குவைத் உள்துறை அமைச்சகமானது அனைத்து வகையான விசிட் விசாக்களை எளிதாக பெற இன்று புதன்கிழமை ஆன்லைன் விசா தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
Image : குவைத் விமான நிலையம்
குவைத் அனைத்து வகையான விசிட் விசாக்களுக்கான ஆன்லைன் விசா தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
https://kuwaitvisa.moi.gov.kw என்பது குவைத் உள்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஆன்லைனில் விசா பெறுவதற்கான மின்னணு தளமாகும். இதன் வழியாக தனிநபர்கள் பல்வேறு வகையான மின்னனு விசாக்களுக்கு விண்ணப்பிக்கவும், அவைகளின் விண்ணப்ப நிலையைக் கண்காணிக்கவும், விசா தகவல்களைச் சரிபார்க்கவும் மற்றும் பிற குடியேற்றம் தொடர்பான சேவைகளை பெறுவதற்கு அணுகவும் அனுமதிக்கிறது. முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் அல்-யூசப்பின் உத்தரவுகளின் பேரில், உள்துறை அமைச்சகத்தின் செயல் துணைச் செயலாளர் மேஜர் ஜெனரல் அலி அல்-அத்வானியின் மேற்பார்வையின் கீழ், “குவைத் விசா தளம்" அறிமுகப்படுத்துவதாக உள்துறை அமைச்சகம் இன்று(16/07/25) புதன்கிழமை காலையில் அறிவித்தது.
குவைத்துக்கு வருகை தர விரும்பும் நபர்களுக்காக சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா, வணிக, குடும்ப மற்றும் அரசு துறை விசிட் விசாக்களை பெற இந்த தளமானது உள்துறை அமைச்சகத்தின் சட்ட விதிமுறைகள் மற்றும் பொது குடியிருப்பு விவகாரத்துறையால் வழங்கப்பட்ட தேவைகளுக்கு இணங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா, குடும்ப, வணிக மற்றும் அரசு துறை விசிட் விசாக்கள் பெற தகுதியான பயனாளிகள் யார் யார் என்ற விவரங்கள் மற்றும் ஒவ்வொரு விசாவுக்கும் நாட்டில் தங்கியிருக்க அனுமதிக்கும் காலம் பற்றிய தகவல்களையும் இந்த தளம் வழங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அனைத்து வருகை விசாக்களும் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்பட்டவை என்றும், பார்வையாளர் மற்றும் ஸ்பான்சரிடமிருந்து அனைத்து துணை ஆவணங்களும் தேவை என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது, அது தனிநபர்கள், நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் என எதுவாக இருந்தாலும் பின்வரும் விதிமுறை கட்டாயமாகும். மேலும் உங்கள் பாஸ்போர்ட் விசா பெற விண்ணப்பிக்கும் முன் குறைந்தது 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும்(6 months Validity) விதத்தில் இருக்க வேண்டும் எனவும், அனைத்து நாட்டினரும் இந்த ஆன்லைன் விசாக்களுக்கு தகுதியானவர்கள் அல்ல எனவும், எனவே தயவுசெய்து முதலில் விசா கொள்கையைச் சரிபார்க்கவும்(விசா விதிமுறைகளை சரிபார்க்கவும்) வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் விசா வகை மற்றும் விசா பெற தேவையான ஆவணங்களைப் பொறுத்து செயலாக்க நேரங்கள் மாறுபடும். அனுமதிக்கப்பட்ட தங்கும் காலத்தை மீறுவது அல்லது விசா நோக்கத்தை துஷ்பிரயோகம் செய்வது உள்ளிட்ட விசா நிபந்தனைகளை மீறுவது கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கும் மற்றும் அபராதங்களுக்கும் வழிவகுக்கும் என்று அமைச்சகம் எச்சரித்துள்ளது .
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Kuwait Visa | Visit Visa | Online Visa