BREAKING NEWS
latest

Labor Law - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Labor Law செய்திகள், கட்டுரைகள், Labor Law புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Friday, June 21, 2019

குவைத்தில் நேற்று நடந்த சோதனையில் 120 பேர் கைது;கடந்த மூன்று நாட்களில் மட்டும் 874 பேர் வரையில் அதிரடி கைது:


குவைத்தில் நேற்று நடந்த சோதனையில் 120 பேர் கைது;கடந்த மூன்று நாட்களில் மட்டும் 874 பேர் வரையில் அதிரடி கைது:
குவைத்தில் ரம்ஜான் முடிந்த நிலையில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள நபர்கள் நாடுகடத்தும் நடவடிக்கைகள் தொடர் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து குவைத்தில் கடந்த மூன்று தினங்களாக சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள நபர்களை கண்டறியும்  சோதனையில் Jleeb Al-Shuyoukh‌‌ மற்றும் Salmiya பகுதியில் 18/06/19 நடந்த சோதனையில் 522 பேரும்,Bneid Al-Gar, Sharq மற்றும் Ahmadi பகுதியில் 17/06/19 நடந்த சோதனையில் 232 கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று குவைத்தின் Kabd, Sulaibiya மற்றும் Jahra தொழிற்துறை பகுதியில் நடந்த சோதனையில் 120 பேர் கைது செய்யப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த மூன்று நாட்களில் இதுவரையில் 874 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

நேற்று கைது செய்யப்பட்ட நபர்கள் விபரங்கள் பின்வருமாறு:

1) 20 expired residencies
2) 10 civil cases
3) 9 vehicles seized
4) 3 drugs cases 
5) 4 hawkers
6) 12 absconding cases
7) 43 without identifications
8) 57 traffic violations
9) 58 violating labor law 
மேலும் 587 நபர்கள் ஆவணங்கள் சரிபார்த்து பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்று செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை வரும் நாட்களில் தொடரும் என்றும் எனவே குவைத் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்கள் குவைத் அடையாள அட்டைகள் மற்றும் ஓட்டுநர்கள் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும் என்றும், தேவையற்ற இன்னல்களை தவிர்க்கவும் என்று குவைத் உள்துறை அமைச்சகம் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்.

Reporting by Kuwait tamil pasanga team.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to Search results for Labor Law

Wednesday, July 22, 2026

குவைத்தில் உங்களுடைய வேலைவாய்ப்பு ஒப்பந்தம் எந்தெந்த சூழ்நிலையில் முடிவுக்கு வரும் என்பது குறித்து மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது:

குவைத் மனிதவள ஆணையம் வெளியிட்ட விழிப்புணர்வுப் பதிவு ஒன்றில் தொழிலாளர் சட்ட விதிகளின்படி வேலைவாய்ப்பு ஒப்பந்தம் எந்தெந்த சூழ்நிலையில் முடிவுக்கு வரும் என்பது குறித்து விளக்கத்தை அளித்துள்ளது

Image : குவைத் திறந்த வெளி தொழிலாளர்கள்

குவைத்தில் உங்களுடைய வேலைவாய்ப்பு ஒப்பந்தம் எந்தெந்த சூழ்நிலையில் முடிவுக்கு வரும் என்பது குறித்து மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது:

குவைத் மனிதவள ஆணையம் இன்று(22/07/26) புதன்கிழமை வெளியிட்ட விழிப்புணர்வுப் பதிவு ஒன்றில், தொழிலாளர் சட்ட விதிகளின்படி வேலைவாய்ப்பு ஒப்பந்தம் எந்தெந்த சூழ்நிலையில் முடிவுக்கு வரும் என்பது குறித்து விளக்கத்தை அளித்துள்ளது. இதில், சட்டத்தின் அடிப்படையில் ஒப்பந்தம் தானாகவே முடிவுக்கு வரும் சூழல்கள் மற்றும் வேலையளிப்பவர் மற்றும் தொழிலாளி ஆகிய இரு தரப்பினரின் உரிமைகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட சூழல்களில் தொழிலாளியின் பணியை முடிவுக்குக் கொண்டு வரும் உரிமை வேலையளிப்பவருக்கு(முதலாளிக்கு) உண்டு என்று ஆணையம் விளக்கியுள்ளது. இதில், காலவரையற்ற ஒப்பந்தங்களில் உரிய அறிவிப்புக் காலத்தைக்(Notice Period) கடைப்பிடித்து பணிநீக்கம் செய்வது அல்லது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தீவிரமான குற்ற செயல்களில் ஈடுபட்ட காரணங்களுக்காகப் பணிநீக்கம் செய்வது ஆகியவை அடங்கும். அதேவேளையில், பணிநீக்க முடிவு தவறானது என்று கருதினால், தொழிலாளர் சட்டத்தின் 41, 44 மற்றும் 46-வது பிரிவுகளின்படி மேல்முறையீடு செய்வதற்கான உரிமை அத்தொழிலாளிக்கு உண்டு எனவும் விளக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் உரிமை தொழிலாளிக்கு உண்டு என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது. தொழிலாளர் சட்டத்தின் 48-வது பிரிவின்படி, வேலையளிப்பவர்(Sponsor) ஒப்பந்தம் அல்லது தொழில் சட்டத்தை மீறுதல், முதலாளி அல்லது அவரது நிறுவனத்தின் துணை அதிகாரிகளின் தாக்குதல் அல்லது தொழிலாளியின் பாதுகாப்பு அல்லது ஆரோக்கியத்திற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் போன்ற குறிப்பிட்ட நிகழ்வுகளில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வேலையை விட்டு விலகவும், அதே சமயம் பணிக்கால நிறைவுக்கான ஊக்கத்தொகையைப்(End Of Service Bonus) பெறவும் அவருக்கு உரிமை உண்டு.

அதேபோல் சில குறிப்பிட்ட சூழல்களில் வேலைவாய்ப்பு ஒப்பந்தம் தொழிலாளர் சட்டத்தின் 49 மற்றும் 50-வது பிரிவுகளின்படி தானாகவே முடிவுக்கு வருகிறது என்றும் ஆணையம் விளக்கியுள்ளது. இதில் தொழிலாளியின் மரணம், வேலை செய்ய இயலாமைக்கான ஆதாரம், மருத்துவ விடுப்பு முழுவதையும் பயன்படுத்திய பிறகும் தொடரும் நோய், நிறுவனத்தை நிரந்தரமாக மூடுதல் அல்லது தொழிலாளிக்கு வேலையளிப்பவர் திவாலானதாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும் இறுதித் தீர்ப்பு ஆகியவை சூழ்நிலைகளில் சட்டத்தின் செயல்பாட்டின் மூலம் ஒப்பந்தம் முடிவடைகிறது..

Kuwait Worker | Labor Law | Kuwait Workers

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to Search results for Labor Law