BREAKING NEWS
latest

Technology - Arab Tamil Daily - The 24×7 Gulf News

Latest Technology News, Articles, Technology Images, Videos, Full-Time GCC Arabic News in Tamil, Film, Entertainment, Politics, and Sports Updates from Arab Tamil Daily.

Saturday, December 19, 2020

கணினியிலும் விரைவில் வாட்ஸ்-அப், வீடியோ ஆடியோ அழைப்புகளை அறிமுகம் செய்யவுள்ளது:

Dec-19,2020

நாம் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்-அப் செயலியில்  பயன்படுத்தப்படும் சில வசதிகள் கணினி இல்லை குறிப்பாக வீடியோ&ஆடியோ அழைப்புகளை செய்ய முடியாது. இதையடுத்து கணினியிலும் விரைவில்  இந்த வசதி அறிமுகம் செய்ய உள்ளதாக குழுமத்தின் செய்தி தொடர்பாளர் ஒரு அறிக்கையில தெரிவித்துள்ளார்.

தற்போது கணினியில் 'பீட்டா' (Beta) வாட்ஸ்-அப் பயனர்களுக்கு சோதனை முயற்சியாக இவ்வசதி கிடைக்கிறது. கணினி மூலம் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் செய்யப்பட்டாலும் டெஸ்க்டாக் செயலியில் இணைப்புக்காக ஸ்மார்ட்போன் அவசியம். ஸ்மார்ட்போன் இல்லாமல் கணினியில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

நண்பர்கள், குடும்பத்தினருடன் வீடியோ பகிர்ந்துகொள்வதற்கு முன்பு அல்லது Status வைப்பதற்கு முன்பு அதை ஒலியில்லா வடிவுக்கு  மாற்றுவதற்கான வசதியை வழங்கவும் வாட்ஸ்அப் திட்டமிட்டு வருகிறது. அட்வான்ஸ்ட் வால்பேப்பர் வசதியை வாட்ஸ்-அப் அறிமுகம் செய்து வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு அரட்டைக்கும் வெவ்வேறு வால்பேப்பர்களை பயன்படுத்த முடியும்


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to Technology

Friday, December 18, 2020

தமிழ்ப் பயனாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் கூகுள் நிறுவனம்:


Dec-18,2020

இந்த 2020 காலக்கட்டத்தில் கூகுள் இணையத் தேடுதல் தளத்தை பயன்படுத்தாத யாருமே இருக்க முடியாது. எந்தத் தகவலைப் பெற வேண்டுமென்றாலும் நாம் முதலில் தேடுவது கூகுளைத்தான்.இதையடுத்து இப்போது கூகுள் நிறுவனம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு இந்திய மொழி பயன்பாட்டாளர்களுக்கு, இன்ப அதிர்ச்சியாக புதிய வசதியை அறிமுகம் செய்யவுள்ளது.

இப்போது, கூகுளில் நாம் ஆங்கிலத்தில் தேடினால் அதே மொழியில்தான் பதில்களும் வரும். ஆனால், அடுத்த மாதத்தில் இருந்து, ஆங்கிலத்தில் தேடினாலும் தமிழ், தெலுங்கு, வங்காளம், மராத்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் பதில் வரும். அதேபோல் தங்கிலீசில் தேடினாலும், ஆங்கிலம் மற்றும் தமிழில் பதில் வரும். இந்த வசதி மராத்தி, வங்காளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கும் பொருந்தும். மேலும், கூகுள் மேப், ஒன்பது இந்திய மொழிகளில் பயன்படுத்த முடியும் எனக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to Technology