BREAKING NEWS
latest

Kuwait Police - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Kuwait Police செய்திகள், கட்டுரைகள், Kuwait Police புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Friday, December 30, 2022

குவைத்தில் பெண் தன்னை கடத்தி கற்பழித்ததாக காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்:

குற்றவாளி காவ‌ல்துறை அதிகாரி என்று கூறி விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து செல்வதாக கூறி கடத்தி இதை செய்ததாக தெரிவித்துள்ளார்

Image credit: Kuwait Police

குவைத்தில் பெண் தன்னை கடத்தி கற்பழித்ததாக காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்:

குவைத்தில் வெளிநாட்டை சேர்ந்த பணிப்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் குவைத் நாட்டின் பாரம்பரிய உடை அணிந்த ஒருவரால் தான் கடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் தன்னை கடத்திய நபர் அவரிடம் தான் ஒரு துப்பறிவாளன்(காவ‌ல்துறை அதிகாரி) என்று கூறி அவரின் அடையாள அட்டையினை(சிவில் ஐடி) கேட்டுள்ளார்.

மேலும் அடையாள அட்டையினை சரிபார்த்த அவர் காவல்துறை மூலம் அந்த பெண்மணியை தேடிக்கோண்டு இருப்பதாகவும் காவல்நிலையம் அழைத்து செல்ல வாகனத்தில் ஏறும்படி கூறினான் எனவும், அதை நம்பி காவல்நிலையம் தான் அழைத்து செல்வதாக நம்பி ஏறியுள்ளார். ஆனால் அந்த நபர் அவரை (Fintas) பிண்டாஸில் உள்ள தொலைதூரப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளான், பிறகு அவன் பெண்மணியை அடித்து துன்புறுத்தி கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் தெரிவித்தார். பின்னர் அவரை சாலையில் வீசிவிட்டு தப்பியோடினார் என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் பாதிக்கப்பட்ட பெண் அழுதுகொண்டே காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார். இதையடுத்து கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த இடத்துக்கு அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஏதேனும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்ய வழக்கு விசாரணை துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் ஒன்றுக்கு மேற்பட்ட சந்தேக நபர்கள் இருப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வது நம்முடைய கடமை எனவும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தனர் இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் பிலிப்பைன்ஸ் நாட்டவர் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.

Kuwait Police | Kuwait Worker | Raped Worker

Add your comments to Search results for Kuwait Police

Monday, September 16, 2024

குவைத்தில் தொழிலாளி பெயின்ட் தின்னர் குடித்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

குவைத்தில் தின்னர் குடித்த வெளிநாட்டவரான தொழிலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜஹ்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

Image: Kuwait Police

குவைத்தில் தொழிலாளி பெயின்ட் தின்னர் குடித்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

குவைத்தின் ஜஹ்ரா மருத்துவமனையில் தற்செயலாக பெயின்ட் தின்னரை குடித்ததாக வெளிநாட்டவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வெளிநாட்டவர் மிகவும் ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்டு சுயநினைவை இழந்த நிலையில் இருந்ததால் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்று மருத்துவமனையிலிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருடன் வந்த வெளிநாட்டவரான நபர் கூற்றுப்படி இந்த சம்பவம் குவைத்தின் முட்டலா குடியிருப்பு பகுதி, N7, பிளாக் 3-இல் நடந்ததாக கூறினார். இது தற்செயலாக நடந்ததா இல்லை தற்கொலை முயற்சியா உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகின்றன. ஆனால் தொழிலாளி எந்த நாட்டவர் என்ற கூடுதல் விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. இந்த சம்பவம் நபிதின விடுமுறை நாளான நேற்று(15/09/24) ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Moh | Kuwait Health | Kuwait Hospital

Add your comments to Search results for Kuwait Police

Tuesday, January 3, 2023

குவைத்தில் கடந்த ஒரு வருடத்தில் 30,000 வெளிநாட்டவர்கள் பல்வேறு காரணங்களுக்காக நாடுகடத்தபட்டனர்:

குவைத்தில் ஒரு வருடத்தில் 6,400 இந்தியர்கள் உட்பட 30,000 வெளிநாட்டவர்கள் பல்வேறு காரணங்களுக்காக நாடுகடத்தபட்டனர் என்று புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன

Image : காவல்துறை சோதனை

குவைத்தில் கடந்த ஒரு வருடத்தில் 30,000 வெளிநாட்டவர்கள் பல்வேறு காரணங்களுக்காக நாடுகடத்தபட்டனர்:

குவைத்தில் 2022 தொடக்கம் முதல் வருடம் முடியும் வரையிலான 12 மாதங்களுக்கு இடையில் 6,400 இந்தியர்கள் உட்பட 30,000 வெளிநாட்டவர்கள் பல்வேறு காரணங்களுக்காக நாடுகடத்தபட்டனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 660 பேர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து நாடு கடத்தப்பட்டனர். மீதமுள்ளவர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள், சண்டை தொடர்பான வழக்குகள், திருட்டு, மதுபானம் தயாரித்தல், விசா காலம் முடிந்தும் தங்கியிருந்த நபர்கள், தொழில் சட்டத்தை மீறிய நபர்கள், நாட்டின் பொது நலனுக்கு எதிராக செயல்பட்ட நபர்களுக்கு எதிரான பொது மக்களிடம் இருந்து வந்த புகார்கள் போன்றவை காரணமாகும்.

இந்த காலகட்டத்தில் நாடு கடத்தப்பட்ட மொத்த ஆண்களின் எண்ணிக்கை 17,000 ஆகும். இவர்களில் முதலிடத்தில் 6,400 இந்தியர்களான ஆண்கள், அடுத்த படியாக 3,500 பங்களாதேஷ் நாட்டினர், 3,000 எகிப்து நாட்டினர். மேலும் இதே காலகட்டத்தில் நாடு மொத்த பெண்களின் எண்ணிக்கை 13,000 ஆகும். இதில் முதலிடத்தில் 3,000 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், அடுத்தபடியாக 2,600 இலங்கையர்கள், 1,700 இந்தியா, 1400 பேர் எதியோப்பியா நாட்டவர்கள், இது தவிர குறைந்த எண்ணிக்கையிலான பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 30,000 பேர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Deport Kuwait | Kuwait Police | Kuwait Worker

Add your comments to Search results for Kuwait Police

Sunday, December 18, 2022

குவைத் உ‌ள்துறை அமைச்சகம் அதிரடி;ஓட்டுநர்களை கைது செய்ய உத்தரவு:

குவைத் உ‌ள்துறை அமைச்சகம் கடந்த 40 நாட்களில் 1000 ற்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்துள்ளது

Image : Kuwait Police

குவைத் உ‌ள்துறை அமைச்சகம் அதிரடி;ஓட்டுநர்களை கைது செய்ய உத்தரவு:

குவைத்தில் ரத்து செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்துடன் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய உள்துறை அமைச்சகம், அத்துறையின் அதிகாரிகளுக்கு டிசம்பர்-18ம் தேதி இன்று சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. இப்படி கைது செய்யப்படும் நபர்களை நாடுகடத்தல் மையத்துக்கு மாற்றவும் உத்தரவிட்டுள்ளதாக தினசரி நாளிதழ் ஒன்று அமைச்சக வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் ஓட்டுநர் உரிமம் கைவசம் வைத்திருக்க குவைத் நடைமுறை படுத்தியுள்ள விதிமுறைகளை நிறைவேற்ற முடியாத வெளிநாட்டினரின் உரிமங்களை தானாக முன்வந்து ரத்து செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன(சம்பளம், பல்கலைக்கழகப் பட்டம் மற்றும் தொழில் துறை போன்ற தகுதிகளை இழந்தவர்கள்) இதன் காரணமாக கடந்த 40 நாட்களில் 1000 ற்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல் காலித் அல் சபாவின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத வெளிநாட்டினரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியது. இதுவரை சுமார் 15,000 வெளிநாட்டவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் முடக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

Kuwait Moi | Kuwait Licence | Driving Licence

Add your comments to Search results for Kuwait Police

Thursday, July 3, 2025

குவைத்தில் வெளிநாட்டினரிடமிருந்து பணம் பெற்று போலி முகவரிகளை உருவாக்கி வந்த ஒரு கும்பலை அதிகாரிகள் கைது செய்தனர்

குவைத்தில் போலி முகவரி உருவாக்கி வசிக்கின்ற எத்தனை பேர் சிக்க போறாங்களோ தெரியலியே கடவுளே.....

Image : கைது செய்யப்பட்ட நபர்கள்

குவைத்தில் வெளிநாட்டினரிடமிருந்து பணம் பெற்று போலி முகவரிகளை உருவாக்கி வந்த ஒரு கும்பலை அதிகாரிகள் கைது செய்தனர்

குவைத்தில் வெளிநாட்டினரிடமிருந்து பணம் பெற்று போலி முகவரிகளை உருவாக்கி வந்த ஒரு கும்பலை அதிகாரிகள் கைது செய்தனர். அரசின் குற்றப் புலனாய்வுத்துறை, சிவில் தகவல் ஆணையத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர், முகவரிகள் பெற இடைத்தரகர்களாக செயல்பட்ட நபர்களும் மற்றும் அவர்களுக்கு பணம் கொடுத்து போலியாக முகவரிகள் பெற காத்திருந்த 7 நபர்கள் உள்ளிட்டவர்கள் அடங்கிய ஒரு கும்பலை கைது செய்துள்ளனர்.

மேலும் செய்தியில் சிக்கிய ஊழியர் தனது அதிகாரப்பூர்வ பதவியைப் பயன்படுத்தி சிவில் தகவல் ஆணையத்தின் அரசு இணையதள மின்னணு அமைப்பில் நுழைந்து முகவரி பெறவேண்டிய வெளிநாட்டினரான நபர்கள் நேரில் ஆஜராகாமல், சட்டபடி தேவையான ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்கவோ செய்யாமல் போலியான முகவரிகளை உருவாக்கிய குற்றத்தைச் செய்து வந்துள்ளார்.

ஒவ்வொரு போலியான வசிப்பு முகவரிக்கும் 120 தினார் வரை கட்டணமாக(லஞ்சமாக) வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து குவைத்துக்கு உள்ளேயும் வெளியேயுமாக பல முகவர்களுடன் இணைந்து இதுபோன்ற 5,000 க்கும் மேற்பட்ட சட்டவிரோத போலியான முகவரிகளை அவர் உருவாக்கியதை விசாரணையில் ஒப்புக்கொண்டார். பிடிபட்ட நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைக் குழு இரண்டு தரகர்களையும், போலியான முகவரி பெற அவர்களுக்கு பணம் கொடுத்த ஏழு நபர்களையும் கைது செய்தனர்.

குற்றவாளியான ஊழியர் இப்படி கிடைத்த பணத்தை கொண்டு நகைகள், தங்கக் கட்டிகள் மற்றும் பிற ஆடம்பரப் பொருட்களை வாங்கப் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் கூடுதல் சட்ட நடவடிக்கைகளுக்காக அரசின் பொது வழக்கறிஞர் பிரிவு அலுவலகத்தில் குற்றவாளிகள் அனைவரும் ஒப்படைக்கப்பட்டன. இவனிடம் போலியாக முகவரி ரெடி பண்ணின எத்தனை பேர் இவன் வாக்குமூலம் அடிப்படையில் சிக்க போறாங்களோ தெரியலியே.... பிடிபட்ட நபர்கள் குறித்த கூடுதல் விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை...போலியாக முகவரியில் யாராவது வசித்து வந்தால் எதுக்கும் இந்த புகைப்படத்தை சற்று உற்று நோக்குவது நல்லது

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Police | Fake Address | Kuwait Workers

Add your comments to Search results for Kuwait Police

Friday, March 5, 2021

குவைத் நாட்டை சமூக ஊடகங்கள் வழியாக அவமதித்த 4 வெளிநாட்டினரை அதிகாரிகள் கைது செய்தனர்

குவைத் நாட்டை சமூக ஊடகங்கள் வழியாக அவமதித்த 4 வெளிநாட்டினரை அதிகாரிகள் கைது செய்தனர்;இவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவி்த்தனர்

Image: சமூக ஊடக வீடியோ

குவைத் நாட்டை சமூக ஊடகங்கள் வழியாக அவமதித்த 4 வெளிநாட்டினரை அதிகாரிகள் கைது செய்தனர்

குவைத் மற்றும் குவைத் நாணயத்தை அவமதிப்பு செய்ததற்காக நான்கு பங்களாதேஷ் நாட்டினரை கைது செய்துள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு 20 தினார் நோட்டுகளை மேலிருந்து கீழே வீசி,அதை மிதந்து ஆபாசமாக நடனமாடும் வீடியோவை எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பிய நிலையில் அது வைரலாக பரவியது. தொடர்ந்து ப‌ல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டனங்களை தெரிவித்தனர். தொடர்ந்து அந்த வீடியோவை ஆதாரமாக வைத்து போலிசார் அவர்களை கைது செய்தனர்.

இவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவி்த்தனர். இதையடுத்து குவைத் சட்டத்திற்கு தங்கள் நாட்டின் மக்கள் கட்டுப்பட வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளையும், நாட்டில் வாழும் பங்களாதேஷியர்களையும் இதுபோன்ற செயல்கள் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், எனவே இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் குவைத்திற்கான பங்களாதேஷ் தூதர் முகமது ஆஷி குஸ்மான் தங்கள் நாட்டின் குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமீரகத்தில் போலியான யூரோ நோட்டுகளை சாலையில் வீசி நடனமாடி வீடியோவை இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் வீடியோ ஆதாரம் அடிப்படையில் அவரை கைது செய்து திர்ஹம் அபராதமும் சிறை தண்டனையும் வழங்கியது யாரும் மறந்திருக்க வாய்பில்லை.

Kuwait Police | Kuwait Money | Bangladesh Workers

Add your comments to Search results for Kuwait Police

Monday, November 28, 2022

குவைத்தில் காணவில்லை என்று தேடப்பட்ட இந்திய பெண்குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டார்:

குவைத்தில் தேடப்பட்ட பெண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதாக புதிய செய்தி வெளியாகியுள்ளது

Image : மீட்கப்பட்ட அபியா

குவைத்தில் காணவில்லை என்று தேடப்பட்ட இந்திய பெண்குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டார்

குவைத்தின் அப்பாசியாவில் இருந்து நேற்று(27/11/2022) மாலை 6:30 முதல் காணவில்லை என்று தேடப்பட்ட அபியா என்ற இந்திய பெண் குழந்தை நள்ளிரவில் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தையை கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் பெற்றோர்கள் நன்றி தெரிவி்த்துள்ளனர்.நேற்று(27/11/2022) ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இந்தி குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிக பகிரப்பட்ட நிலையில் இந்த புதிய செய்தி வெளியாகியுள்ளது.

Missing Child | Indian Girl | Kuwait Police | Kuwait News

Add your comments to Search results for Kuwait Police

Thursday, July 3, 2025

குவைத்தில் கோடையில் அதிகரிக்கும் தொடர் தீ விபத்துகள் குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

குவைத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 தீ விபத்துகள் ஒருவர் மரணமடைந்தார் 9 பேர் வரையில் காயமடைந்தனர்

Image:தீ விபத்தின் புகைப்படம்

குவைத்தில் கோடையில் அதிகரிக்கும் தொடர் தீ விபத்துகள் குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

குவைத்தில் உள்ள அல்-குரைன் சந்தையின் முதல் மாடியில் உள்ள ஒரு உணவகத்திலும் அருகிலுள்ள கடைகளிலும் இன்று(03/07/25) வியாழக்கிழமை காலையில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் 5 பேர் வரையில் காயமடைந்தனர். அல்-பைராக் மற்றும் அல்-குரைன் நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக பொது தீயணைப்புப் படை அறிவித்தது.

Image: தீ விபத்தின் புகைப்படம்

அதேபோல் இன்று(03/07/25) வியாழக்கிழமை காலையில் ஃபர்வானியா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்திலும் தீ விபத்து ஏற்பட்டது. இதை ஃபர்வானியா மற்றும் சுபான் மையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் இணைந்து அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தில் நான்கு பேர் வரையில் காயமடைந்தனர்.

Image: தீ விபத்தின் புகைப்படம்

மேலும் அதே ஃபர்வானியா பகுதியிலுள்ள தொழிலாளர் குடியிருப்பில் நேற்று(02/07/25) புதன்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் அறை முழுமையாக எரிந்து சாம்பலாயின. இந்த தீ விபத்திலும் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும் ஃபர்வானியா மற்றும் சுபான் மையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுப்படுத்தினர். உடல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. உயிரிழந்தவர் எந்த நாட்டவர் என்ற கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை. இந்த மூன்று தீ விபத்துகள் தொடர்பாகவும் விசாரனை தொடங்கியுள்ளது.

Image: தீ விபத்தின் புகைப்படம்

அதேநேரம் குவைத்தில் உண்மையான கோடைக்காலம் இன்று(03/07/25) வியாழக்கிழமை தொடங்கும் என்றும் அல்-உஜைரி அறிவியல் ஆய்வு மையம் கடந்த வாரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தது. இதையடுத்து கடுமையான வெயில் அடுத்த 13 நாட்களுக்கு நீடிக்கும் இந்த நாட்களில் வானிலை வளிமண்டல வெப்பநிலை தற்போதைய வெப்பத்தை விட குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும்.

Image: தீ விபத்தின் புகைப்படம்

மேலும் இந்த நாட்களில் நாடு கடுமையான வறட்சி மற்றும் வெப்பக்காற்றை அனுபவிக்கும் என்றும், சூரிய மற்றும் சந்திர நாட்காட்டிகளில் இந்தப் பருவம் "அல்-ஹக்கா" என்று அழைக்கப்படுகிறது என்றும் அறிவியல் மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கடுமையான கோடை காலத்தில் தீ விபத்துக்கு வாய்புகள் அதிகம், எனவே அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Image: தீ விபத்தின் புகைப்படம்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Police | Fire Accident | Kuwait Workers

Add your comments to Search results for Kuwait Police

Thursday, November 24, 2022

குவைத்தில் சட்டவிரோதமாக வசிக்கின்ற நபர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது:

குவைத்தில் சட்டவிரோதமாக வசிக்கின்ற நபர்களின் எண்ணிக்கை கடுமையான சோதனைகளை தொடர்ந்து கணிசமாக குறைந்துள்ளது

Image credit:Kuwait Police Official

குவைத்தில் சட்டவிரோதமாக வசிக்கின்ற நபர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது

குவைத்தில் சட்டவிரோதமாக வசிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. நாட்டில் சுமார் 150,000 பேர் வரையில் குடியிருப்பு சட்டத்தை மீறி தங்கியிருந்தனர். ஆனால் இது தற்போது 136,000 ஆக குறைந்துள்ளது என்று தினசரி நாளிதழ் ஒன்று உள்துறை அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. வீட்டுவசதித்துறை மற்றும் மனிதவளத்துறை தலைமையில் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைகளின் விளைவாக சட்டவிரோதமாக தங்கியிருந்த நபர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

ஆனால் சமீபத்தில் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக நாடு கடத்தப்பட்ட சிலர் மீண்டும் குவைத் திரும்பியுள்ளனர். இவர்கள் மதுபானம் தயாரித்தல் தொடர்பான சட்டத்தை மீறியதைத் தொடர்ந்து மீண்டும் பிடிபட்டுள்ளனர். குடியிருப்பு சட்டத்தை மீறுபவர்களில் பெரும்பாலானோர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதே நேரத்தில் நாட்டின் சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கான குடியிருப்பு ஆவணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான பொது மன்னிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Add your comments to Search results for Kuwait Police

Thursday, January 7, 2021

குவைத்தில் போதையில் இருந்த இந்தியரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர்


குவைத்தின் பாதுகாப்பு துறையின் அவசரகால உதவி மையத்திற்கு ஒரு புகார் அழைப்பு வந்ததன் அடிப்படையில் அதிகாரிகள் அவருடைய அழைப்பு பதிலளித்து, மது பாட்டில்களுடன் குடிபோதையில் இருந்த இந்தியரை கைது செய்தனர். இதையடுத்த அந்த இந்தியரை சட்ட நடவடிக்கை மற்றும் கூடுதல் விசாரணைக்கு சம்பந்தப்பட்ட போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் பரிந்துரைக்கப்பட்டார் என்று குவைத் தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹவல்லி மாகாணத்திலுள்ள அடுக்குமாடி கட்டிடங்களில் ஒன்றில் தனது குத்தகைதாரர்(வாடகைக்கு) ஒருவர் தவறாக நடந்துகொள்வதாகவும், விசித்திரமான சில செயல்களை செய்வதாகவும் கூறினார் எனவும் அதன்படி, பாதுகாப்பு ரோந்துப்படை அதிகாரிகள் அந்த இடத்திற்குச் சென்றனர் எனவும்,அசாதாரணமாக நடந்து கொண்டதால் இந்தியர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவித்துள்ளது.

இது இவருடன் நிற்கவில்லை எதற்காக வெளிநாடு வந்தோம் என்பதை மறந்து ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை ஆனால் போது..... இந்த கதை தொடர்கிறது. வளைகுடாவில் வெளிநாட்டினருக்கு எளிதாக சர்க்கரை வியாதி மற்றும் இரத்த அழுத்தம் வருவது சாதாரணமான ஒன்றும், அவர்கள் இதுபோன்ற கள்ளச்சாராயம் என்று கூறும்,இது அந்த அளவுக்கு கூட சுத்தம் இல்லே..... கள்ளச்சாராயம் கூட நல்லது தான்.... வளைகுடா நாடுகளில் சட்டத்திற்கு புறம்பான விற்கப்படும் இவைகள் விஷத்திற்கு சமம், இதை குடித்தே மேற்குறிப்பிட்ட சில நோய்கள் உள்ள பலபேர் தினமுமு உயிரிழக்கிறார்கள்.


 

Kuwait Police | Arrested indian | Drinking Alcohol

Add your comments to Search results for Kuwait Police

Monday, March 15, 2021

குவைத்தில் இந்திய பெண்மணி தன்னை முதலாளி கற்பழித்ததாக காவல் நிலையில் புகார் அளித்துள்ளார்

குவைத்தில் இந்திய பெண்மணி தன்னை முதலாளி கற்பழித்ததாக காவல் நிலையில் புகார் அளித்துள்ளார்;இது தொடர்பான சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்

குவைத்தில் இந்திய பெண்மணி தன்னை முதலாளி கற்பழித்ததாக காவல் நிலையில் புகார் அளித்துள்ளார்

குவைத்தில் Sponsor(குவைத்தி) பாலைவனத்திற்கு அழைத்துச் சென்று கற்பழித்ததாக இந்தியவைச் சேர்ந்த வீட்டு பணிப்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அவர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் Sponsor(குவைத்தி) தன்னை மக்கள் நடமாட்டமே இல்லாத பாலைவன பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார் எனவும், உயிருக்கு பயந்து என்னால் அந்த நேரத்தில் எதுவும் செய்ய முடியவில்லை என்றார். மேலும் சம்பவம் நடந்த பிறகு தன்னை அரபி தனது வீட்டிற்கே அழைத்துச் சென்றார் எனவும்,பின்னர் தான் அங்கிருந்து தப்பித்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தேன் எனவும் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்மணி Jahra கவர்னரேட்டில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்மணியும் அதே பகுதியில் மேற்குறிப்பிட்ட அரபி வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். இது தொடர்பாக செய்தியை குவைத் தினசரி நாளிதழ் நேற்று(14/03/21) இரவு செய்தியாக வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரி கூறியதாவது புகார் அளித்த பெண்மணி இந்தியாவை சேர்ந்தவர், மேலும் இந்த சம்பவம் குவைத் நாட்டின் சட்டத்தை மீறிய செயல் எனவும்,அவர் மீது கிரிமினல் வழக்கைப் பதிவுசெய்து குற்றவியல் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும். இதையடு்த்து ஸ்பான்சரை(குவைத்தியை) அதாகாரிகள் கைது செய்து,அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Kuwait Police | Indian Housemaid | Sponsor Arrested

Add your comments to Search results for Kuwait Police

Wednesday, December 21, 2022

குவைத்தில் Any Desk அப்ளிகேஷனை பயன்படுத்தும் நபர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்:

குவைத்தில் Any Desk அப்ளிகேஷனை பயன்படுத்தி 300க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ஏற்கனவே புகார்கள் வந்துள்ளது

Image : Any Desk preview window

குவைத்தில் Any Desk அப்ளிகேஷனை பயன்படுத்தும் நபர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்:

குவைத்தில் Any Desk அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பயன்படுத்தும் நபர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அரசு வழக்கறிஞர் அலுவலகம்(Public Prosecution Office) கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் Any Desk அப்ளிகேஷனை நிதி மோசடியால் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ஏற்கனவே புகார்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Any Desk அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யச் சொல்லி மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றியுள்ளனர். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி மற்றவர்களின் மொபைல் ஃபோன், கணினி போன்ற சாதனங்களையும் கட்டுப்படுத்தவும், மோசடி செய்பவர்கள் உங்களுடைய வங்கிக் கணக்குகளுக்குள் புகுந்து பணத்தை வேறு கணக்குகளுக்கு மாற்றவும் முடியும்.

எனவே இந்த அப்ளிகேஷன் அல்லது இதுபோன்ற வேறு ஏதேனும் அப்ளிகேஷனை எந்த தேவைகளுக்காகவும் பதிவிறக்கம் செய்ய சொல்லி WhatsApp, Messenge வழியாக Link உள்ளிட்டவை அனுமதி கோரிக்கை விடுத்தால் அத்தகைய குறுந்தகவல்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Any Desk | Cyber Crime | Kuwait Police

Add your comments to Search results for Kuwait Police

Wednesday, September 22, 2021

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் 1,004 டிராமாடோல் மாத்திரைகளுடன் இந்தியர் கைது செய்யப்பட்டார்

குவைத்தில் தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளுடன் விமான நிலையத்தில் இந்தியர் கைது செய்யப்பட்டார்

Image : Kuwait Police

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் 1,004 டிராமாடோல் மாத்திரைகளுடன் இந்தியர் கைது செய்யப்பட்டார்

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் இந்தியாவில் இருந்து வந்திறங்கிய இந்தியர் ஒருவரின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை செய்தனர். இந்நிலையில் அவருடைய உடமைகளின் உள்ளே மறைத்து வந்திருந்த தடைசெய்யப்பட்ட போதை மாத்திரை பட்டியலில் உள்ள 1,004 டிராமாடோல் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் கூடுதல் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைத்தனர்.

மேலும் இவர் திங்கள்கிழமை மாலையில் கைது செய்யப்பட்டதாக சுங்கத்துறை வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட குவைத்-இந்தியா விமான சேவைகள் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் துவங்கியுள்ள நிலையில் இந்தியர் ஒருவர் போதை மாத்திரைகளுடன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த செய்தியை குவைத் தினசரி பத்திரிகைகளும் செய்தியாக வெளியிடுள்ளது.

Add your comments to Search results for Kuwait Police

Tuesday, October 26, 2021

குவைத்தில் இன்று பெண்மணி கொலை செய்யப்பட்ட செய்தி சற்றுமுன் தற்போது வெளியாகியுள்ளன

குவைத்தின் Fahaheel பகுதியில் காதலியான பெண்னை கொலை செய்துவிட்டு காதலன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்

Image : Kuwait Police

குவைத்தில் இன்று பெண்மணி கொலை செய்யப்பட்ட செய்தி சற்றுமுன் தற்போது வெளியாகியுள்ளன

குவைத்தின் Fahaheel பகுதியில் இன்று காதலியான இலங்கை பெண்னை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு காதலன் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்தார். கொலையாளி ஆத்திரத்தில் இதைச் செய்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் முதல்கட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் கொலை செய்யப்பட்ட காதலி மற்றொரு நபருடன் உறவை ஏற்படுத்தி கொண்டதன் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. குற்றத்தைச் செய்தபின் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தான் தற்கொலைக்கு முயன்றதாகவும்,ஆனால் தன்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை எனவும் முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாகவும் குற்றவாளி அதிகாரிகளிடம் கூறினார். கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் கொலையாளி குறித்த கூடுதல் விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதையடுத்து குற்றவாளியான நபர் கூடுதல் நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Add your comments to Search results for Kuwait Police

Friday, October 22, 2021

குவைத்தில் 20 நாட்களுக்கு மேலான தொழிலாளி ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

குவைத்தின் Fahaheel யில் கைவிடப்பட்ட கட்டிடத்தில் சிதைந்த நிலையில் தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டதாக தகவல்

Image : Kuwait Police

குவைத்தில் 20 நாட்களுக்கு மேலான தொழிலாளி ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

குவைத்தின் Fahaheel பகுதியில் பழமையான கைவிடப்பட்ட ஒரு கட்டிடத்தில் உள்ளே அழுகிய நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கட்டுபாட்டு அறைக்கு தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், உடல் 20 நாட்களுக்கு மேல் பழமையானது என்பது தெரியவந்துள்ளனர்.

மேலும் இந்த உடல் ஆசியா நாட்டவருடையதாக இருக்கலாம் எனவும், ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். அதேநேரம் தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் Fahaheel பகுதியில் ஒரு கைவிடப்பட்ட கட்டிடத்தில் 20 நாட்களுக்கு மேலாக அழுகிய நிலையில் இந்தியர் ஒருவர் இறந்து கிடந்தார் எனவும் விஷம் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் அவர் உயிழந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add your comments to Search results for Kuwait Police

Saturday, July 8, 2023

குவைத்தில் இன்று 33 பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை போலி ஆவணங்கள் தயார் செய்த வழக்கில் அதிரடியாக கைது செய்தனர்

குவைத்தில் போலியான முறையில் ஆவணங்களை தயாரித்த பிலிப்பைன்ஸ் கிரிமினல் கும்பல் உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் குவைத்தில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகத்தின் உதவியுடன் கைதுசெய்யப்பட்டனர்

Image : கைதான நபர்கள்

குவைத்தில் இன்று 33 பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை போலி ஆவணங்கள் தயார் செய்த வழக்கில் அதிரடியாக கைது செய்தனர்

குவைத் கிரிமினல் செக்யூரிட்டி பிரிவினர் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து போலியான முறையில் அதிகாரப்பூர்வ ஆவணங்களை தயாரித்த பிலிப்பைன்ஸ் கிரிமினல் கும்பலை கைது செய்துள்ளனர், உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் குவைத்தில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகத்தின் உதவியுடன் 33 பிலிப்பைன்ஸ் நபர்களை கைது செய்துள்ளது

இவர்கள் கல்விச் சான்றிதழ்கள், திருமண ஒப்பந்தங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களை போலியாக உருவாக்கி, இந்த மோசடி ஆவணங்கள் குடியுரிமை நிலையை மாற்றுதல் மற்றும் விசா தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்று கண்டறிந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்றும் நாட்டில் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் மற்றும் மீறல்கள் செய்யும் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்தியில் எச்சரிக்கை விடுத்துள்ளது

Phillipines Arrested | Fraudulent Documents | Kuwait Police

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to Search results for Kuwait Police

Monday, September 11, 2023

கடந்த 24 ஆண்டுகளாக விசா இல்லாமல் தங்கியிருந்த வெளிநாட்டவர் சோதனையில் சிக்கியுள்ளார்

குவைத்தில் கடந்த 29 ஆண்டுகளாக தாயகம் செல்லாத தொழிலாளி அனைவரையும் ஆச்சரியப்பட செய்துள்ளார்

Image : Kuwait Police

கடந்த 24 ஆண்டுகளாக விசா இல்லாமல் தங்கியிருந்த வெளிநாட்டவர் சோதனையில் சிக்கியுள்ளார்

குவைத்தில் நேற்று நடந்த பாதுகாப்பு சோதனையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்பு(விசா) அனுமதி காலாவதியான எகிப்திய வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டார். நாட்டின் முட்லா விவசாய நிலங்கள் உள்ள பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அவரது குடியிருப்பு அனுமதி கடந்த 1998 இல் காலாவதியானது.

இதற்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1994-ல் அவர் குவைத் வந்ததாகவும், இது வரையில் வீட்டிற்கு(தாயகம்) செல்லவில்லை என பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார். இந்த தகவல் அதிகாரிகளை மட்டுமல்ல குவைத்திலுள்ள வெளிநாட்டினர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்கு தற்போது 56-வயது எனவும், அவர் தனது சக ஊழியர்களிடையே ராம்சேஸ் என்ற பெயரில் அறியப்பட்டார். குவைத் வந்ததிலிருந்து, அவர் முட்லாவில் உள்ள பண்ணையில் தான் வேலை செய்து வந்துள்ளார் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவரை திருப்பி அனுப்பும் மையத்திற்கு(நாடுகடத்தல் மையம்) மாற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to Search results for Kuwait Police

Monday, November 28, 2022

குவைத்தில் கள்ளச்சாராய குவியலுடன் வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டார்:

குவைத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த ஆசியா நபரை காவல்துறை நடத்திய பரிசோதனை போது கைது செய்தனர்

Image : கைது செய்யப்பட்ட நபர்

குவைத்தில் கள்ளச்சாராய குவியலுடன் வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டார்:

குவைத்தில் நேற்று(27/11/2022) மாலையில் அல்-அஹ்மதி பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு ஆசிய வெளிநாட்டு தொழிலாளி வசம் இருந்த 154 கள்ளச்சாராய பாட்டில்களை மஹ்பூலா மற்றும் மங்காஃப் பகுதிகளில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்றபோது பறிமுதல் செய்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மஹ்பூலா பகுதியில் அஹ்மதி பாதுகாப்பு அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு கார் மீது சந்தேகமடைந்து அதன் ஓட்டுநரை தடுத்து நிறுத்தினர்.

ஆனால் அவர் தப்பிக்க முயன்றார், தொடர்ந்து அவரை காவல்துறை அதிகாரிகள் விரட்டி பிடித்தனர். தொடர்ந்து நடந்த பரிசோதனையில் 154 கள்ளச்சாராய மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மது தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டார். கூடுதல் நடவடிக்கைக்காக உயர் அதிகாரிகளின் உத்தரவின் அடிப்படையில் போதை தடுப்பு பிரவு அதிகாரிகளிடம் அந்த நபரை பாதுகாப்பு துறை ஒப்படைத்தது.

Asian Arrest | Local Alcohol | Kuwait Police

Add your comments to Search results for Kuwait Police

Tuesday, December 20, 2022

குவைத்தின் கடல் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சிறுமி மீட்கப்பட்டார்:

குவைத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடல் வழி பாலத்தில் இருந்து குதித்து மீண்டும் ஒரு தற்கொலை முயற்சி நடந்துள்ளது

Image : மீட்கப்பட்ட சிறுமி

குவைத்தின் கடல் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சிறுமி மீட்கப்பட்டார்:

குவைத்தின் பிரபலமான Jaber கடல் பாலத்தின் மேலிருந்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சிறுமி ஒருவர் மீட்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு ஒரு சிறுமி பாலத்தின் மேலிருந்து கடலில் குதித்ததை பார்த்த சிலர் உடனடியாக கட்டுபாட்டு அறைக்கு கொடுத்த தகவலை அடுத்து விரைந்து வந்த கடலோர காவல்படை, தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை சேர்ந்து பத்திரமாக 10 நிமிடத்தில் அந்த குழந்தையை மீட்டனர். முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அந்த குழந்தை எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்ற கூடுதல் விபரங்கள் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை துவங்கியுள்ளதாக இரகசிய பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரையில் இந்த பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்வது தொடர்கதை ஆனதால் பாலத்தின் ரோந்து வாகனங்களின் கண்காணிப்பு கடுமையாக்கப்பட்டு இருந்ததால் தற்கொலை தொடர்பான முயற்சிகள் குறைந்திருந்தது குறி்ப்பிடத்தக்கது.

Kuwait Police | Jaber Bridge | Save Girl

Add your comments to Search results for Kuwait Police

Friday, January 15, 2021

குவைத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்ட வழக்கில் இருவரை அதிகாரிகள் கைது செய்தனர்

(அதிகாரிகள் பறிமுதல் செய்த கஞ்சா செடிகள்)

குவைத் போதைப் பொருள் கடத்தல் பிரவு அதிகாரிகள் கஞ்சா பயிரிட்ட வழக்கில் இருவரை கைது செய்தனர். Surra பகுதியில் 40 வயதுடைய ஒருவரின் வீட்டில் கஞ்சா வளர்ப்பதற்காக பாதுகாப்பு அதிகாரங்களுக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் நடத்திய சோதனையில் கஞ்சா செடிகளை அதிகாரிகள் கண்டறிந்தனர். மேலும் வீட்டில பல பகுதிகளில் நடத்திய சோதனையில் 50 கிராம் ஹாஷிஷ் மற்றும் ஒரு பையில் கஞ்சா விதைகளின் இருப்பதை கண்டறிந்தனர். மேலும் நடந்த விசாரணையில் கஞ்சா அதிகமாக பயிரிடப்படும் நாடுகளில் ஒன்றிலிருந்து விமான சரக்கு சேவை வழியாக நாட்டிற்கு கொண்டு வந்ததாக குற்றவாளி ஒப்புக்கொண்டார்.

மேலும் அவரது நண்பரும் வீட்டில் கஞ்சா வளர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வளர்த்தததாகவும்,விற்பனைக்கு அல்ல என்று குற்றவாளிகள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதை அவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க கூறிய பொய்யாகவே அதிகாரிகள் இதை கருதுகின்றனர். இதையடுத்து சட்டத்திற்கு புறம்பாக துஷ்பிரயோகம் செய்யும் நோக்கத்துடன் போதைப்பொருள் கைவசம் வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளில்,சட்ட நடவடிக்கைகளுக்காக  உயர் பாதுகாப்பு வட்டாரங்களிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேரும் குவைத் குடிமகன்கள் என்பது அறிக்கையில் தெரியவந்துள்ளது.

Drug Control | Kuwait Police | Arrested Criminals

Add your comments to Search results for Kuwait Police