BREAKING NEWS
latest

Indian Family - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Indian Family செய்திகள், கட்டுரைகள், Indian Family புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Tuesday, July 8, 2025

ஒமானில் தூசிக்காற்றில் சிக்கிய வாகன விபத்தில் 4 வயது இந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்

ஒமானின் ஹைமா என்ற இடத்திற்கு அருகே உள்ள ஆதாமில் தூசிக்காற்றில் சிக்கிய வாகன விபத்தில் 4 வயது இந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த குழந்தை ஜாசா ஹைரா

ஒமானில் தூசிக்காற்றில் சிக்கிய வாகன விபத்தில் 4 வயது இந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்:

ஒமானின் ஹைமா என்ற இடத்திற்கு அருகே உள்ள ஆதாமில் நடந்த சாலை விபத்தில் இந்திய சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். கேரளா மாநிலம் , கண்ணூர் மாவட்டம், மட்டனூரைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி ஜாசா ஹைரா என்பது தெரியவந்துள்ளது. அவரது தந்தை நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சலாலாவிலிருந்து திரும்பி வரும் வழியில் ஆதாமில் வைத்து விபத்துக்குள்ளானார்கள்.

இன்று(07/07/25) திங்கட்கிழமை அதிகாலை 1 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. பலத்த தூசிக்காற்று காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்தது. வாகனத்திலிருந்து தெறித்து வெளியே விழுந்த ஜாசா ஹைரா பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் பெரிய அளவில் இல்லை, அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நடைமுறைகள் முடிந்ததும் உடல் இன்று மாலையில் இந்தியா கொண்டு செல்லப்படும் என்று KMCC அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Baby Death | Oman Accident | Indian Family

Add your comments to Search results for Indian Family

Wednesday, December 7, 2022

குவைத்தில் இந்தியர் ஒருவர் மரணமடைந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

உயிரிழந்த வர்கீஸ் கடந்த 8 ஆண்டுகளாக குவைத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார்

Image : உயிரிழந்த வர்கீஸ்

குவைத்தில் இந்தியர் ஒருவர் மரணமடைந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

குவைத்தில் இந்தியர் ஒருவர் மரணமடைந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது. மரணமடைந்தவர் இந்தியா,கேரளா மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், எலந்தூரை அடுத்த வரியாபுரம் பகுதியை சேர்ந்த மேத்யூ வர்கீஸ்(வயது-48) ஆவார். அவர் குவைத்தின் சபா மருத்துவமனையில் வைத்து இறந்தார். இவருடைய அப்பா பெயர வர்கீஸ், அம்மா பெயர் சோசம்மா வர்கீஸ் என்பது ஆகும்.

இவருக்கு சிபி என்ற மனைவி, சரண் என்ற மகனும்,ஷெல்வி என்ற மகளும் உள்ளனர். உயிரிழந்த மேத்யூ குவைத்திலுள்ள அலி முடலாக் அல் முடேரி ஜெனரல் டிரேடிங் நிறுவனத்தில் வெல்டராக கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவருடைய உடலை சட்ட நடவடிக்கைகள் முடித்து தாயகம் அனுப்பும் பணிகளை பிரவாஸி வெல்ஃபேர் அமைப்பின்,பொதுச் சேவை பிரிவான டீம் வெல்ஃபேர் அப்பாசியா தலைமையில் நடைபெற்று வருகின்றன.

Family Man | Indian Death | Indian Worker

Add your comments to Search results for Indian Family

Tuesday, December 13, 2022

குவைத்தில் கடந்த 20 நாட்களில் 3000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான குடும்ப விசாக்கள் வழங்கப்பட்டுள்ளது:

குவைத்தில் குழந்தைகளுக்கான குடும்ப விசாக்கள் பெற விண்ணப்பம் பெறப்படுகிறது

Image : செய்தி பதிவுக்காக மட்டுமே

குவைத்தில் கடந்த 20 நாட்களில் 3000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான குடும்ப விசாக்கள் வழங்கப்பட்டுள்ளது:

குவைத்தில் கடந்த 20 நாட்களில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 3,000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான குடும்ப விசா வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. குடும்ப விசாக்கள் வழங்குவது நிறுத்தப்பட்டதன் காரணமாக இப்படிப்பட்ட குழந்தைகள் தங்கள் தாய்நாடுகளில் சிக்கிக்கொண்டனர். இப்படி குவைத்திற்கு வர முடியாமல் தவித்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்று அமைச்சக ஆதாரங்களை மேற்கோள் காட்டி குவைத் தினசரி செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் விசா வழங்குவது மீண்டும் துவங்கியது முதல் விசாவுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் பெரும்பாலும் அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இருந்தாலும் இந்தியா, இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளின் குடிமக்களும் இந்த விசா வழங்குவதற்கான முடிவைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் அமைச்சக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குடும்ப விசாக்கள் வழங்குவதை கடந்த நவம்பர்-20,2022 முதல் மீண்டும் தொடங்க அமைச்சகம் முடிவு செய்தது.

அதே நேரத்தில் மனைவி,5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இரத்த உறவுகளுக்கான குடும்ப மற்றும் விசிட் விசாக்கள் வழங்குவது மீண்டும் தொடங்கப்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பாக வரும் நாட்களில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kuwait Visa | Indian Worker | Family Visa

Add your comments to Search results for Indian Family