BREAKING NEWS
latest

Health - Arab Tamil Daily - The 24×7 Gulf News

Latest Health News, Articles, Health Images, Videos, Full-Time GCC Arabic News in Tamil, Film, Entertainment, Politics, and Sports Updates from Arab Tamil Daily.

Monday, December 28, 2020

வளைகுடாவில் வாழும் உறவுகளின் முதுப்புறத்தில் கரும்புள்ளிகள் ஏற்படுவதை எளிதாக நீக்கலாம்

நாம் பிறந்து வளர்ந்த ஊரில் இருக்கும்போது எந்தவிதமான அலர்ஜியும் நமது உடம்பில் வருவது இல்லை. ஆனால் வளைகுடா நாடுகளில் வேலைக்கு வந்து சில மாதங்களில் முதுப்புறத்தில் சிறிய பருக்கள் போன்று தொடர்ந்து வருகிறது. பின்னர் முதுப்புறம் முழுவதும் அசிங்கமாக இருக்கும். நாம் பலவிதமான மருந்துகள் பயன்படுத்தியும் அது மறையாது அல்லது நிரந்தரமாக உடம்பில் இருந்து போகாது இதை எளிதாக முற்றிலுமாக நீக்க முடியும், மேலும் நமது முதுகின் பின்புறம் நம்முடைய இயற்கையான உடல் நிறத்திற்கு மாறும்.

இதற்கு எந்தவிதமான செலவும் இன்றி நம்முடைய ஊரில் கிடைக்கும் இரண்டு பொருட்களை கொண்டு எளிதாக தீர்வு காண முடியும். தாயகத்தில் இருந்து வேலைக்கு செல்லும் நண்பர்கள் இதை தயார் செய்து எடுத்துச் செல்லாம், ஏற்கெனவே அங்கு இருக்கும் உறவுகள் தாயகத்திற்கு வந்து செல்லும்போது தயார் செய்து எடுத்துச் செல்லவும்.

தேவையான பொருட்கள்:

1) கஸ்தூரி மஞ்சள் (அல்லது) சாதாரண மஞ்சள் காயவைத்தது

2) வேப்பிலை காயவைத்தது

செய்முறை:

முதலில் வேப்பிலையை கொத்தாக பிடுங்கி இரண்டு அல்லது மூன்று நாட்கள் நன்றாக வெயிலில் காயவைக்க வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு (ஒரு அளவுக்காக சொல்கிறேன்) 250 கிராம் காயவைத்த வேப்பிலை எடுத்தால், 50 கிராம் மஞ்சள் என்ற விகிதத்தில் எடுக்க வேண்டும். மேல் குறிப்பிட்ட அளவுகளில் உங்களுக்கு எவ்வளவு தேவையோ அதை மிக்சியில் போட்டு மிளகாய் போடி போன்று நன்றாக பொடித்து எடுக்க வேண்டும். இதை தண்ணீர் இல்லாத நன்றாக காயவைத்த டப்பாவில் போட்டு வைத்து கொள்ளலாம். சரியான முறையில் தயார் செய்தால் வருடங்களுக்கு கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.

பயன்படுத்தும் முறை:

குளிப்பதற்கு குறைந்தது 1 மணி நேரத்திற்கு முன்பு நம்முடைய முதுகுப்புறம் முழுவதும் என்றால் சாதாரண தேன்கரண்டிக்கு இரண்டு கரண்டிகள் எடுத்து ஒரு சிறிய டப்பாவில் போட்டு அந்த பொடி முங்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வையுங்கள். அது அப்படியே ஊறியபிறகு சற்று சொரசொரப்பாக தான் இருக்கும், இதில் மீண்டும் தண்ணீர் சேர்க்க கூடாது.

நீங்கள் சாதாரணமாக குளிப்பது போன்று சோப்பு தேய்த்து குளித்து முடித்த பிறகு நீங்களோ அல்லது உங்கள் நண்பர்கள் மூலமாககவோ முதுப்புறத்தில் இதை நன்றாக தேய்த்து விட்டு 10 நிமிடங்கள் இடைவெளி விட்டு தண்ணிர் மட்டுமே உடலில் ஊற்ற வேண்டும். மீண்டும் சோப்பு தேய்க்க கூடாது. நீங்கள் தினமும் இதை தொடர்ந்து செய்து வந்தால் ஒரே வாரத்தில் நன்றாக மாற்றங்கள் தெரியும், இரண்டு வாரங்களில் முற்றிலுமாக கரும்புள்ளிகள் நீங்கும்.

இதன் பிறகு வாரத்தில் ஒன்றோ அல்லது  இரண்டு நாட்கள் விருப்பப்படி தொடர்ந்து உபயோகித்து வந்தால் இந்த பிரச்சினை ஒருபோதும் உங்கள் உடலில் வாராது 100 % சதவீதம் பலன் தருகிறது. இது என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் நேரடியாக பதிவு. பெண்கள் முகத்திலும் பயன்படுத்தலாம்.

(Note: மஞ்சள் கலந்து உள்ளதால் முகத்தில் மட்டும் ஆண்கள் தேய்க்க வேண்டாம்)

மீண்டும் மற்றொரு பதிவில் மீண்டும் சந்திக்கலாம்......

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to Health

Tuesday, November 26, 2019

குவைத்தில் சர்க்கரை நோய்(நீரிழிவு நோய்) உள்ளவர்கள் வேலை செய்ய தடை விழும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன:

குவைத்தில் சர்க்கரை நோய்(நீரிழிவு நோய்) உள்ளவர்கள் வேலை செய்ய தடை விழும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன:


குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒவ்வொரு வருடமும் திருத்தப்பட்ட குவைத்தில் வேலைக்காக வெளிநாட்டு தொழிலாளர்கள் நுழைய தடைசெய்யப்பட்ட நோய்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம், இந்நிலையில் அடுத்த சில தினங்களில் புதிதாக வெளியாகயுள்ள பட்டியில் நீரிழிவு எனபடும் சர்க்கரை நோயும்(Diabetic) இடம்பெறும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

சாதாரணமாக காசநோய், ஹெபடைடிஸ் பி ,
ஹெபடைடிஸ் சி எனபடும் மஞ்சள்காமாலை, எச்.ஐ.வி எனபடும் எய்ட்ஸ் போன்ற 28 வகையான தொற்று நோய்கள் உள்ளவர்கள்  குவைத்தில் வேலைக்காக நுழைய தடை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த புதிய செய்தி வெளியாகியுள்ளது. செய்தி குவைத் அரபு செய்தி தளத்திலிருந்து.

இது ஒரு தொற்றுநோய் இல்லை என்றாலும்  பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலையை எளிதாக நலிவடைய செய்யும் என்றும், மருத்துவ செலவுகள் அதிகமாகும் என்பதாலும் இந்த முடிவு என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


Reporting by Kuwait tamil pasanga Team 
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to Health