BREAKING NEWS
latest

Thursday, July 17, 2025

குவைத் குற்றவியல் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பணத்திற்கு ஈடாக மந்திரவாதம், சூனியம் மற்றும் ஜோசியம் சொல்லி மக்களை ஏமாற்றி வந்த மோசடி குற்றவாளியான நபரை கைது செய்தனர்

குவைத்தில் பணத்திற்கு ஈடாக சூனியம் செய்து மோசடி செய்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார்

Image : கைது செய்யப்பட்ட நபர்

குவைத் குற்றவியல் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பணத்திற்கு ஈடாக மந்திரவாதம், சூனியம் மற்றும் ஜோசியம் சொல்லி மக்களை ஏமாற்றி வந்த மோசடி குற்றவாளியான நபரை கைது செய்தனர்

குவைத் குற்றவியல் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பணத்திற்கு ஈடாக மந்திரவாதம், சூனியம் மற்றும் ஜோசியம் சொல்லி மக்களை ஏமாற்றி வந்த மோசடி குற்றவாளியான நபரை கைது செய்தனர். பணத்திற்கு ஈடாக மந்திரம், சூனியம் மற்றும் ஜோசியம் சொல்லி மக்களை ஏமாற்றி வந்த இந்த நபரை கடந்த சில நாட்களாக கண்காணித்து ஆதாரத்துடன் அதிகாரிகள் சிக்க வைத்தனர்.

குற்றவாளி குவைத் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினரையும் ஏமாற்றி, எதிர்காலத்தை கணிக்கவும், குடும்ப மற்றும் நிதி பிரச்சினைகளை தீர்க்கவும் முடியும் என்று நம்ப வைத்தார். அவரது இந்த சேவைகளுக்காக பெரும் தொகையையும் பெற்று வந்தார். மோசடி பற்றிய தகவல்களைப் பெற்ற அதிகாரிகள், ரகசிய நடவடிக்கை மூலம் குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்தனர்.

மேலும் மந்திர புத்தகங்கள், பல்வேறு திரவங்கள், பொருட்கள், காகித சுருள்கள், பணம் சேகரிக்கும் பெட்டிகள் மற்றும் சூனிய சடங்குகளுக்காக தயாரிக்கப்பட்ட சிறப்பு ஆடைகள் உள்ளிட்ட சூனியத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்களையும் குற்றவாளியின் அறையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. மந்திரவாதம், சூனியம் மற்றும் ஜோசியம் ஆகியவை வளைகுடா நாடுகளில் முற்றிலுமாக தடை செய்யப்பட்ட ஒரு செயல் ஆகும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Fraud Job | Black Magic | Kuwait Police

Add your comments to

குவைத் அனைத்து வகையான விசிட் விசாக்களுக்கான ஆன்லைன் விசா தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

குவைத் உள்துறை அமைச்சகமானது அனைத்து வகையான விசிட் விசாக்களை எளிதாக பெற இன்று புதன்கிழமை ஆன்லைன் விசா தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

Image : குவைத் விமான நிலையம்

குவைத் அனைத்து வகையான விசிட் விசாக்களுக்கான ஆன்லைன் விசா தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

https://kuwaitvisa.moi.gov.kw என்பது குவைத் உள்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஆன்லைனில் விசா பெறுவதற்கான மின்னணு தளமாகும். இதன் வழியாக தனிநபர்கள் பல்வேறு வகையான மின்னனு விசாக்களுக்கு விண்ணப்பிக்கவும், அவைகளின் விண்ணப்ப நிலையைக் கண்காணிக்கவும், விசா தகவல்களைச் சரிபார்க்கவும் மற்றும் பிற குடியேற்றம் தொடர்பான சேவைகளை பெறுவதற்கு அணுகவும் அனுமதிக்கிறது. முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் அல்-யூசப்பின் உத்தரவுகளின் பேரில், உள்துறை அமைச்சகத்தின் செயல் துணைச் செயலாளர் மேஜர் ஜெனரல் அலி அல்-அத்வானியின் மேற்பார்வையின் கீழ், “குவைத் விசா தளம்" அறிமுகப்படுத்துவதாக உள்துறை அமைச்சகம் இன்று(16/07/25) புதன்கிழமை காலையில் அறிவித்தது.

குவைத்துக்கு வருகை தர விரும்பும் நபர்களுக்காக சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா, வணிக, குடும்ப மற்றும் அரசு துறை விசிட் விசாக்களை பெற இந்த தளமானது உள்துறை அமைச்சகத்தின் சட்ட விதிமுறைகள் மற்றும் பொது குடியிருப்பு விவகாரத்துறையால் வழங்கப்பட்ட தேவைகளுக்கு இணங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா, குடும்ப, வணிக மற்றும் அரசு துறை விசிட் விசாக்கள் பெற தகுதியான பயனாளிகள் யார் யார் என்ற விவரங்கள் மற்றும் ஒவ்வொரு விசாவுக்கும் நாட்டில் தங்கியிருக்க அனுமதிக்கும் காலம் பற்றிய தகவல்களையும் இந்த தளம் வழங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனைத்து வருகை விசாக்களும் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்பட்டவை என்றும், பார்வையாளர் மற்றும் ஸ்பான்சரிடமிருந்து அனைத்து துணை ஆவணங்களும் தேவை என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது, அது தனிநபர்கள், நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் என எதுவாக இருந்தாலும் பின்வரும் விதிமுறை கட்டாயமாகும். மேலும் உங்கள் பாஸ்போர்ட் விசா பெற விண்ணப்பிக்கும் முன் குறைந்தது 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும்(6 months Validity) விதத்தில் இருக்க வேண்டும் எனவும், அனைத்து நாட்டினரும் இந்த ஆன்லைன் விசாக்களுக்கு தகுதியானவர்கள் அல்ல எனவும், எனவே தயவுசெய்து முதலில் விசா கொள்கையைச் சரிபார்க்கவும்(விசா விதிமுறைகளை சரிபார்க்கவும்) வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் விசா வகை மற்றும் விசா பெற தேவையான ஆவணங்களைப் பொறுத்து செயலாக்க நேரங்கள் மாறுபடும். அனுமதிக்கப்பட்ட தங்கும் காலத்தை மீறுவது அல்லது விசா நோக்கத்தை துஷ்பிரயோகம் செய்வது உள்ளிட்ட விசா நிபந்தனைகளை மீறுவது கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கும் மற்றும் அபராதங்களுக்கும் வழிவகுக்கும் என்று அமைச்சகம் எச்சரித்துள்ளது .

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | Visit Visa | Online Visa

Add your comments to

Thursday, July 10, 2025

அமீரகம் குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்த துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

அமீரகத்தின் அபுதாபி எமிரேட்டில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை கொன்றுவிட்டு குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்த துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த பெண் மற்றும் குழந்தை

அமீரகம் குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்த துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

ஷார்ஜாவில் இந்தியா,கேரளா மாநிலத்தை சேர்ந்த இளம் பெண்ணும் அவரது ஒன்றரை வயது மகளும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.கொல்லம் மாவட்டத்தில் உள்ள கேரளபுரத்தைச் சேர்ந்த நிதீஷ் என்பவருடைய மனைவி விபஞ்சிகா(33) மற்றும் அவருடைய குழந்தை வைபவியுமே சடலமாக மீட்கப்பட்டனர். முதல்கட்ட அறிக்கைப்படி தற்கொலை செய்த கயிற்றை போட்டு முதலில் ஒரு முனையில் குழந்தையை தொங்க விட்ட பிறகு மறுமுனையில் விபஞ்சிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுவதாக,பெண்ணின் கழுத்தில் தற்கொலைக்கான தெளிவான அறிகுறிகள் காணப்பட்டதாகக் சம்பவ இடத்தைப் பரிசோதித்த மருத்துவர் கூறினார்.

குழந்தையின் மரணத்திற்கு தாயே காரணம் என்பது ஆரம்ப கட்ட தடயங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை மதியம் ஷார்ஜாவின் அல் நஹ்தாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்தது. துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் மனிதவளத்துறையில் பணிபுரியும் விபஞ்சிகாவும், துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வசதி வாரிய பொறியாளரான நிதிஷுக்கும் இடையே கடந்த சிறிது காலமாக நல்லுறவில் இல்லை எனவும், இருவரும் தனித்தனி இடங்களில் வசித்து வந்தனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

வரதட்சணை கேட்டு விபாஞ்சிகாவை நிதிஷ் தொடர்ந்து மனரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும், விவாகரத்து பெற அழுத்தம் கொடுத்ததாகவும் அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். இருப்பினும், விபாஞ்சிகாவுக்கு விவாகரத்து செய்வதில் ஆர்வம் இல்லை. விவாகரத்துசெய்தால் உயிருடன் வாழ மாட்டேன் என்று அந்தப் பெண் தனது வேலைக்காரியிடமும் தாயிடமும் கூறி வந்தாள். விவாகரத்து தொடர்பாக விபாஞ்சிகாவுக்கு வழக்கறிஞரின் நோட்டீஸ் நேற்று பிற்பகுதியில் வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அந்தப் பெண் தனது மகளைக் கொன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது.

மரணம் குறித்து மேலும் விசாரணை நடத்த அமீரக அதிகாரிகளிடம் கேட்போம் என்று உறவினர்கள் தெரிவித்தனர். பணிப்பெண் வந்து நீண்ட நேரமாக அழைத்தும் கதவு உட்பட்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த பிறகு, அவசரகாலப் மீட்பு குழுவினர் மற்றும் காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். பெண்ணின் உடல் மதியம் 2 மணியளவில் மருத்துவமனைக்கும், பின்னர் பிரேத பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வகத்திற்கும் மாற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அல் புஹைரா போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Baby Mother | Uae Suicide | Indian Family

Add your comments to

Tuesday, July 8, 2025

ஒமானில் தூசிக்காற்றில் சிக்கிய வாகன விபத்தில் 4 வயது இந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்

ஒமானின் ஹைமா என்ற இடத்திற்கு அருகே உள்ள ஆதாமில் தூசிக்காற்றில் சிக்கிய வாகன விபத்தில் 4 வயது இந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த குழந்தை ஜாசா ஹைரா

ஒமானில் தூசிக்காற்றில் சிக்கிய வாகன விபத்தில் 4 வயது இந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்:

ஒமானின் ஹைமா என்ற இடத்திற்கு அருகே உள்ள ஆதாமில் நடந்த சாலை விபத்தில் இந்திய சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். கேரளா மாநிலம் , கண்ணூர் மாவட்டம், மட்டனூரைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி ஜாசா ஹைரா என்பது தெரியவந்துள்ளது. அவரது தந்தை நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சலாலாவிலிருந்து திரும்பி வரும் வழியில் ஆதாமில் வைத்து விபத்துக்குள்ளானார்கள்.

இன்று(07/07/25) திங்கட்கிழமை அதிகாலை 1 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. பலத்த தூசிக்காற்று காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்தது. வாகனத்திலிருந்து தெறித்து வெளியே விழுந்த ஜாசா ஹைரா பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் பெரிய அளவில் இல்லை, அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நடைமுறைகள் முடிந்ததும் உடல் இன்று மாலையில் இந்தியா கொண்டு செல்லப்படும் என்று KMCC அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Baby Death | Oman Accident | Indian Family

Add your comments to

Sunday, July 6, 2025

சவுதியில் ஊருக்கு வரவிருந்த நிலையில் தவறி விழுந்து தமிழர் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது

சவுதியிலிருந்து சொந்த ஊருக்கு வரவிருந்த நிலையில் தவறி விழுந்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் உயிரிழந்த துயரமான செய்தி மனைவி குழந்தைகள் மற்றும் குடும்பத்தார் உள்ளிட்டவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது

Image : புகைப்படம் உயிரிழந்த சசி அவர்கள்

சவுதியில் ஊருக்கு வரவிருந்த நிலையில் தவறி விழுந்து தமிழர் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்த மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் சசி(52). இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். சசி கடந்த 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக சவுதியில் வேலை செய்து வந்தார். பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய சசி சில வருடங்கள் ஊரில் இருந்தார். பின்னர் மீண்டும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று உள்ளார். அவருடைய அண்ணணும் அங்கு வேலை செய்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் சசி உறவினர் ஒருவர் திருமண நிகழ்ச்சி இருந்ததாலும், சென்று இரண்டு ஆண்டு கடந்ததாலும் சொந்த ஊருக்கு அடுத்த ஓரிரு நாட்களில் திரும்ப திட்டமிட்டு இருந்தார். இது தொடர்பாக மனைவி மற்றும் மக்களிடம் தகவல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், சசி தங்கியிருந்த இடத்தில் மாடிப்படியில் ஏறிய போது விழுந்து படுகாயம் அடைந்து உயிரிழந்ததாக அண்ணன் ஊருக்கு தகவல் தெரிவித்தார்.

இதைக்கேட்டு அவரது மனைவி,குழந்தைகள் மற்றும் குடும்பத்தார் கதறி அழுதனர். வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற சசி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சட்ட நடவடிக்கைகள் முடித்து சசியின் சடலத்தை விரைவாக ஊருக்கு கொண்டு வர மத்திய வெளியுறவுத்துறையும், மாநில அரசும் மற்றும் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Worker Death | Tamil Worker | Saudi Worker

Add your comments to

Saturday, July 5, 2025

குவைத்தில் தமிழர் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்த நிலையில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

குவைத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்த பக்ருதீன் என்ற தமிழகத்தை சேர்ந்த நபர் இன்று அவர் தங்கியிருந்த குடியிருப்பில் வைத்து மாரடைப்பால் மரணமடைந்தார்

Image : மரணமடைந்த பக்ருதீன்

குவைத்தில் தமிழர் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்த நிலையில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது:

குவைத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்த பக்ருதீன்(வயது-47) என்ற இந்தியா, தமிழகத்தை சேர்ந்த நபர் இன்று(04/07/25) வெள்ளிக்கிழமை மதியம் 12:00 மணி அளவில் அவர் தங்கியிருந்த குடியிருப்பில் வைத்து மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த மேலகொண்டாழி தமிழர் தெருவை சேர்ந்தவர் ஆவார்,இவருடைய தந்தை பெயர் அபுபக்கர் என்பது ஆகும்.

இதையடுத்து சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் துரிதமாக முடிக்கப்பட்டு உடல் இன்று வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணி அளவில் குவைத்திலுள்ள சுபஹான் தஹார் மையவாடியில் இஷா தொழுகைக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள தமிழ் மக்கள் பலர் நல்லடக்கத்தில் கலந்து கொண்டனர்.

இதற்கான அனைத்து வேலைகளையும் சமூக சேவகரும் மற்றும் குவைத் இந்திய தூதரக பிரதிநிதியுமான அலிபாய் அவர்கள் செய்து முடித்தார். இவர் குவைத்திலுள்ள மக்கள் சேவை மையத்திலும் இணைந்து செயல்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Worker Death | Tamil Worker | Kuwait Workers

Add your comments to

Friday, July 4, 2025

குவைத்தில் வாடகை டாக்ஸியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அழகான குழந்தையை பெற்றெடுத்தார்

குவைத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட பிறகு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் டாக்ஸியில் வைத்து ஒரு அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்தார்

Image : மருத்துவமனையில் பெண் அனுமதிக்கப்பட்ட காட்சி

குவைத்தில் வாடகை டாக்ஸியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அழகான குழந்தையை பெற்றெடுத்தார்

குவைத்தில் டாக்ஸியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று(04/07/25) வெள்ளிக்கிழமை குழந்தை பெற்றெடுத்தார். சால்மியா பிளாக் 10-இல் தனது குடும்பத்துடன் வசித்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் டாக்ஸியில் வைத்து ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குறிப்பிட்ட பெண்ணுக்கு இன்று காலையில் பிரசவ வலி ஏற்பட்ட பிறகு, அவரது கணவர், குவைத்தில் இயங்கி வருகின்ற "யாத்திரா டாக்ஸி" குழுவை சேர்ந்த மனோஜ் என்பவருடைய டாக்ஸியை அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறி அழைத்தார். இதை அறிந்த அவர் இளம்பெண்ணை சபா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டு இருந்தார். இருப்பினும், அவர்கள் வாகனத்தில் ஏறியவுடன், அவர்களுக்கு பிரசவ அறிகுறிகள் தெரிந்தன. இதைத் தொடர்ந்து, வாகனத்தின் ஓட்டுநர், கணவரின் உதவியுடன் வாகனத்தின் பின் இருக்கையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்.

தொடந்து ஐந்தாவது ரிங் ரோடு வழியாக மருத்துவமனைக்கு கடந்து செல்லும் போது, அந்த இளம் பெண் மன்னரின் பயான் அரண்மனை அருகில் வைத்து டாக்ஸியிலேயே பிரசவித்தார். பின்னர் உடனடியாக அந்த இளம் பெண்ணை மருத்துவமனைக்கு வந்தவுடன், மருத்துவமனை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு தாய் மற்றும் குழந்தையை மகப்பேறு வார்டுக்கு மாற்றி,மேலும் சிகிச்சை அளித்தனர். குழந்தை பெற்றெடுத்த இளம் பெண்ணுக்கு இது மூன்றாவது பிரசவம். தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Hospital | Tamil Worker | Kuwait Workers

Add your comments to