குவைத்தின் மத்திய சிறை வளாகத்தில் இன்று காலையில் அரசு வழக்கறிஞர் மற்றும் சம்மந்தப்பட்ட மற்ற துறைகளின் அதிகாரிகள் முன்னிலையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஏழு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்
Image: குவைத் மத்திய சிறை
குவைத்தில் 7 குற்றவாளிகளுக்கு இன்று அதிகாலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டன
குவைத்தின் மத்திய சிறை வளாகத்தில் இன்று காலையில்,அரசு வழக்கறிஞர் மற்றும் சம்மந்தப்பட்ட மற்ற துறையின் அதிகாரிகள் முன்னிலையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஏழு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர். இதில் மூன்று பேர் குவைத் நாட்டினர், இரண்டு பேர் ஈரானியர்கள் மற்றும் இரண்டு பேர் வங்கதேச நாட்டவர் ஆவார்கள். இவர்களில் மூன்று குவைத் நாட்டினர் மற்றும் இரண்டு வங்கதேச நாட்டவர்கள் கொலைக் குற்றவாளிகள் என்றும், இரண்டு ஈரானியர்கள் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் என்றும் குவைத் குற்றவியல் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.
கடந்த ஞாயற்றுக்கிழமை எட்டு பேருக்கு இன்று(11/09/25) வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருப்பதாக நமது தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இருப்பினும், குவைத் நாட்டைச் சேர்ந்த ஃபஹத் முகமது என்ற குற்றவாளிக்கு இவரால் கொலை செய்யபட்ட நபரின் உறவினர்கள் மன்னிப்பு வழங்க முடிவு செய்ததை அடுத்து, இன்று காலையில் கடைசி நிமிடத்தில் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேசமயம் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களுக்கு வழங்க தேவையான இரண்டு மில்லியன் குவைத் தினார்கள்(20 லட்சம் தினார்கள்) இரத்தப் பணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் சேகரிக்கத் தவறியதைத் தொடர்ந்து அப்துல் அஜீஸ் அல்-அஸ்மி என்ற குவைத் நாட்டவரின் மரண தண்டனையும் இன்று நிறைவேற்றப்பட்டது. குவைத் சட்டம் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின்படி மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Today Morning | Executed Kuwait | Central Jail