BREAKING NEWS
latest

Online Visa - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Online Visa செய்திகள், கட்டுரைகள், Online Visa புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Thursday, July 17, 2025

குவைத் அனைத்து வகையான விசிட் விசாக்களுக்கான ஆன்லைன் விசா தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

குவைத் உள்துறை அமைச்சகமானது அனைத்து வகையான விசிட் விசாக்களை எளிதாக பெற இன்று புதன்கிழமை ஆன்லைன் விசா தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

Image : குவைத் விமான நிலையம்

குவைத் அனைத்து வகையான விசிட் விசாக்களுக்கான ஆன்லைன் விசா தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

https://kuwaitvisa.moi.gov.kw என்பது குவைத் உள்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஆன்லைனில் விசா பெறுவதற்கான மின்னணு தளமாகும். இதன் வழியாக தனிநபர்கள் பல்வேறு வகையான மின்னனு விசாக்களுக்கு விண்ணப்பிக்கவும், அவைகளின் விண்ணப்ப நிலையைக் கண்காணிக்கவும், விசா தகவல்களைச் சரிபார்க்கவும் மற்றும் பிற குடியேற்றம் தொடர்பான சேவைகளை பெறுவதற்கு அணுகவும் அனுமதிக்கிறது. முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் அல்-யூசப்பின் உத்தரவுகளின் பேரில், உள்துறை அமைச்சகத்தின் செயல் துணைச் செயலாளர் மேஜர் ஜெனரல் அலி அல்-அத்வானியின் மேற்பார்வையின் கீழ், “குவைத் விசா தளம்" அறிமுகப்படுத்துவதாக உள்துறை அமைச்சகம் இன்று(16/07/25) புதன்கிழமை காலையில் அறிவித்தது.

குவைத்துக்கு வருகை தர விரும்பும் நபர்களுக்காக சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா, வணிக, குடும்ப மற்றும் அரசு துறை விசிட் விசாக்களை பெற இந்த தளமானது உள்துறை அமைச்சகத்தின் சட்ட விதிமுறைகள் மற்றும் பொது குடியிருப்பு விவகாரத்துறையால் வழங்கப்பட்ட தேவைகளுக்கு இணங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா, குடும்ப, வணிக மற்றும் அரசு துறை விசிட் விசாக்கள் பெற தகுதியான பயனாளிகள் யார் யார் என்ற விவரங்கள் மற்றும் ஒவ்வொரு விசாவுக்கும் நாட்டில் தங்கியிருக்க அனுமதிக்கும் காலம் பற்றிய தகவல்களையும் இந்த தளம் வழங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனைத்து வருகை விசாக்களும் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்பட்டவை என்றும், பார்வையாளர் மற்றும் ஸ்பான்சரிடமிருந்து அனைத்து துணை ஆவணங்களும் தேவை என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது, அது தனிநபர்கள், நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் என எதுவாக இருந்தாலும் பின்வரும் விதிமுறை கட்டாயமாகும். மேலும் உங்கள் பாஸ்போர்ட் விசா பெற விண்ணப்பிக்கும் முன் குறைந்தது 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும்(6 months Validity) விதத்தில் இருக்க வேண்டும் எனவும், அனைத்து நாட்டினரும் இந்த ஆன்லைன் விசாக்களுக்கு தகுதியானவர்கள் அல்ல எனவும், எனவே தயவுசெய்து முதலில் விசா கொள்கையைச் சரிபார்க்கவும்(விசா விதிமுறைகளை சரிபார்க்கவும்) வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் விசா வகை மற்றும் விசா பெற தேவையான ஆவணங்களைப் பொறுத்து செயலாக்க நேரங்கள் மாறுபடும். அனுமதிக்கப்பட்ட தங்கும் காலத்தை மீறுவது அல்லது விசா நோக்கத்தை துஷ்பிரயோகம் செய்வது உள்ளிட்ட விசா நிபந்தனைகளை மீறுவது கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கும் மற்றும் அபராதங்களுக்கும் வழிவகுக்கும் என்று அமைச்சகம் எச்சரித்துள்ளது .

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | Visit Visa | Online Visa

Add your comments to Search results for Online Visa

Friday, February 12, 2021

துபாயில் சிக்கியுள்ள சவுதி மற்றும் குவைத் நுழைய காத்திருந்த நபர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது

துபாயில் சிக்கியுள்ள சவுதி மற்றும் குவைத் நுழைய காத்திருந்த நபர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது;சிக்கியுள்ள நபர்களுக்கு ஆறுதலான செய்தியும் கூட

Image: துபாய் ஆட்சியாளர்

துபாயில் சிக்கியுள்ள சவுதி மற்றும் குவைத் நுழைய காத்திருந்த நபர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது

துபாயிலிருந்து இருந்து வழங்கப்பட்டுள்ளன Visiting விசாக்கள் நிபந்தனையின்றி மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், Online Visa Validity பரிசோதனை செய்யும் தளத்தில் தங்கள் விசா தொடர்பான தகவல்களை பரிசோதனை செய்த பலருக்கும் விசா நீட்டிப்பு ஆகியுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த மாத இறுதியில் விசா நீட்டிப்பு செய்து வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி இருந்த நிலையில் இந்த புதிய செய்தி வெளியாகியுள்ளது.இதன் காரணமாக மார்ச்- 31 வரை இப்படிப்பட்ட விசாக்கள் செல்லுபடியாகும். இதை அங்குள்ள சவுதி மற்றும் குவைத்தில் நுழையும் நபர்கள் பரிசோதனை செய்து பாருங்கள்.

டிசம்பர் மாதம் லண்டனில் கண்டறியப்பட்ட மரபணு மாற்ற கொரோனாவின் இரண்டாவது பரவல், உலகம் முழுவதும் உள்ள பயணிகளுக்கு தடைகள் ஏற்பட்ட நிலையில் துபாய் இந்த சலுகையினை வழங்கியது. இதையடுத்து கடந்த டிசம்பர் மாதத்திலும் விசாக்கள் இப்படி நீட்டிப்பு செய்து வழங்கப்பட்டது. இந்நிலையில் சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளில் நுழைய, துபாய் வந்து பயணம் மேற்கொள்ள முடியாமல் சிக்கித் தவிப்பவர்களுக்கு இது ஆறுதலான செய்தியாக அமைந்துள்ளது. மனிதாபிமான அடிப்படை அடிப்டையில் எந்தவிதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்காமல் ஆட்சியாளர்கள் எடுத்துள்ள இந்த முடிவு பாராட்டுக்குரியது ஆகும்.

இதற்கிடையே விசா காலாவதி ஆனதன் காரணமாக கடந்த நாட்களில் இந்தியர்கள் பலர் தாயகம் திரும்பிய நிலையிலும் மற்றும் பலர் விசா காலாவதி ஆவதற்காக சில நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தனர், இதற்கிடையே விசா நீட்டிப்பு தொடர்பான இந்த செய்தி வெளியாகியுள்ள நிலையில், பிப்ரவரி-21 முதல் குவைத் அரசு விமான நிலையம் திறக்குமானால், துபாயில் உள்ள இந்தியர்கள் உள்ளிட்ட பலரும் நாட்டில் நுழைய முடியும் என்பது ஆறுதலான மற்றும் மகிழ்ச்சியான செய்தியும் கூட.....

Add your comments to Search results for Online Visa

Thursday, November 5, 2020

சவுதியில் 2021 மார்ச் முதல் தொழிலாளர்களுக்கு சாதகமாக சட்டத்தில் அதிரடி மாற்றங்கள்:

சவுதியில் 2021 மார்ச் முதல் தொழிலாளர்களுக்கு சாதகமாக சட்டத்தில் அதிரடி மாற்றங்கள்:



நவம்பர்-5,2020

சவுதி அரேபியா நாட்டின்  தொழிலாளர் சட்டம் என்பது எண்ணெய் வளங்கள் கண்டறியப்பட்டது முதல் நடைமுறையில் உள்ள மிகவும் பழமையான வேலைக்கு அழைத்து வரப்படும் தொழிலாளர்கள் மீதான அதிகபட்சமாக அதிகாரம் உடையதாக இருந்து வருகிறது.

ஒரு தொழிலாளர் எந்தவொரு முடிவு எடுத்தாலும் அதன் இறுதி முடிவு என்பது முதலாளியுடையதாக(Sponsor) இருக்கும். இதை முற்றிலுமாக உடைந்து எறியும் விதத்தில் 

சவுதி தொழில் துறை அமைச்சகம் புதன்கிழமை(நவம்பர்-4)  இன்று வெளியிட்டுள்ள சீர்திருத்தம் 2021 மார்ச் முதல் நடைமுறையில் வருகிறது. இந்த மாதம் இறுதியில் சவுதியில் ஜி-20 மாநாடு நடக்க இருக்கும் நிலையில். உலக நாடுகள் உற்று நோக்கம் இந்த நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சவுதியில் கஃபாலா/ஸ்பான்ஸர்ஷிப் சிஸ்டம்  மார்ச்-14, 2021 முதல் நீக்கம் எனவும் இவை மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் தொழிலாளர் சீர்திருத்த முயற்சியின் கீழ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, 

அனைத்து தொழிலாளர்களுக்கும் குறிப்பிடப்பட்ட காலம் டிஜிடல் கான்ட்ராக்ட் [ஒப்பந்தம்/Agreement] போடப்படும்( Online யில் ஒப்பந்தம் பதவியேற்றம் செய்யபடும்)

சம்பளம் வங்கிக் கணக்கில் (Online மூலமாக) செலுத்தப்படல் வேண்டும்.

ஒப்பந்தம் முடிந்தவுடன் நிறுவனத்தின் அனுமதியின்றி வேறு நிறுவனத்துடன் புதிய  ஒப்பந்தம் போட்டு வேலைக்கு சேர முடியும்.

ஒப்பந்தம் முடிந்தவுடன் நிறுவனத்தின் அனுமதியின்றி [எக்ஸிட்/Final Exit] மூலம் தாயகம் செல்லலாம்.

எக்ஸிட் ரீ என்ட்ரி(ERE Visa) மூலம் நிறுவனத்தின் அனுமதியின்றி விண்ணப்பித்து தாயகம் செல்லலாம்.

ஒப்பந்தத்தை மீறும் தொழிலாளர் மற்றும் மீறும் நிறுவனம் ஒப்பந்தந்தின் அடிப்படையில் அதற்கான இழப்பீட்டை செலுத்த வேண்டும்.

இவை அனைத்தும் "ABSHER & QIWA" Online மூலம் எளிதாக செயல்படுத்தவும் முடிவு.

இந்த புதிய திருத்தம் காரணமாக தொழிலாளர்களுக்கு ஏற்படும் நன்மை மற்றும் குறைபாடுகள் குறித்த கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் தெரியவரும்.

மேலும் கடந்த பல வருடங்களாக சவுதியில் தொழிலாளர் சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் வருகிறது என்று பல முறை செய்திகள் வெளியாகியுள்ள நிலையத்திலும் தற்போது தான் அது நிஜமாகி உள்ளது.




Add your comments to Search results for Online Visa

Wednesday, December 7, 2022

குவைத் எகிப்து நாட்டினருக்கான வேலை விசாவை நிறுத்தி வைத்துள்ளது:

எகிப்தில் இருந்து குவைத்திற்கு வருகின்ற தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் தொடர்பாக எகிப்து அரசு எடுத்துள்ள நடவடிக்கையின் எதிரொலி

Image: Kuwait Airport

குவைத் எகிப்து நாட்டினருக்கான வேலை விசாவை நிறுத்தி வைத்துள்ளது:

குவைத் எகிப்து தொழிலாளர்களுக்கான வேலை விசாவை நிறுத்தி வைத்துள்ளது. உள்துறை அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி உள்ளூர் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சர் ஷேக் தலால் அல் காலித் அல் சபாவின் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பரில் இருந்து அமல்படுத்தப்பட்ட இந்த உத்தரவு தொடரும் என்றும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக புதிய முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் எகிப்தில் இருந்து வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை எகிப்திய தூதரகம் நிர்ணயித்துள்ளது. இந்த நிபந்தனைகள் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, எகிப்தியர்களுக்கான பணி அனுமதி வழங்குவதை நிறுத்துமாறு முதல் துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல் காலித் அவர்கள் உத்தரவிட்டதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. எகிப்து தூதரகம் விதித்துள்ள நிபந்தனைகள் குவைத் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் நிர்வாக விதிமுறைகளுக்கு முரணானது எனவும் தெரிகிறது.

இதன் காரணமாகவே குவைத் கடுமையான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிகிறது. அதேபோல் எகிப்தில் இருந்து குடும்ப விசாவில் குவைத் வருபவர்களுக்கான ஸ்டாம்பிங் கட்டணத்தை எகிப்தில் உள்ள குவைத் தூதரகம் கடந்த தினத்தில் ஒரேயடியாக மூன்று மடங்கு உயர்த்தியது. இதேபோல் இரு நாடுகளிலும் Online வழியான பணியாளர்கள் தேர்வு அமைப்பு நடைமுறை ரத்து செய்யப்பட்டன. குவைத்தில் இந்தியர்களுக்கு அடுத்தபடியாக எகிப்தியர்கள் இரண்டாவது பெரிய வெளிநாட்டு சமூகமாக நாட்டில் வேலை செய்து வருகின்றனர்.

Kuwait Banned | News Visa | Kuwait Visa

Add your comments to Search results for Online Visa

Sunday, March 14, 2021

சவுதியில் இன்று முதல் புதிய தொழிலாளர் சட்டம் நடைமுறையில் வந்துள்ளது

சவுதியில் இன்று முதல் நடைமுறையில் வந்துள்ள புதிய சட்டம்;ஸ்பென்சரின் அனுமதி இல்லாமல் விசா மாற்றுவதற்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டிய 12 விதிமுறைகள்:

Image: சவுதி தொழிலாளர் அமைச்சக அலுவலகம்

சவுதியில் இன்று முதல் புதிய தொழிலாளர் சட்டம் நடைமுறையில் வந்துள்ளது

சவுதி அரேபியாவில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருத்தம் செய்து அறிவிக்கப்பட்ட புதிய தொழிலாளர் சட்டம் இன்று(14/03/21) முதல் நடைமுறையில் வந்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தாங்கள் சொந்தமாக நுழைவு(Entry),வெளியேறவும்(Exit) உள்ளிடவை பெறுவதற்கும் Online மூலம் விண்ணப்பிக்கவும் மற்றும் ஸ்பான்சரின் அனுமதியின்றி தங்கள் ஸ்பான்சர்ஷிப்பை(வேலை விசா) மாற்றவும் அனுமதிக்கப்படுவார்கள். ஸ்பான்சரின் அனுமதியின்றி தொழிலாளி ஸ்பான்சர்ஷிப் மாறுவதற்கான முயற்சி செய்வதற்கு முன்பாக அறிந்திருக்க வேண்டிய 12 முக்கியம விஷயங்கள் பின்வருமாறு:

  1.  தொழிலாளியின் இகாமா(Visa Category) தொழிலாளர் சட்டத்தின் படி ஒரு தொழில்முறை( Professional job) இகாமாவாக இருக்க வேண்டும் (வீட்டுப் பணியாளர் போன்ற தொழில்களுக்கு முடியாது).
  2. சவுதி அரேபியாவில் நுழைந்த பின்னர் 12 மாதங்கள் ஒரு முதலாளியின் கீழ் கண்டிப்பாக வேலை செய்திருக்க வேண்டும்.
  3.  தொழிலாளி தற்போது பணியில் இருக்க வேண்டும்.  (ஹுரூப்  போன்றவர்களுக்கு முடியாது )
  4. ஸ்பான்சர்ஷிப் மாற்றுவதற்கான ஏற்கனவே விண்ணப்பமும் செய்த எதுவும் தற்போது நடைமுறையில்(Processing) இருக்க கூடாது.
  5. எழுதப்பட்ட வேலைவாய்ப்பு ஒப்பந்தம் இன்னும் நடைமுறையில் இருந்தால், அது முன்கூட்டியே சம்பந்தப்பட்ட  முதலாளியிடம் தெரியப்படுத்த வேண்டும்.
  6. வேலைவாய்ப்பு ஒப்பந்தம் இல்லாமல் இருந்தாலோ, தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை என்றாலோ, சவுதி அரேபியாவில் நுழைந்த 90 நாட்களுக்கு பணி அனுமதி பத்திரம்(Work Permit) வழங்கவில்லை என்றாலோ மற்றும் உங்களின் ஏற்கவே உள்ள பணி அனுமதி(இகாமா) காலாவதியாகிவிட்டால் மேற்கண்ட 5-ஆம் நம்பர் நிபந்தனைகள் இல்லாமல் கஃபாலாவை(விசா) மாற்ற முடியும்.
  7.  சவுதி சமூக நல அமைச்சகத்தின் விவா போர்ட்டலில் தொழிலாளி மற்றும் முதலாளிக்கு  ஒரு கணக்கு வைத்திருக்க வேண்டும். இதில் வேலை வாய்ப்பு ஒப்பந்தம் பதிவேற்றி இருக்க வழங்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் தொழிலாளியை ஏற்ககொள்ள வேண்டிய நிபந்தனைகள் இதில் இருந்து வேலை மாற்றம் பெறுகின்ற தொழிலாளி அறிந்து கொள்ள முடியும்
  8. பணி அனுமதி செல்லுபடியாகும் விதத்தில் இருக்க வேண்டும், ஊதியம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அனசு நிபந்தனைகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் கடந்த மூன்று மாதங்களாக குறைந்தது 80 சதவீதமாவது நிறேவேற்றி இருக்க வேண்டும். 
  9.  நிறுவனத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தொழிலாளர் சட்டத்திற்கு உட்பட்டு வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ வேலைவாய்ப்பு ஒப்பந்தம் இருக்க வேண்டும்.
  10.  சுய மதிப்பீட்டு திட்டத்தில் குறைந்தது 80% அர்ப்பணிப்புடன் நிறுவனம் இருக்க வேண்டும்.  உள்பணி ஒழுங்குமுறைக்கு ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். ஸ்பான்சர்ஷிப்பின் மாற்றம் பின்வருமாறு நடைமுறைக்கு ஏற்ப இருக்கும்
  11. புதிய ஸ்பான்சர் விவா போர்ட்டல் மூலம் தொழிலாளிக்கு வேலையை வழங்கியிருக்க வேண்டும்.  கிவா தளத்தில் வரும் வேலை வாய்ப்பை ஏற்கவோ நிராகரிக்கவோ தொழிலாளிக்கு அந்த தளத்தில் Option இருக்கும்.
  12. வேலை வாய்ப்பு மாற்றம் குறித்து தற்போதைய நிறுவனத்திற்கு அறிவிக்கப்படும், பின்னர் அறிவிப்பு காலத்தின்(Notes period) கணக்கீடு தொடங்கும்.(மேலும் இந்த காலகட்டத்தில் ஒப்பந்தம் முடிக்கப்படாவிட்டால், பழைய ஸ்பான்சருக்கு  இழப்பீடு செலுத்த வேண்டும்)


Add your comments to Search results for Online Visa