குவைத்தில் நடைமுறையில் உள்ள 4 வகையான விசிட் விசாக்கள் யாருக்கெல்லாம் கிடைக்கும் மற்றும் எவ்வளவு நாள் தங்கலாம் என்பது உள்ளிட்ட விரிவான விபரங்களை இங்கு பார்க்கலாம்
Image : குவைத் சிட்டி
குவைத் விசிட் விசா பெறுவது எப்படி முழு தகவல்
குவைத்தில் சுற்றுலா, வணிக, குடும்ப மற்றும் அரசு துறை விசிட் விசாக்கள் தற்போது புதிதாக அறிமுகம் செய்யபட்ட "குவைத் விசா தளத்தில்" ஆன்லைன் வழியாக கிடைக்கும். மேலும் “குவைத் ஆன்லைன் விசா தளத்தை" உள்துறை அமைச்சகம் நேற்று(16/07/25) புதன்கிழமை காலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்தது. இதன் மூலம் அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் இனிமுதல் ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
உங்கள் புரிதலுக்கா குடும்ப விசா எடுக்க ஆண்களுக்கு 800 தினார் சம்பளமும், குடும்ப விசிட் விசா எடுக்க 400 தினார் சம்பளமும் தேவையாகும். அதேபோல் குவைத்தை பொறுத்தவரை மனைவி அல்லது தனியாக தங்கி வேலை செய்கின்ற பெண்களுக்கு எவ்வளவு சம்பளம் இருந்தாலும் விசிட் மற்றும் குடும்ப விசா எடுக்க முடியாது. கணவர் மரணம் உள்ளிட்ட சில இக்கட்டான சூழ்நிலையில் உள்ள பெண்களுக்கு விசா வழங்கல் துறையின் உயர் அதிகாரியின் ஒப்புதல் அடிப்படையில் மிகவும் அரிதாக சில குடும்பங்களுக்கு விசா வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.அதேபோல் வளைகுடா நாடுகளில் தங்கி வேலை செய்கின்ற விசா கைவசம் உள்ள சில குறிப்பிட்ட துறையில்(Profession) வேலை செய்கின்ற நபர்களுக்கும் குவைத்துக்கு வருவதற்கு விசிட் விசா எடுக்க முடியும்
மேலும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக நாட்டிற்குச் வருவதற்கு விரும்பும் நபர்களுக்கு சுற்றுலா விசாக்கள் வழங்கப்படுகின்றன. சுற்றுலா விசாக்கள் 90 நாட்கள் செல்லுபடியாகும். நாட்டிற்குளே வணிக நோக்கங்களாக கொண்டு கூட்டங்கள் மற்றும் மாநாடுகளில் கலந்து கொள்ள அல்லது உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து வியாபரங்களை ஏற்படுத்தி கொள்ள விரும்பும் நபர்களுக்கு வணிக விசாக்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல் வணிகர்கள், நிறுவன பிரதிநிதிகள் அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் பெரிய நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 30 நாட்களுக்கு வணிக விசாக்கள் வழங்கப்படுகின்றன.
இதேபோல் 30 நாட்களுக்கு வழங்கப்படும் அரசாங்க விசிட் விசாக்கள், அரசாங்க நோக்கங்களுக்காகவும் பிற நோக்கங்களுக்காகவும் கூட்டங்களில் கலந்து கொள்ள அதிகாரப்பூர்வமாக அரசின் அழைப்பின் பேரில் குவைத்துக்கு வருகின்ற நபர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆன்லைன் வழியாக இந்த விசிட் விசாக்களை பெற விண்ணப்பிக்க வேண்டிய அதிகாரப்பூர்வமான இணையதள முகவரி First Comment யில் இணைக்கப்பட்டுள்ளது .
(குறிப்பு: அனைத்து நாட்டினரும் இந்த ஆன்லைன் விசாக்களுக்கு தகுதியானவர்கள் அல்ல எனவும், எனவே தயவு செய்து முதலில் விசா கொள்கையை(நிபந்தனைகளை) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கவும் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Worker Visa | Indian Workers | Visit Visa