BREAKING NEWS
latest

Sunday, December 13, 2020

துபாயிக்கு எமிரேட்ஸ் விமானத்தில் செல்லும் நபர்கள் ஐந்து நட்சத்திர விடுதியில் இலவசமாக தங்கலாம்:

Dec-13,2020

உலகெங்கிலும் இருந்து துபாய்க்கு வரும்  பார்வையாளர்களை ஈர்க்க எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய அறிவிப்பில் எமிரேட்ஸ் விமானங்கள் வழியாக துபாய்க்கு வருபவர்களுக்கு, விமானம் நிறுவனம் ஐந்து நட்சத்திர ஜே.டபிள்யூ மேரியட் மார்கியூஸ்(JW Marriott Marquis)-யில் இலவச தங்குமிடத்தை வழங்கும் என்று அறிவித்துள்ளது.

துபாய் சுற்றுலாத்துறையுடன் இணைந்து இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. டிசம்பர் 6 முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 வரை துபாய் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த சலுகை செல்லுபடியாகும்.

எமிரேட்ஸ் Economy Class பயணிகளுக்கு ஒரு நாள் சலுகையும் மற்றும் First Class, Business Class-யில் செல்லும் பயணிகளுக்கு இரண்டு நாட்கள் இலவச ஐந்து நட்சத்திர விடுதி கிடைக்கும். இதற்கிடையில், குளிர்காலம் தொடங்கியுள்ளதால், துபாய்க்கு வருகின்ற பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.



 

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to துபாயிக்கு எமிரேட்ஸ் விமானத்தில் செல்லும் நபர்கள் ஐந்து நட்சத்திர விடுதியில் இலவசமாக தங்கலாம்:

« PREV
NEXT »