குவைத்தில் தனது மனைவியை திட்டமிட்டு உயிர் போகும் வரையில் சுத்தியலால் அடித்து கொடூரமாக கொன்ற வழக்கில் இந்தியருக்கு இன்று வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது
Image : குவைத் நீதிமன்ற வளாகம்
குவைத்தில் மனைவியை சுத்தியலால் அடித்து கொன்ற வழக்கில் இந்தியருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது
குவைத்தில் தனது மனைவியைக் கொலை செய்ததற்காக இந்தியருக்கு இன்று(11/12/25) வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நயீப் அல்-டஹூம் தலைமையிலான அமர்வு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கொலையாளிக்கும் அவரது மனைவிக்கும் இடையே பணப்பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறில் ஈடுபட்டதன் விளைவாக ஏற்பட்ட விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டுச் செலவுகளுக்கு மற்றும் உணவை வாங்கவும் பணம் சரியாக வழங்காத காரணத்தால், செலவை ஆளுக்கு பாதி என்ற அளவில் சரிசமமாக செலவு செய்யலாம் என்று உயிரிழந்த மனைவி கூறியதால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கணவர் சமரசம் ஆனது மாதிரி நடித்து, சால்மி பாலைவன பகுதிக்கு அழைத்துச் சென்று சுத்தியலால் அடித்து மனைவியை கொலை செய்தார்.
மேலும் உயிர் போகும் வரையில் குற்றவாளி உயிரிழந்த தன்னுடைய மனைவியை தொடர்ந்து சுத்தியலால் தாக்கியதாகவும் குற்றவாளி காவல்துறை விசாரணையில் ஒப்புக்கொண்டிருந்தார். எனவே இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொடூரமான கொலை என்பதை உறுதி செய்த நீதிபதி கணவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். உயிரிழந்த மனைவி மற்றும் குற்றவாளியான கணவன் இருவரும் இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை.
Indian Worker | Killing Wife | Kuwait Court

