குவைத் விமான நிலையம் வழியாக பெரும் அளவிலான புகையிலை பொருட்களை கடத்த முயன்ற 4 வங்காளதேச பயணிகள் நேற்றும் இன்றுமாக பிடிபட்டதாக சுங்கத்துறை இன்று மதியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது
Image : பிடிபட்ட புகையிலை பொருட்கள்
குவைத் விமான நிலையத்தில் 4 வங்கதேச பயணிகள் 200 கிலோ மெல்லும் புகையிலையுடன் பிடிபட்டனர்
குவைத் விமான நிலையத்தில் போதைப்பொருளை தடுப்பதற்கான சோதனைகளை தொடந்து நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்ட பொருட்களின் கடத்தலைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, விமான நிலையத்தின் முனையம் 4 (T4) யின் வழியாக நாட்டிற்குள் நுழைய முயற்சி செய்த பயணிகளிடம் இருந்து அதிக அளவு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள்(மெல்லும் புகையிலை) பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
இரண்டு தனிதனியான சம்பவங்களில், மெல்லும் புகையிலையை நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக நான்கு வங்காளதேச பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். நேற்று ஒரு பயணியிடமிருந்து 41 கிலோகிராம் மெல்லும் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. அடுத்த நாளான இன்று மற்ற மூன்று வங்காளதேச பயணிகளிடமிருந்து 159 கிலோகிராம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம், பறிமுதல் செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த அளவு 200 கிலோகிராமை எட்டியுள்ளது.
இதை தொடர்ந்து விமான நிலைய சுங்கத்துறை உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து,பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான அறிக்கைகளை தயார் செய்து, கைது செய்யப்பட்ட நபர்களை சம்பந்தப்பட்ட குற்றப்பிரிவு அதிகாரியிடம் ஒப்படைத்தது. இந்த வழக்கில் குவைத்திற்குள் இந்த புகையிலை பொருட்களை கடத்தி வருவதற்கு உதவி மற்றும் இவற்றை விமான நிலையத்தில் இருந்து பெற்று செல்ல காத்திருந்த மற்ற நபர்களைக் கண்டறிய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து பிடிபட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Kuwait Airport | Customs Checking | Tobacco Seizure