BREAKING NEWS
latest

Oman Police - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Oman Police செய்திகள், கட்டுரைகள், Oman Police புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Saturday, July 3, 2021

ஓமானில் கோவிட் பரவுவது தொடர்ந்து தீவிரமாக இருப்பதால், அனைவரும் சரியான விழிப்புணர்வை உறுதிப்படுத்த வேண்டும்.

ஓமானில் உள்ள வெளிநாட்டவர்களின் கவனத்திற்கு,கோவிட் பரவுவது நாட்டில் தொடர்ந்து தீவிரமாக இருப்பதால் மக்கள் பாதுகாப்பான இருக்க வேண்டிய நேரம் இதுவாகும்

Image Credit: Oman Police

ஓமானில் கோவிட் பரவுவது தொடர்ந்து தீவிரமாக இருப்பதால், அனைவரும் சரியான விழிப்புணர்வை உறுதிப்படுத்த வேண்டும்.

  1. ஓமானில் கோவிட் பரவுவது தொடர்ந்து தீவிரமாக இருப்பதால், அனைவரும் சரியான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 
  2.  பொது இடங்கள், வேலை செய்யும் இடங்கள் மற்றும் தங்கும் பகுதிகளில் முககவசம்  முறையாக அணிந்து சமூக இடைவெளியை உறுதி செய்யுங்கள். 
  3. உங்கள் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். 
  4. முடிந்தால் பாதுகாப்பு கையுறைகள் அணிய வேண்டும்.
  5. கோவிட் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஓமான் உச்ச குழு, சுகாதார அமைச்சகம் மற்றும் நகராட்சிகள் அறிவித்த வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுங்கள். 
  6. எந்த காரணத்திற்காகவும் பகுதிநேர ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம். ராயல் ஓமான் காவல்துறையின் தலைமையில் அனைத்து Governorates-லும் கடுமையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  7. எந்த வகையிலும் விதிமுறைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு பெரும் தொகை அபராதம் விதிக்கப்படும், சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிகிறது எனவே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.


Add your comments to Search results for Oman Police

Saturday, June 19, 2021

ஓமானில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் பகுதிநேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது

ஓமானில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் பகுதிநேர ஊரடங்கு விதித்து ஓமான் உச்சக் குழு சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளது

Image : Oman Police

ஓமானில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் பகுதிநேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது

ஓமானில் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இரவுநேர பயண தடை(பகுதிநேர ஊரடங்கு) விதித்து இன்று(19/06/21)சற்றுமுன் புதிய உத்தரவு வெளியாகியுள்ளது. நாளை ஜூன்-20(ஞாயிற்றுக்கிழமை) முதல் புதிய உத்தரவு நடைமுறைக்கு வருகிறது. இந்த தடை உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று "ஓமான் உச்சக் குழு " தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உச்சக் குழு வெளியிட்டுள்ள செய்தியில், ஓமானில் தொடர்ந்து உயரும் கோவிட் பரவலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும், புதிய உத்தரவு நாளை தொடங்கி மற்றோரு அறிவிப்பு வெளியாகும் வரையில் ஊரடங்கு உத்தரவு இரவு 8:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரையில் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஊரடங்கு நேரத்தில் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் ஓமான் உச்ச குழு அறிவுத்தல் செய்துள்ளது.

இந்த நேரத்தில் வர்த்தக தடையும் நடைமுறையில் இருக்கும், எனவே உணவுகள் Home Delivery மட்டுமே செய்யப்படும். மேலும் முந்தைய இரவு நேர ஊரடங்கு உத்தரவுகளில் சலுகைகள் வழங்கப்பட்ட பிரிவினருக்கு அதே சலுகைகள் இந்த ஊரடங்கு காலத்திலும் வழங்கபடும்.

Add your comments to Search results for Oman Police

Sunday, March 28, 2021

ஓமானின் பல்வேறு பகுதிகளில் வலுவான மூடுபனி ஏற்படும் என்று வானிலை மையம் இன்று சற்றுமுன் எச்சரிக்கை விடுத்துள்ளது

ஓமானின் பல்வேறு பகுதிகளில் பலத்த மூடுபனி உருவாகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது;எனவே வாகன ஓட்டிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

Image credit: Oman Police

ஓமானின் பல்வேறு பகுதிகளில் வலுவான மூடுபனி ஏற்படும் என்று வானிலை மையம் இன்று சற்றுமுன் எச்சரிக்கை விடுத்துள்ளது

ஓமானின் பல்வேறு பகுதிகளில் வலுவான மூடுபனி ஏற்படும் என்று வானிலை மையம் இன்று சற்றுமுன் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக அல் ஷர்கியா, அல் வுஸ்டா மற்றும் அல் புராய்மி கவர்னேட் மற்றும் கடலோரப் பகுதிகளில் வலுவான மூடுபனி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூடுபனிஇரவில் தீவிரமடையும் எனவும், எனவே வாகன ஓட்டிகள் சரியான முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் வானிலை மையம் அறிவுத்தல் செய்துள்ளது.

Add your comments to Search results for Oman Police

Wednesday, July 2, 2025

ஒமானில் பேருந்து விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்

ஒமானில் பேருந்து விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

Image credit:ONA

ஒமானில் பேருந்து விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்

ஒமானின் அல் தகிலியா கவர்னரேட்டில் இன்று(02/07/25) புதன்கிழமை காலையில் நடந்த பயங்கரமான பேருந்து விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். பேருந்தில் 18 பயணிகள் இருந்தனர். இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

பேருந்தில் இருந்த மேலும் 14 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தற்போது ஒமானின் நிஸ்வா மற்றும் இஸ்கி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இஸ்கியின் அல் ருசைஸ் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்து ஒரு சாலையின் ஓரத்தில் உள்ள திட்டில் மோதியதாக ராயல் ஒமான் காவல்துறை வெளியிட்டுள்ள முதல்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த துயரமான விபத்தில் பேருந்து முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்கள் எந்த நாட்டவர்கள் என்ற கூடுதல் விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த விபத்து தொடர்பாக விசாரணை துவங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Oman Police | Road Accident | Bus Accident

Add your comments to Search results for Oman Police