சவுதியிலிருந்து சொந்த ஊருக்கு வரவிருந்த நிலையில் தவறி விழுந்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் உயிரிழந்த துயரமான செய்தி மனைவி குழந்தைகள் மற்றும் குடும்பத்தார் உள்ளிட்டவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது
Image : புகைப்படம் உயிரிழந்த சசி அவர்கள்
சவுதியில் ஊருக்கு வரவிருந்த நிலையில் தவறி விழுந்து தமிழர் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்த மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் சசி(52). இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். சசி கடந்த 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக சவுதியில் வேலை செய்து வந்தார். பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய சசி சில வருடங்கள் ஊரில் இருந்தார். பின்னர் மீண்டும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று உள்ளார். அவருடைய அண்ணணும் அங்கு வேலை செய்து வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் சசி உறவினர் ஒருவர் திருமண நிகழ்ச்சி இருந்ததாலும், சென்று இரண்டு ஆண்டு கடந்ததாலும் சொந்த ஊருக்கு அடுத்த ஓரிரு நாட்களில் திரும்ப திட்டமிட்டு இருந்தார். இது தொடர்பாக மனைவி மற்றும் மக்களிடம் தகவல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், சசி தங்கியிருந்த இடத்தில் மாடிப்படியில் ஏறிய போது விழுந்து படுகாயம் அடைந்து உயிரிழந்ததாக அண்ணன் ஊருக்கு தகவல் தெரிவித்தார்.
இதைக்கேட்டு அவரது மனைவி,குழந்தைகள் மற்றும் குடும்பத்தார் கதறி அழுதனர். வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற சசி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சட்ட நடவடிக்கைகள் முடித்து சசியின் சடலத்தை விரைவாக ஊருக்கு கொண்டு வர மத்திய வெளியுறவுத்துறையும், மாநில அரசும் மற்றும் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Worker Death | Tamil Worker | Saudi Worker