குவைத்தில் போலி முகவரி உருவாக்கி வசிக்கின்ற எத்தனை பேர் சிக்க போறாங்களோ தெரியலியே கடவுளே.....
Image : கைது செய்யப்பட்ட நபர்கள்
குவைத்தில் வெளிநாட்டினரிடமிருந்து பணம் பெற்று போலி முகவரிகளை உருவாக்கி வந்த ஒரு கும்பலை அதிகாரிகள் கைது செய்தனர்
குவைத்தில் வெளிநாட்டினரிடமிருந்து பணம் பெற்று போலி முகவரிகளை உருவாக்கி வந்த ஒரு கும்பலை அதிகாரிகள் கைது செய்தனர். அரசின் குற்றப் புலனாய்வுத்துறை, சிவில் தகவல் ஆணையத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர், முகவரிகள் பெற இடைத்தரகர்களாக செயல்பட்ட நபர்களும் மற்றும் அவர்களுக்கு பணம் கொடுத்து போலியாக முகவரிகள் பெற காத்திருந்த 7 நபர்கள் உள்ளிட்டவர்கள் அடங்கிய ஒரு கும்பலை கைது செய்துள்ளனர்.
மேலும் செய்தியில் சிக்கிய ஊழியர் தனது அதிகாரப்பூர்வ பதவியைப் பயன்படுத்தி சிவில் தகவல் ஆணையத்தின் அரசு இணையதள மின்னணு அமைப்பில் நுழைந்து முகவரி பெறவேண்டிய வெளிநாட்டினரான நபர்கள் நேரில் ஆஜராகாமல், சட்டபடி தேவையான ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்கவோ செய்யாமல் போலியான முகவரிகளை உருவாக்கிய குற்றத்தைச் செய்து வந்துள்ளார்.
ஒவ்வொரு போலியான வசிப்பு முகவரிக்கும் 120 தினார் வரை கட்டணமாக(லஞ்சமாக) வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து குவைத்துக்கு உள்ளேயும் வெளியேயுமாக பல முகவர்களுடன் இணைந்து இதுபோன்ற 5,000 க்கும் மேற்பட்ட சட்டவிரோத போலியான முகவரிகளை அவர் உருவாக்கியதை விசாரணையில் ஒப்புக்கொண்டார். பிடிபட்ட நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைக் குழு இரண்டு தரகர்களையும், போலியான முகவரி பெற அவர்களுக்கு பணம் கொடுத்த ஏழு நபர்களையும் கைது செய்தனர்.
குற்றவாளியான ஊழியர் இப்படி கிடைத்த பணத்தை கொண்டு நகைகள், தங்கக் கட்டிகள் மற்றும் பிற ஆடம்பரப் பொருட்களை வாங்கப் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் கூடுதல் சட்ட நடவடிக்கைகளுக்காக அரசின் பொது வழக்கறிஞர் பிரிவு அலுவலகத்தில் குற்றவாளிகள் அனைவரும் ஒப்படைக்கப்பட்டன. இவனிடம் போலியாக முகவரி ரெடி பண்ணின எத்தனை பேர் இவன் வாக்குமூலம் அடிப்படையில் சிக்க போறாங்களோ தெரியலியே.... பிடிபட்ட நபர்கள் குறித்த கூடுதல் விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை...போலியாக முகவரியில் யாராவது வசித்து வந்தால் எதுக்கும் இந்த புகைப்படத்தை சற்று உற்று நோக்குவது நல்லது
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Kuwait Police | Fake Address | Kuwait Workers