BREAKING NEWS
latest

Friday, July 4, 2025

குவைத்தில் வாடகை டாக்ஸியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அழகான குழந்தையை பெற்றெடுத்தார்

குவைத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட பிறகு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் டாக்ஸியில் வைத்து ஒரு அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்தார்

Image : மருத்துவமனையில் பெண் அனுமதிக்கப்பட்ட காட்சி

குவைத்தில் வாடகை டாக்ஸியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அழகான குழந்தையை பெற்றெடுத்தார்

குவைத்தில் டாக்ஸியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று(04/07/25) வெள்ளிக்கிழமை குழந்தை பெற்றெடுத்தார். சால்மியா பிளாக் 10-இல் தனது குடும்பத்துடன் வசித்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் டாக்ஸியில் வைத்து ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குறிப்பிட்ட பெண்ணுக்கு இன்று காலையில் பிரசவ வலி ஏற்பட்ட பிறகு, அவரது கணவர், குவைத்தில் இயங்கி வருகின்ற "யாத்திரா டாக்ஸி" குழுவை சேர்ந்த மனோஜ் என்பவருடைய டாக்ஸியை அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறி அழைத்தார். இதை அறிந்த அவர் இளம்பெண்ணை சபா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டு இருந்தார். இருப்பினும், அவர்கள் வாகனத்தில் ஏறியவுடன், அவர்களுக்கு பிரசவ அறிகுறிகள் தெரிந்தன. இதைத் தொடர்ந்து, வாகனத்தின் ஓட்டுநர், கணவரின் உதவியுடன் வாகனத்தின் பின் இருக்கையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்.

தொடந்து ஐந்தாவது ரிங் ரோடு வழியாக மருத்துவமனைக்கு கடந்து செல்லும் போது, அந்த இளம் பெண் மன்னரின் பயான் அரண்மனை அருகில் வைத்து டாக்ஸியிலேயே பிரசவித்தார். பின்னர் உடனடியாக அந்த இளம் பெண்ணை மருத்துவமனைக்கு வந்தவுடன், மருத்துவமனை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு தாய் மற்றும் குழந்தையை மகப்பேறு வார்டுக்கு மாற்றி,மேலும் சிகிச்சை அளித்தனர். குழந்தை பெற்றெடுத்த இளம் பெண்ணுக்கு இது மூன்றாவது பிரசவம். தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Hospital | Tamil Worker | Kuwait Workers

Add your comments to குவைத்தில் வாடகை டாக்ஸியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அழகான குழந்தையை பெற்றெடுத்தார்

« PREV
NEXT »