BREAKING NEWS
latest

Indian Workers - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Indian Workers செய்திகள், கட்டுரைகள், Indian Workers புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Tuesday, January 19, 2021

குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 130,000 இருந்து 180,000-ஆக உயர்ந்துள்ளது

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை 180,000 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் தங்களின் வேலை அனுமதி பாத்திரத்தை(Work Permit) புதுப்பித்து நாட்டில் தொடர்ந்து வசிக்கவோ அல்லது அபராதம் செலுத்தி நாட்டை விட்டு வெளியேறவோ உள்துறை அமைச்சகம் கடந்த இரண்டு மாதங்களாக அறிவுறுத்தி வருகிறது.

கடந்த டிசம்பர்- 1 முதல் டிசம்பர்-31வரையில் அபராதத்துடன் கூடிய பொதுமன்னிப்பு முதலில் அறிவிக்கப்பட்டது, அனால் மரபணு மாற்ற கொரோனா பரவல் காரணமாக விமான நிலையம் மூடப்பட்ட நிலையில் இப்படிப்பட்ட நபர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இந்த பொதுமன்னிப்பு ஜனவரி-31 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வாய்ப்புகளை பெரும்பாலான மக்கள் முழுமையாகப் பயன்படுத்துவதில்லை என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

கோவிட் வைரஸுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக குவைத் 35 நாடுகளுக்கான நேரடியாக விமானங்களை நிறுத்தியுள்ளது, இதற்கு ஒரு முக்கியமான காரணமாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விசாக்களை புதுப்பிக்க அல்லது தாயகம் திரும்புவதற்கான காலக்கெடுவை ஜனவரி 31 வரை உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளதை மக்கள் பயன்படுத்தலாம். ஆனால் பொதுமன்னிப்பு அறிவித்து 50 நாட்கள் கடந்த நிலையிலும் 2500 வெளிநாட்டவர்கள் மட்டுமே இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டனர் என்றும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு  காரணங்களால் கடந்த ஆகஸ்ட் முதல் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள நபர்களை கண்டறிய சோதனைகள் நடக்காததும்,குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை 130,000 இருந்து 180,000 உயர்வதற்கு காரணமாக அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kuwait Workers | Kuwait amnesty | Indian Workers

Add your comments to Search results for Indian Workers

Tuesday, July 22, 2025

விசா மோசடிக்கு எதிராக குவைத் கடுமையான நடவடிக்கையை தொடங்கியது

குவைத்தின் பிரபல தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் சட்டவிரோதமான விசா விற்பனை ஆட்கடத்தல் தொடர்பான போலி முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது

Image : ஷேக் ஃபஹத் யூசப்

விசா மோசடிக்கு எதிராக குவைத் கடுமையான நடவடிக்கையை தொடங்கியது

குவைத்தின் பிரபல தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் சட்டவிரோதமான விசா விற்பனை மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான செயல்களுக்கு எதிராக உள்துறை அமைச்சகம் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருவதாக அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி இன்று செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் யூசப்பின் உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, உள்துறை அமைச்சகத்தில் உள்ள குடியிருப்பு விவகார புலனாய்வுத்துறை அதிகாரிகள் சிறப்புத் திட்டங்களைத் தயாரித்து வருகிறது. தற்போது, விசா வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களும், இதற்காக போலி உரிமங்களை கைவசம் வைத்திருப்பவர்களும் புலனாய்வுத்துறையின் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் கண்டுபிடிக்கப்பட்டு சட்டப்பூர்வமாகக் கையாளப்படுவார்கள் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், யாரும் அநியாயமாக தண்டிக்கப்பட மாட்டார்கள் என்றும், இந்த குற்றத்துக்கு பொறுப்பானவர்கள் யாரும் சட்டத்திலிருந்து தப்ப முடியாது என்றும் வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.

விசா வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஸ்பான்சர்கள் மற்றும் முகவர்களைக் கண்டுபிடிக்க அமைச்சகம் இனிமுதல் ஒரு புதிய முறையைப் பின்பற்ற உள்ளது. அதன்படி குடியிருப்புச் சட்டத்தை மீறி வேலை செய்பவர்கள் பிடிபட்டால், விசா வழங்கிய நபர்களின் தகவல்கள் பிடிபட்ட அவர்களிடமிருந்து சேகரிக்கப்படும், பின்னர் முகவர்கள் கண்காணிக்கப்படுவார்கள், ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள். இதற்கிடையில், கடந்த ஆண்டு மனித கடத்தல் தொடர்பாக இயற்றப்பட்ட சட்டம் கடுமையான தண்டனைகளை வழங்குகிறது.

சட்டவிரோதமான விசா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10,000 தினார் வரை அபராதமும் விதிக்க சட்டம் வகை செய்கிறது. கடத்தப்பட்ட நபர்கள் மற்றும் விசாக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அபராதம் அதிகரிக்கும். குற்றவாளி அரசு ஊழியராக இருந்தால் தண்டனை இரட்டிப்பாகும் என்றும் சட்டம் கூறுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Worker Visa | Indian Workers | Visit Visa

Add your comments to Search results for Indian Workers

Monday, July 21, 2025

குவைத்தில் சட்டவிரோதமாக விசா விற்பனை செய்த இந்தியர்கள் உட்பட்ட கும்பல் சிக்கியுள்ளது

குவைத்தில் 350 தினார் முதல் 1200 தினார் வரை பணம் வசூலித்து விசா விற்பனை மற்றும் ஆட்கடத்தல்களை செய்த இந்தியர்கள் உட்பட்ட கும்பல் கைது

Image : பிடிபட்ட ஆள்கடத்தல் கும்பல்

குவைத்தில் சட்டவிரோதமாக விசா விற்பனை செய்த இந்தியர்கள் உட்பட்ட கும்பல் சிக்கியுள்ளது

குவைத்தில் இந்தியர்கள் உட்பட்ட விசா விற்பனை மற்றும் சட்டவிரோதமாக ஆட்கடத்தல்களை செய்த கும்பல் கைது செய்யப்பட்டனர். இந்தக் கும்பலை குவைத்தின் குடிவரவுத்துறையின் குற்றப் புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது. 4 நிறுவனங்களைச் சொந்தமாகக் கொண்டவரும் மற்றும் சுமார் 25 நிறுவனங்களில் கையெழுத்திடும் அதிகாரம் கொண்ட ஒரு குடிமகனின் பெய‌ரில் விசா விற்பனை மற்றும் கடத்தலை இவர்கள் நடத்தி வந்தனர்.

மேலும் வெளியாகியுள்ள செய்தியில் விசாரணையின் போது நாட்டிற்கு வெளியே இருந்தும் மற்றும் நாட்டிற்க்கு உள்ளேயும் தங்கியிருந்த பல தொழிலாளர்கள் இவர்களுடைய நிறுவனத்தின் கீழ் அவர்களின் விசாக்களை சட்டவிரோதமாக மாற்றி உள்ளதும் கண்டறியப்பட்டது. இந்த கும்பல் வெளிநாட்டிலிருந்து குவைத்திற்கு தொழிலாளர்களை அழைத்து வந்து 350 தினார் முதல் 1200 தினார் வரை பணம் வசூலித்து குவைத்திலுள்ள தங்களுடைய நிறுவனத்திற்கு அவர்களின் விசாக்களை மாற்றினர். இந்த சட்டவிரோதமாக குற்றத்தில் ஒரு குவைத்தி, இடைத்தரகர்களாக இரண்டு இந்தியர்கள், ஒரு சிரியரும் செயல்பட்டனர். குற்ற்றவாளின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Worker Visa | Indian Workers | Visit Visa

Add your comments to Search results for Indian Workers

Thursday, July 17, 2025

குவைத் விசிட் விசா பெறுவது எப்படி முழு தகவல்

குவைத்தில் நடைமுறையில் உள்ள 4 வகையான விசிட் விசாக்கள் யாருக்கெல்லாம் கிடைக்கும் மற்றும் எவ்வளவு நாள் தங்கலாம் என்பது உள்ளிட்ட விரிவான விபரங்களை இங்கு பார்க்கலாம்

Image : குவைத் சிட்டி

குவைத் விசிட் விசா பெறுவது எப்படி முழு தகவல்

குவைத்தில் சுற்றுலா, வணிக, குடும்ப மற்றும் அரசு துறை விசிட் விசாக்கள் தற்போது புதிதாக அறிமுகம் செய்யபட்ட "குவைத் விசா தளத்தில்" ஆன்லைன் வழியாக கிடைக்கும். மேலும் “குவைத் ஆன்லைன் விசா தளத்தை" உள்துறை அமைச்சகம் நேற்று(16/07/25) புதன்கிழமை காலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்தது. இதன் மூலம் அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் இனிமுதல் ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

உங்கள் புரிதலுக்கா குடும்ப விசா எடுக்க ஆண்களுக்கு 800 தினார் சம்பளமும், குடும்ப விசிட் விசா எடுக்க 400 தினார் சம்பளமும் தேவையாகும். அதேபோல் குவைத்தை பொறுத்தவரை மனைவி அல்லது தனியாக தங்கி வேலை செய்கின்ற பெண்களுக்கு எவ்வளவு சம்பளம் இருந்தாலும் விசிட் மற்றும் குடும்ப விசா எடுக்க முடியாது. கணவர் மரணம் உள்ளிட்ட சில இக்கட்டான சூழ்நிலையில் உள்ள பெண்களுக்கு விசா வழங்கல் துறையின் உயர் அதிகாரியின் ஒப்புதல் அடிப்படையில் மிகவும் அரிதாக சில குடும்பங்களுக்கு விசா வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.அதேபோல் வளைகுடா நாடுகளில் தங்கி வேலை செய்கின்ற விசா கைவசம் உள்ள சில குறிப்பிட்ட துறையில்(Profession) வேலை செய்கின்ற நபர்களுக்கும் குவைத்துக்கு வருவதற்கு விசிட் விசா எடுக்க முடியும்

மேலும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக நாட்டிற்குச் வருவதற்கு விரும்பும் நபர்களுக்கு சுற்றுலா விசாக்கள் வழங்கப்படுகின்றன. சுற்றுலா விசாக்கள் 90 நாட்கள் செல்லுபடியாகும். நாட்டிற்குளே வணிக நோக்கங்களாக கொண்டு கூட்டங்கள் மற்றும் மாநாடுகளில் கலந்து கொள்ள அல்லது உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து வியாபரங்களை ஏற்படுத்தி கொள்ள விரும்பும் நபர்களுக்கு வணிக விசாக்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல் வணிகர்கள், நிறுவன பிரதிநிதிகள் அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் பெரிய நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 30 நாட்களுக்கு வணிக விசாக்கள் வழங்கப்படுகின்றன.

இதேபோல் 30 நாட்களுக்கு வழங்கப்படும் அரசாங்க விசிட் விசாக்கள், அரசாங்க நோக்கங்களுக்காகவும் பிற நோக்கங்களுக்காகவும் கூட்டங்களில் கலந்து கொள்ள அதிகாரப்பூர்வமாக அரசின் அழைப்பின் பேரில் குவைத்துக்கு வருகின்ற நபர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆன்லைன் வழியாக இந்த விசிட் விசாக்களை பெற விண்ணப்பிக்க வேண்டிய அதிகாரப்பூர்வமான இணையதள முகவரி First Comment யில் இணைக்கப்பட்டுள்ளது .

(குறிப்பு: அனைத்து நாட்டினரும் இந்த ஆன்லைன் விசாக்களுக்கு தகுதியானவர்கள் அல்ல எனவும், எனவே தயவு செய்து முதலில் விசா கொள்கையை(நிபந்தனைகளை) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கவும் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Worker Visa | Indian Workers | Visit Visa

Add your comments to Search results for Indian Workers

Tuesday, July 22, 2025

குவைத்தின் மக்கள் தொகை 5 மில்லியனைத் தாண்டியுள்ளதாக சிவில் தகவலுக்கான பொது ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

குவைத்தின் மொத்த மக்கள் தொகை 5 மில்லியனை தாண்டியுள்ள நிலையில் இந்திய சமூகத்தினர் தொடந்து முதல் இடத்தில் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன

Image : குவைத் இந்திய தூதரக வளாகம்

குவைத்தின் மக்கள் தொகை 5 மில்லியனைத் தாண்டியுள்ளதாக சிவில் தகவலுக்கான பொது ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

குவைத்தின் மக்கள் தொகை 5 மில்லியனைத் தாண்டியுள்ளதாக சிவில் தகவலுக்கான பொது ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் முதல் பாதியின் இறுதியில் மக்கள் தொகை 5.098 மில்லியனை எட்டியுள்ளது. அதிகாரசபை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர், அதாவது 1.55 மில்லியன் பேர் குடிமக்கள் ஆவார்கள். அதேபோல் நாட்டில் 3.547 மில்லியன் வெளிநாட்டினரும் வேலையின் நிமித்தமாக வசித்து வருகின்றனர்.

இவர்களில் 29 சதவீதம் பேர்,அதாவது 1.036 மில்லியன் பேர் இந்தியர்கள். வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியர்களே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதற்க்கு அடுத்த படியாக 6,61,318 பேருடன் எகிப்தியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் 15 வயதுக்குட்பட்டவர்கள், 80 சதவீதம் பேர் 15 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் மட்டுமே என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மக்கள் தொகையில் 61 சதவீதம் பேர் ஆண்கள்,மொத்தம் 3.09 மில்லியன் ஆண்கள் மற்றும் 2 மில்லியன் பெண்கள். நாட்டின் தொழிலாளர் துறையில் மொத்தம் 2.283 மில்லியன் மக்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 5,19,989 பேர் அரசுத் துறையிலும், 1.763 மில்லியன் பேர் தனியார் துறையிலும் பணிபுரிகின்றனர். அரசுத்துறையில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுத் தொழிலாளர்களாக எகிப்து நாட்டவர்கள் 7.2 சதவீதம் பேருடன் முதலிடத்திலும், இந்திய தொழிலாளர்கள் 4.51 சதவீதம் பேருடன் இரண்டாது இடத்தில் உள்ளனர். அரசுத் துறையில் உள்ள மொத்த தொழிலாளர்களில் 75.57 சதவீதம் பேரும் குடிமக்கள் ஆவார்கள். தனியார் துறையில் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களாக 31.2 சதவீதம் பேருடன் இந்தியர்கள் முதல் இடத்திலும், எகிப்தியர்கள் 24.8 சதவீதம் பேருடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

அதேபோல் வீட்டு வேலைத்துறையில் அதிக எண்ணிக்கையில் 10 தேசிய இனத்தவர்கள் உள்ளனர். நாட்டில் உள்ள மொத்த 8,22,794 வீட்டுப்பணியாளர்களில்,58.2 சதவீதம் பேர் பெண்கள். இந்தத் துறையில் அதிக எண்ணிக்கையிலான இந்தியத் தொழிலாளர்கள் 41.3 சதவீதம் பேர் வேலை செய்கின்றனர். அடுத்ததாக 17.9 சதவீத பிலிப்பைன்ஸ் நாட்டவர்களும் 17.6 சதவீத இலங்கை நாட்டவர்களும் பணிபுரிவதாகவும் அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait+Population | Gulf Workers | Indian People

Add your comments to Search results for Indian Workers