குவைத்திலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு சென்ற இந்திய இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது
Image : உயிரிழந்த இளைஞர் பிருத்விராஜ்
குவைத்திலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு சென்ற இந்திய இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்
குவைத்தில் வேலை செய்து வந்த பிருத்விராஜ்(27) என்ற இந்திய இளைஞர் சொந்த ஊரில் நேற்றிரவு நடந்த விபத்தில் மரணமடைந்தார். இவர் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள முண்டூரைச் சேர்ந்தவர் ஆவார். பாலக்காடு கண்ணாடி அடுத்த லுலு மால் அருகே வைத்து நேற்று(02/12/25) செவ்வாய்க்கிழமை இரவு 11:00 மணி அளவில் நடந்த வாகன விபத்தில் சிக்கி கொண்டார்.
குவைத்தில் கடந்த பல வருடங்களாக வேலை செய்து வந்த பிருத்விராஜ், துபாய்க்கு வேலை மாற்றம் கிடைத்ததை தொடர்ந்து, விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்றிருந்த நிலையில் விபத்தில் சிக்கி கொண்டார். இவருடைய தந்தை ஹரிதாசன் முத்து குவைத்திலுள்ள நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றார். மகனின் மரண செய்தி அறிந்த அவர் இன்று(03/12/25) புதன்கிழமை இரவு ஊருக்கு திரும்புகிறார்.
Indian Worker | Road Accident | Kuwait Worker

