குவைத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 தீ விபத்துகள் ஒருவர் மரணமடைந்தார் 9 பேர் வரையில் காயமடைந்தனர்
Image:தீ விபத்தின் புகைப்படம்
குவைத்தில் கோடையில் அதிகரிக்கும் தொடர் தீ விபத்துகள் குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
குவைத்தில் உள்ள அல்-குரைன் சந்தையின் முதல் மாடியில் உள்ள ஒரு உணவகத்திலும் அருகிலுள்ள கடைகளிலும் இன்று(03/07/25) வியாழக்கிழமை காலையில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் 5 பேர் வரையில் காயமடைந்தனர். அல்-பைராக் மற்றும் அல்-குரைன் நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக பொது தீயணைப்புப் படை அறிவித்தது.
Image: தீ விபத்தின் புகைப்படம்
அதேபோல் இன்று(03/07/25) வியாழக்கிழமை காலையில் ஃபர்வானியா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்திலும் தீ விபத்து ஏற்பட்டது. இதை ஃபர்வானியா மற்றும் சுபான் மையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் இணைந்து அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தில் நான்கு பேர் வரையில் காயமடைந்தனர்.
Image: தீ விபத்தின் புகைப்படம்
மேலும் அதே ஃபர்வானியா பகுதியிலுள்ள தொழிலாளர் குடியிருப்பில் நேற்று(02/07/25) புதன்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் அறை முழுமையாக எரிந்து சாம்பலாயின. இந்த தீ விபத்திலும் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும் ஃபர்வானியா மற்றும் சுபான் மையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுப்படுத்தினர். உடல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. உயிரிழந்தவர் எந்த நாட்டவர் என்ற கூடுதல் விபரங்கள் வெளியாகவில்லை. இந்த மூன்று தீ விபத்துகள் தொடர்பாகவும் விசாரனை தொடங்கியுள்ளது.
Image: தீ விபத்தின் புகைப்படம்
அதேநேரம் குவைத்தில் உண்மையான கோடைக்காலம் இன்று(03/07/25) வியாழக்கிழமை தொடங்கும் என்றும் அல்-உஜைரி அறிவியல் ஆய்வு மையம் கடந்த வாரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தது. இதையடுத்து கடுமையான வெயில் அடுத்த 13 நாட்களுக்கு நீடிக்கும் இந்த நாட்களில் வானிலை வளிமண்டல வெப்பநிலை தற்போதைய வெப்பத்தை விட குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும்.
Image: தீ விபத்தின் புகைப்படம்
மேலும் இந்த நாட்களில் நாடு கடுமையான வறட்சி மற்றும் வெப்பக்காற்றை அனுபவிக்கும் என்றும், சூரிய மற்றும் சந்திர நாட்காட்டிகளில் இந்தப் பருவம் "அல்-ஹக்கா" என்று அழைக்கப்படுகிறது என்றும் அறிவியல் மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கடுமையான கோடை காலத்தில் தீ விபத்துக்கு வாய்புகள் அதிகம், எனவே அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Image: தீ விபத்தின் புகைப்படம்
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Kuwait Police | Fire Accident | Kuwait Workers