BREAKING NEWS
latest

Indian People - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Indian People செய்திகள், கட்டுரைகள், Indian People புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Tuesday, July 22, 2025

குவைத்தின் மக்கள் தொகை 5 மில்லியனைத் தாண்டியுள்ளதாக சிவில் தகவலுக்கான பொது ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

குவைத்தின் மொத்த மக்கள் தொகை 5 மில்லியனை தாண்டியுள்ள நிலையில் இந்திய சமூகத்தினர் தொடந்து முதல் இடத்தில் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன

Image : குவைத் இந்திய தூதரக வளாகம்

குவைத்தின் மக்கள் தொகை 5 மில்லியனைத் தாண்டியுள்ளதாக சிவில் தகவலுக்கான பொது ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

குவைத்தின் மக்கள் தொகை 5 மில்லியனைத் தாண்டியுள்ளதாக சிவில் தகவலுக்கான பொது ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் முதல் பாதியின் இறுதியில் மக்கள் தொகை 5.098 மில்லியனை எட்டியுள்ளது. அதிகாரசபை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர், அதாவது 1.55 மில்லியன் பேர் குடிமக்கள் ஆவார்கள். அதேபோல் நாட்டில் 3.547 மில்லியன் வெளிநாட்டினரும் வேலையின் நிமித்தமாக வசித்து வருகின்றனர்.

இவர்களில் 29 சதவீதம் பேர்,அதாவது 1.036 மில்லியன் பேர் இந்தியர்கள். வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியர்களே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதற்க்கு அடுத்த படியாக 6,61,318 பேருடன் எகிப்தியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் 15 வயதுக்குட்பட்டவர்கள், 80 சதவீதம் பேர் 15 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் மட்டுமே என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மக்கள் தொகையில் 61 சதவீதம் பேர் ஆண்கள்,மொத்தம் 3.09 மில்லியன் ஆண்கள் மற்றும் 2 மில்லியன் பெண்கள். நாட்டின் தொழிலாளர் துறையில் மொத்தம் 2.283 மில்லியன் மக்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 5,19,989 பேர் அரசுத் துறையிலும், 1.763 மில்லியன் பேர் தனியார் துறையிலும் பணிபுரிகின்றனர். அரசுத்துறையில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுத் தொழிலாளர்களாக எகிப்து நாட்டவர்கள் 7.2 சதவீதம் பேருடன் முதலிடத்திலும், இந்திய தொழிலாளர்கள் 4.51 சதவீதம் பேருடன் இரண்டாது இடத்தில் உள்ளனர். அரசுத் துறையில் உள்ள மொத்த தொழிலாளர்களில் 75.57 சதவீதம் பேரும் குடிமக்கள் ஆவார்கள். தனியார் துறையில் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களாக 31.2 சதவீதம் பேருடன் இந்தியர்கள் முதல் இடத்திலும், எகிப்தியர்கள் 24.8 சதவீதம் பேருடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

அதேபோல் வீட்டு வேலைத்துறையில் அதிக எண்ணிக்கையில் 10 தேசிய இனத்தவர்கள் உள்ளனர். நாட்டில் உள்ள மொத்த 8,22,794 வீட்டுப்பணியாளர்களில்,58.2 சதவீதம் பேர் பெண்கள். இந்தத் துறையில் அதிக எண்ணிக்கையிலான இந்தியத் தொழிலாளர்கள் 41.3 சதவீதம் பேர் வேலை செய்கின்றனர். அடுத்ததாக 17.9 சதவீத பிலிப்பைன்ஸ் நாட்டவர்களும் 17.6 சதவீத இலங்கை நாட்டவர்களும் பணிபுரிவதாகவும் அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait+Population | Gulf Workers | Indian People

Add your comments to Search results for Indian People

Thursday, January 21, 2021

குவைத்தில் இந்திய இளைஞர் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார்,வயது-31 மட்டுமே என்பது குறி்ப்பிடத்தக்கது

குவைத்தில் இந்திய இளைஞர் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார்,வயது-31 மட்டுமே என்பது குறி்ப்பிடத்தக்கது,மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் வைத்து இறந்துவிட்டார்

குவைத்தில் இந்திய இளைஞர் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார்,வயது-31 மட்டுமே என்பது குறி்ப்பிடத்தக்கது

குவைத்தில் ஒரு இளம் இந்திய பொறியியலாளர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி இன்று(21/01/21) வெளியாகியுள்ளது. இவர் இந்திய,கேரளா மாநிலம், திருவனந்தபுரம்,வர்கலா பகுதியில் உள்ள நஜீர் உசேன் மகனான இஷான் நசீர்(வயது-31) இன்று மாரடைப்பால் திடிரென உயிழந்தார். அவர் குவைத்தில் உள்ள HOT நிறுவனத்தின் சிவில் திட்டத்தில்,குவைத்தின் ஷர்க்(Sharq) பகுதியில் மதிப்பீட்டு பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.

இன்று காலையில் வேலையின் போது அவருக்கு திடிரென நெஞ்சுவலி ஏற்பட்டது, உடனடியாக ஆம்புலன்ஸ்யில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் வைத்து இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.இவரது மனைவி ஷஸ்னா-ஷா குவைத்தில் உடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சட்ட நடவடிக்கைகளுக்காக உடல் ஃபர்வானியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மரணமடைந்த இஷான் இதற்கு முன்பு NBTC கம்பெனியில் வேலை செய்து வந்தார் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Death | Today News | Kerala People

Add your comments to Search results for Indian People