குவைத் விமான நிலையம் வழியாக பயணிக்கும் போது பணம் தங்கம் விலையுயர்ந்த கடிகாரங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் போன்றவை கைவசம் இருந்தால் சுங்க அறிவிப்பு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்
Image : குவைத் விமான நிலைய சோதனை பகுதி
குவைத் விமான நிலையம் வழியாக பயணிக்கும் உங்கள் கையில் 3000 தினார் அல்லது அதற்கு மேல் பணம் உள்ளதா...??
குவைத் சர்வதேச விமான நிலையம் வழியாக 3,000 தினார் அல்லது அதற்கு மேல் பணத்தை எடுத்துச் செல்லும் பயணிகளும், அதேபோல் தங்கம்(அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக), விலையுயர்ந்த கடிகாரங்கள், மின்னணு சாதனங்கள் போன்றவை கைவசம் இருந்தாலும் அவற்றை சுங்க அறிவிப்பு படிவத்தை(self declaration form) பூர்த்தி செய்வது கட்டாயம் என்று சுங்கத்துறை பொது நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேபோல் கை பையில் விலையுயர்ந்த சாமான்களை எடுத்துச் செல்லும் போது அந்த பொருட்களுக்கான விலைப்பட்டியல் மற்றும் உரிமை ஆவணங்களையும் சம்மந்தப்பட்ட பயணி கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. சுங்கத்துறைக்கு தெரிவிக்காமல் மேற்குறிப்பிட்ட பொருட்களை கொண்டு பயணம் செய்வது சட்ட மீறலாகக் கருதப்படும். இதுபோன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்படலாம் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
நாட்டிற்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் பயணிகள் சுங்கப் படிவத்தை நிரப்ப வேண்டும் என்றும், இது பாதுகாப்பு மற்றும் உலகளாவிய தரநிலைகளை உறுதி செய்வதற்கான ஒரு நடவடிக்கை என்றும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் தகவலுக்கு, சுங்கத்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது விமான நிலைய அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேல் குறிப்பிட்ட நடைமுறை குவைத் கடல் எல்லை வழியாகவோ அல்லது சாலை வழியாகவோ நாட்டின் எல்லை தாண்டி செல்லும் போதும் பொருந்தும் என்பதும் குறிப்பிடதக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Kuwait Airport | Customs Checking | Self Declaration