ஒமானில் பேருந்து விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
Image credit:ONA
ஒமானில் பேருந்து விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்
ஒமானின் அல் தகிலியா கவர்னரேட்டில் இன்று(02/07/25) புதன்கிழமை காலையில் நடந்த பயங்கரமான பேருந்து விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். பேருந்தில் 18 பயணிகள் இருந்தனர். இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
பேருந்தில் இருந்த மேலும் 14 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தற்போது ஒமானின் நிஸ்வா மற்றும் இஸ்கி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இஸ்கியின் அல் ருசைஸ் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்து ஒரு சாலையின் ஓரத்தில் உள்ள திட்டில் மோதியதாக ராயல் ஒமான் காவல்துறை வெளியிட்டுள்ள முதல்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த துயரமான விபத்தில் பேருந்து முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்கள் எந்த நாட்டவர்கள் என்ற கூடுதல் விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த விபத்து தொடர்பாக விசாரணை துவங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Oman Police | Road Accident | Bus Accident