BREAKING NEWS
latest

Kuwait Court - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Kuwait Court செய்திகள், கட்டுரைகள், Kuwait Court புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Thursday, February 18, 2021

குவைத்தில் போதைப்பொருள் வழக்கில் இன்று இந்தியருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது

குவைத்தில் போதைப்பொருள் வழக்கில் இன்று இந்தியருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது;இது தொடர்பாக செய்தி மாலையில் வெளியாகியுள்ளது

Image: Kuwait Court

குவைத்தில் போதைப்பொருள் வழக்கில் இன்று இந்தியருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது

குவைத் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா அல்-ஒத்மான் தலைமையிலான குழு இன்று(18/02/21) வியாழக்கிழமை போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தியர் ஒருவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தாக தினசரி சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் வாடிக்கையாளர்களுக்கு போதைப்பொருட்களை நைலான் பையில் நிறைத்து ,நாட்டில் வெவ்வேறான இடங்களில் மறைத்து வைத்து, இருப்பிடத்தை வாட்சப் வழியாக அனுப்பி சம்பந்தப்பட்ட நபருக்கு விற்பனை செய்து வந்ததை வாடிக்கையாக கொண்டு இருந்தார் எனவும், பணத்தை வங்கி கணக்கு லிங் வழியாக பெற்று வந்தார் எனவும் வழக்கு தொடர்பான நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன என்று செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கின் துவக்கத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் மொபைல் போனில் இருந்து இந்த வழக்கு தொடர்பான பல ஆதாரங்கள் கைப்பற்றியதன் அடிப்படையில் வழக்கின் உண்மைகள் தெரியவந்தன எனவும்,குற்றவாளி இந்த புதுமையான முறையினை பயன்படுத்தி 50 ற்கும் மேற்பட்ட போதை பொருள் விற்பனை செய்திருப்பது கண்டறியப்பட்டது என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார் எனவும், மேற்கொண்டு நடத்த விசாரணைக்கு, அவர் பல ஆண்டுகளாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது கண்டறியப்பட்டது எனவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறித்த கூடுதல் தகவல் எதுவும் செய்தியில் தெரிவிக்கப்படவில்லை.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to Search results for Kuwait Court

Friday, July 28, 2023

குவைத்தில் இறுதி நேரத்தில் தமிழரின் தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது:

குவைத்தில் இந்திய தூதரகத்தின் தலையீட்டால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியா, தமிழகத்தை சேர்ந்த அன்புதாசனின் தூக்குத்தண்டனை கடைசி நிமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது தகவல் வெளியாகியுள்ளது

Image : தண்டனை விதிக்கப்பட்ட அன்புதாசன்

குவைத்தில் இறுதி நேரத்தில் தமிழரின் தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது:

இந்திய தூதரகத்தின் தலையீட்டால் குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியா, தமிழகத்தை சேர்ந்த அன்புதாசனுக்கு மன்னிப்பு கேட்க வாய்ப்பு கிடைத்துள்ளது. குவைத்தில் நேற்று(28/07/23) வியாழக்கிழமை காலையில் குடிமகன், எகிப்து நாட்டவர், இலங்கை நாட்டவர் மற்றும் 2 பெதுனிகள்(குடிமக்கள் அல்லாதவர்) உட்பட 5 பேரின் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. குவைத் நாட்டில் 2013, 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட கொலை, தீவிரவாத செயல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்கு குற்றவாளிகளான 5 பேரே இவ்வாறு தூக்கிலிடப்பட்டனர்.

குவைத் மத்திய சிறையில் இவர்களின் தூக்கு தண்டனை நேற்று காலை 7:00 மணிக்கு நிறைவேற்றப்பட்டது. ஆனால் தூக்கிலிடப்பட உள்ளவர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த அன்புதாசன் நடேசனும் சேர்க்கப்பட்டு இருந்தார். 2015-ம் ஆண்டு இலங்கை பெண் கொலை வழக்கில் அன்புதாசன் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். மற்றவர்களுடன் சேர்ந்து அன்புதாசனுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை அறிந்த தூதரக ஊழியர்கள் அவரை நேரில் சந்தித்தபோது கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணின் குடும்பத்திடம் இரத்தப்பணம் செலுத்தி மன்னிப்பு கோரும் நடவடிக்கைகளை நாட்டில் குடும்பத்தினர் செய்து வருவதாக அவர் கூறுகிறார். ஆனால் குடும்பத்தினர் குவைத் அதிகாரிகளுக்கோ, இந்திய தூதரகத்திற்கோ அத்தகைய நடவடிக்கை குறித்து தெரிவிக்கவில்லை.

இதையறிந்த தூதரக அதிகாரிகள் உடனடியாக தொழிலாளர் துறை தலைவர் ஆனந்த சுப்ரமணிய அய்யருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தூதரக அதிகாரிகள் தமிழகத்தில் உள்ள அன்புதாஸின் சகோதரர் சங்கரன் நடேசனை தொடர்பு கொண்டனர். பிறகு இரத்தப்பணம் செலுத்தி படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணின் குடும்பத்தினர் பொதுமன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்த ஆவணங்களை பெற்றனர். தொடர்ந்து இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா தலைமையில், குவைத்தின் உயர் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, மன்னிப்பு கோரி விண்ணப்பிக்க தூக்கு தண்டனையை காலதாமதம் செய்ய கோரிக்கை விடுத்தனர்.

இதன் அடிப்படையில், அன்புதாசின் தூக்கு தண்டனை கடைசி நிமிடத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. முன்னர் அன்புதாசன் உட்பட ஏழு பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் இவர் உட்பட இருவரின் மரணதண்டனை நீட்டி வைக்கப்பட்டுள்ளது. தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட மற்றொரு நபர் வங்காளதேச நாட்டவர் என்று தெரிகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Court | Indian Sentenced | Indian Worker

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to Search results for Kuwait Court

Thursday, December 11, 2025

குவைத்தில் மனைவியை சுத்தியலால் அடித்து கொன்ற வழக்கில் இந்தியருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது

குவைத்தில் தனது மனைவியை திட்டமிட்டு உயிர் போகும் வரையில் சுத்தியலால் அடித்து கொடூரமாக கொன்ற வழக்கில் இந்தியருக்கு இன்று வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது

Image : குவைத் நீதிமன்ற வளாகம்

குவைத்தில் மனைவியை சுத்தியலால் அடித்து கொன்ற வழக்கில் இந்தியருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது

குவைத்தில் தனது மனைவியைக் கொலை செய்ததற்காக இந்தியருக்கு இன்று(11/12/25) வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நயீப் அல்-டஹூம் தலைமையிலான அமர்வு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கொலையாளிக்கும் அவரது மனைவிக்கும் இடையே பணப்பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறில் ஈடுபட்டதன் விளைவாக ஏற்பட்ட விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டுச் செலவுகளுக்கு மற்றும் உணவை வாங்கவும் பணம் சரியாக வழங்காத காரணத்தால், செலவை ஆளுக்கு பாதி என்ற அளவில் சரிசமமாக செலவு செய்யலாம் என்று உயிரிழந்த மனைவி கூறியதால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கணவர் சமரசம் ஆனது மாதிரி நடித்து, சால்மி பாலைவன பகுதிக்கு அழைத்துச் சென்று சுத்தியலால் அடித்து மனைவியை கொலை செய்தார்.

மேலு‌ம் உயிர் போகும் வரையில் குற்றவாளி உயிரிழந்த தன்னுடைய மனைவியை தொடர்ந்து சுத்தியலால் தாக்கியதாகவும் குற்றவாளி காவல்துறை விசாரணையில் ஒப்புக்கொண்டிருந்தார். எனவே இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொடூரமான கொலை என்பதை உறுதி செய்த நீதிபதி கணவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். உயிரிழந்த மனைவி மற்றும் குற்றவாளியான கணவன் இருவரும் இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை.

Indian Worker | Killing Wife | Kuwait Court

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to Search results for Kuwait Court

Thursday, March 11, 2021

குவைத்தில் நடைமுறையிலுள்ள ஊரடங்கு உத்தரவு நீக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

குவைத்தில் நடைமுறையிலுள்ள ஊரடங்கு உத்தரவு நீக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்;வழக்கு தொடர்பாக தீர்ப்பு மார்ச்-17 அன்று அளிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது

Image : Kuwait Court

குவைத்தில் நடைமுறையிலுள்ள ஊரடங்கு உத்தரவு நீக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

குவைத்தில் தற்போது விதிக்கப்பட்ட பகுதிநேர ஊரடங்கு உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அப்துல் ஹாதி தாக்கல் செய்த மனுவில், பல அமைப்புகள்,சலூன் கூட்டமைப்பு மற்றும் சிறு தொழில் முனைவோர் சங்கம் ஆகியவை இதில் கட்சி சேர்ந்தனர். மேலும் ஊரடங்கு உத்தரவு வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் எந்த பலனும் அளிக்கவில்லை என்றும் அவர்கள் தாக்கல் செய்துள்ளன மனுவில் தெரிவித்தனர். இதன் மூலம் சாதாரண மக்களுக்கு ஏற்படுகின்ற கஷ்ட நஷ்டங்களை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் மனுதாரர்கள் தக்கல் செய்த வழக்கில் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு மார்ச்-17 அன்று அளிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அதே நேரத்தில், நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரையில் தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை நிறுத்தி வைப்பதற்கான மனுதாரர்கள் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to Search results for Kuwait Court