குவைத்தின் பிரபல தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் சட்டவிரோதமான விசா விற்பனை ஆட்கடத்தல் தொடர்பான போலி முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது
Image : ஷேக் ஃபஹத் யூசப்
விசா மோசடிக்கு எதிராக குவைத் கடுமையான நடவடிக்கையை தொடங்கியது
குவைத்தின் பிரபல தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் சட்டவிரோதமான விசா விற்பனை மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான செயல்களுக்கு எதிராக உள்துறை அமைச்சகம் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருவதாக அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி இன்று செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் யூசப்பின் உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, உள்துறை அமைச்சகத்தில் உள்ள குடியிருப்பு விவகார புலனாய்வுத்துறை அதிகாரிகள் சிறப்புத் திட்டங்களைத் தயாரித்து வருகிறது. தற்போது, விசா வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களும், இதற்காக போலி உரிமங்களை கைவசம் வைத்திருப்பவர்களும் புலனாய்வுத்துறையின் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் கண்டுபிடிக்கப்பட்டு சட்டப்பூர்வமாகக் கையாளப்படுவார்கள் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், யாரும் அநியாயமாக தண்டிக்கப்பட மாட்டார்கள் என்றும், இந்த குற்றத்துக்கு பொறுப்பானவர்கள் யாரும் சட்டத்திலிருந்து தப்ப முடியாது என்றும் வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.
விசா வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஸ்பான்சர்கள் மற்றும் முகவர்களைக் கண்டுபிடிக்க அமைச்சகம் இனிமுதல் ஒரு புதிய முறையைப் பின்பற்ற உள்ளது. அதன்படி குடியிருப்புச் சட்டத்தை மீறி வேலை செய்பவர்கள் பிடிபட்டால், விசா வழங்கிய நபர்களின் தகவல்கள் பிடிபட்ட அவர்களிடமிருந்து சேகரிக்கப்படும், பின்னர் முகவர்கள் கண்காணிக்கப்படுவார்கள், ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள். இதற்கிடையில், கடந்த ஆண்டு மனித கடத்தல் தொடர்பாக இயற்றப்பட்ட சட்டம் கடுமையான தண்டனைகளை வழங்குகிறது.
சட்டவிரோதமான விசா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10,000 தினார் வரை அபராதமும் விதிக்க சட்டம் வகை செய்கிறது. கடத்தப்பட்ட நபர்கள் மற்றும் விசாக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அபராதம் அதிகரிக்கும். குற்றவாளி அரசு ஊழியராக இருந்தால் தண்டனை இரட்டிப்பாகும் என்றும் சட்டம் கூறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Worker Visa | Indian Workers | Visit Visa