கார் ஆகும். இந்த காரில் இந்திய பயணத்திற்கு தயார் ஆனார்கள். அதுவரையிலான தங்கள் சேமிப்புகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு குவைத்தில் இருந்து வெளியேற்றினர்.

இந்திய புறபட்ட கதை:

சாலை வழியாக தங்கள் நாடுகளுக்கு திரும்புவதற்கான அனுமதி கிடைத்த அனைவரும் குவைத்தில் உள்ள அப்பாசியா பகுதியில் சந்தித்தனர்.  ஈராக் படைகளின் கடுமையான சோதனைகள். பதினைந்து வாகனங்கள்  ஒரு குழு  என்ற அடிப்படையில்  பயணிக்க முடிவு செய்தனர். பயணம் அக்டோபர் 14 ஆம் தேதி தொடங்கியது.  குவைத்திலிருந்து இந்தியாவுக்கு சாலை வழியாக திரும்புவதற்கு இரண்டு வழிகள் உள்ளன.  ஒன்று ஈரான்-ஆப்கானிஸ்தான் வழியாகவும் மற்றொன்று ஈராக்-துருக்கி-ஈரான் வழியாகவும். போர் என்பதனால்  நேரடியாக ஈரானுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை, எனவே அனைவரும் துருக்கி வழியாக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியிருந்தது.

ஈராக்கின் குர்திஷ் பகுதிகளைக் கடந்து துருக்கி எல்லைக்கு அருகிலுள்ள ஸாக் பகுதியை சென்றடைந்தது.  பின்னர் அவர்கள் துருக்கியின் தலைநகரான அங்காராவுக்குச் சென்றனர்.அப்போது இந்திய தூதரகத்தில் அதிகாரியாக இருந்த மாதவன்,தாயகம் திரும்பும் இந்தியர்களைப் பார்க்க வந்தார். அது அக்டோபர் மாத இறுதி, குளிர்காலமாக இருந்தது. பனியில் பயணிக்க சங்கிலி டயர்கள் இல்லாததால் பயணம் மிகவும் சிக்கலானது. பயணத்தின் போது செய்திகளைப் பெறுவதற்கான ஒரே வழி இடையில் காணும் ராணுவ வீரர்களை நம்புவதே.  ஈரானுக்கு வந்தபோது உடன் வந்த ஒரு  வாகனம் பழுதடைந்ததால் தெஹ்ரானில் ஒரு சீக்கிய குருத்வாராவில் பழுதுபார்க்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானுக்கு வந்ததும், பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் பயணம் மாற்றப்பட்டது. இடையில் அந்தந்த நாட்டவர்கள் கூட்டத்தில இருந்து பிரிந்து சென்றனர். மீதி சுமார் நானூறு வாகனங்கள் இருந்தது. முகமது நஜிபுல்லா அப்போது ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக இருந்தார். நாடு திரும்பியவர்களின் பாதுகாப்பிற்காக அவர் பயண வழிகள் முழுவதும் பாதுகாப்பு வீரர்களை அனுப்பினார். வரலாற்றில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பேரரசர் அசோகரின் பரந்து விரிந்திருந்த நிலப்பரப்பை இருவரும் ஒருவரையொருவர் வியப்புடன் ரசித்தனர். கைபர் பகுதியை கடக்கும் போது வெளியே செல்ல வேண்டாம் என்று கடுமையான அறிவுறுத்தல் இருந்தது. பழங்குடியினர் பெரும்பான்மையான இந்த பகுதிகளில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருந்ததே இதற்குக் காரணம்.

பாகிஸ்தான் எல்லை:

பாகிஸ்தான் எல்லையில் சட்ட நடவடிக்கைகள் முடித்து பயணத்தின் போது பாகிஸ்தான் இராணுவ பாதுகாப்பு தொடர்ந்தது. ராவல்பிண்டியில் இந்திய தூதரகம் இருந்ததால் தூதரகத்தை பார்க்க முடியவில்லை என்று தாமஸ் கூறினார். தொடர்ந்து  பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர்கள் வாகா எல்லை வரையில் உடன் வந்தனர்.  வாகா எல்லையில் வைத்து இந்தியாவுக்குள் அனுமதிக்க முடியாது என்று பாகிஸ்தான் கூறியது. அந்த நேரத்தில், எங்களுடன் மற்றொரு வாகனத்தில் பயணம் செய்த ராஜீவ் காந்தியின் வகுப்புத் தோழராக இருந்த கோவாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் தலையிட்டு ராஜீவ் உதவிக்கு வந்தார்.

அவரது சொந்த ஊருக்கு புறப்பட்டனர்:

பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி இந்தியாவுக்குள் அமிர்தசரஸில் சில நாட்கள். சீக்கிய வம்சாவளியைச் சேர்ந்த நண்பர்கள் மூலம் சிறப்பு கவனிப்பு, பின்னர் டெல்லியை அடைந்தார். தூதரகம் தொடர்பான ஆவணங்கள் சரி செய்து,ராஜீவ் காந்தியை சந்தித்தார். 113 நாட்கள் நீண்ட பயணத்தை முடித்து பிப்ரவரி 4, 1991 நள்ளிரவில் கேரளா இடையாறன்மூட்டில் உள்ள எங்கள் வீட்டை அடைந்தபோது உறவினர்களும் உள்ளூர்வாசிகளும் ஆச்சரியப்பட்டவர்களில் அடங்குவார்கள்.

போரினால் பாதிக்கப்பட்டு ஐந்து நாடுகளுக்கு இடையே ஒரு பயணம், நம்பமுடியாத அனுபவங்கள், மறக்க முடியாத தருணங்கள். எல்லைகள் காலப்போக்கில் ஆட்சியாளர்களால் பல முறை மீண்டும் மாற்றி எழுதப்பட்டன, ஆனால் பயணம் மனித உறவுகளின் அரவணைப்பு  நம்பிக்கையின் அழிக்க முடியாத எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. தனது பயணத்தில் பல இடையூறுகள் வந்தபோதும், தாமஸ் தனது காரை விற்க விரும்பவில்லை. இந்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்ற வாகனம் என்பதால் சில ஆண்டுகள் ஊரில் காரை பயன்படுத்தினார். மிட்சுபிஷி காலண்ட் கார்  தற்போது ஓய்வெடுத்து வருகிறது.

Editer: arabtamildaily.


Add your comments to குவைத்திலிருந்து இந்தியாவுக்கு ஒரு கார் பயணம்;சிலிர்க்கவைக்கும் செய்தி தொகுப்பு:

« PREV
NEXT »