குவைத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்த பக்ருதீன் என்ற தமிழகத்தை சேர்ந்த நபர் இன்று அவர் தங்கியிருந்த குடியிருப்பில் வைத்து மாரடைப்பால் மரணமடைந்தார்
Image : மரணமடைந்த பக்ருதீன்
குவைத்தில் தமிழர் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்த நிலையில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது:
குவைத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்த பக்ருதீன்(வயது-47) என்ற இந்தியா, தமிழகத்தை சேர்ந்த நபர் இன்று(04/07/25) வெள்ளிக்கிழமை மதியம் 12:00 மணி அளவில் அவர் தங்கியிருந்த குடியிருப்பில் வைத்து மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த மேலகொண்டாழி தமிழர் தெருவை சேர்ந்தவர் ஆவார்,இவருடைய தந்தை பெயர் அபுபக்கர் என்பது ஆகும்.
இதையடுத்து சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் துரிதமாக முடிக்கப்பட்டு உடல் இன்று வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணி அளவில் குவைத்திலுள்ள சுபஹான் தஹார் மையவாடியில் இஷா தொழுகைக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள தமிழ் மக்கள் பலர் நல்லடக்கத்தில் கலந்து கொண்டனர்.
இதற்கான அனைத்து வேலைகளையும் சமூக சேவகரும் மற்றும் குவைத் இந்திய தூதரக பிரதிநிதியுமான அலிபாய் அவர்கள் செய்து முடித்தார். இவர் குவைத்திலுள்ள மக்கள் சேவை மையத்திலும் இணைந்து செயல்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Worker Death | Tamil Worker | Kuwait Workers