நேரம் அதிகாலை 02:37...இந்தியா மாதிரி கிடையாது இந்த ஊர்,துபாய் வாழ் இந்தியப் பெண் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது
Image: வீடியோ வெளியிட்ட இந்திய பெண்
அதிகாலை 2.30 மணிக்குப் பிறகு ஒரு இளம் பெண் துபாய் சாலையில் தனியாக நடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு பலரும் பலவிதமான கருத்து தெரிவித்துள்ளனர்.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வரும் இந்த காலகட்டத்தில், ஒரு பெண் இரவில் பயமின்றி சாலையில் தனியாக நடக்க முடியுமா...? இந்திய சூழலில் இது எளிதான காரியம் அல்ல. ஆனால் துபாய் உலகின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு இளம் இந்திய பெண்ணின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
அதிகாலை 2.30 மணிக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த வீடியோ, துபாயில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விவாதத்தைத் தொடங்கியுள்ளது. அதிகாலையில் துபாய் நகரத்தின் வழியாக ஒரு இந்தியப் பெண் தனியாக நடந்து செல்லும் வீடியோ இதுவாகும். துபாய் உலகின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகும் என்பதற்கு சான்றாக இந்த வீடியோவை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். இந்த வைரல் வீடியோவில் உள்ள பெண்ணின் த்ரிஷா ராஜ் என்பதாகும்.
அந்த வீடியோவில், த்ரிஷா அதிகாலை 2:30 மணிக்கு துபாய் தெருக்களில் தனியாக நடப்பது எப்படி பாதுகாப்பாக உணர்ந்தேன் என்று பேசுகிறார். வீடியோவில் இப்போது அதிகாலை 2.37 மணி என்றும், சாலையில் தனியாக நடந்து வருவதாகவும் கூறுகிறார். உலகிலேயே துபாயில் மட்டுமே இது சாத்தியம் என்றும், துபாய்க்கு வாருங்கள் என்றும் அந்தப் பெண் வீடியோவில் கூறுகிறார். இங்கு பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் த்ரிஷா கூறுகிறார்.
துபாயில் பெண்களின் பாதுகாப்பை தனது சொந்த நாடான இந்தியாவுடன் ஒப்பிட்டு விளக்குகிறார் த்ரிஷா ராஜ். இந்தியாவில், இதுபோன்ற நேரங்களில் தனியாக வெளியே செல்வது ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, ஆண்களின் துணை பொதுவாக தேடவேண்டியது அவசியம். ஆனால் துபாய் இதிலிருந்து வித்தியாசமான சூழ்நிலையைக் காட்டுகிறது என்று அவர் கூறினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் விரைவாக வைரலானது. உலகில் வெவ்வேறு நகரங்களில் உள்ள பாதுகாப்பு குறித்து அந்தந்த நாடுகளில் வசிக்கின்ற பலரும் தங்கள் அனுபவங்களைப் பற்றி பலர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே துபாயின் பாதுகாப்பைப் பாராட்டி பலரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
Indian Girl | Dubai Road | Girl Safety

