BREAKING NEWS
latest

Indian Airport - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Indian Airport செய்திகள், கட்டுரைகள், Indian Airport புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Saturday, October 28, 2023

வளைகுடா பயணிகள் கவனத்துக்கு ஊறுகாய், நெய் உள்ளிட்ட 13 வகையான பொருட்கள் செக்-இன் பைகளில் கொண்டு செல்ல தடை

இது இந்தியாவின் அனைத்து விமான நிலையத்திற்கும் பொருந்தும், எனவே இத்தகைய காரணங்களால் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் எந்த பலனும் இல்லை என்பதை கவனத்தில் கொள்க

Image : Indian Airport

வளைகுடா பயணிகள் கவனத்துக்கு ஊறுகாய், நெய் உள்ளிட்ட 13 வகையான பொருட்கள் செக்-இன் பைகளில் கொண்டு செல்ல தடை

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமானத்தில் பயணம் செய்யும்போது கொண்டு வரக்கூடாத பொருட்களின் பட்டியலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். வணிகம், சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக ஏராளமான இந்தியர்கள் வளைகுடாவிற்குச் செல்வதால், இந்தியா-யுஏஇ விமானப் பாதை மிகவும் பரபரப்பான வழித்தடங்களில் ஒன்றாகும், மேலும் பண்டிகைக் காலம் நெருங்கும்போது பார்வையாளர்களின் வருகை கணிசமாக அதிகரிக்கும். மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் எடுத்துச் செல்வதால்,செக்-இன்(Check-In) பேக்கேஜ் நிராகரிப்பு அதிகரித்துள்ளது.

பயணிகள் எடுத்து செல்கின்ற சாமான்களில் கொப்பரை மற்றும் பட்டாசுகள் வரை:

செக்-இன் சாமான்களில் அடிக்கடி காணப்படும் சில தடைசெய்யப்பட்ட பொருட்கள் உலர்ந்த தேங்காய்(கொப்பரை), பட்டாசுகள், தீப்பெட்டிகள், பெயிண்ட், கற்பூரம், நெய், ஊறுகாய், எண்ணெய் உணவுகள், இ-சிகரெட்டுகள், லைட்டர்கள், பவர் பேங்க்கள் மற்றும் ஸ்ப்ரே பாட்டில்கள் போன்ற பொருட்களில் சில. பல பயணிகள் இதைப்பற்றி தெரியாமல் இந்த அனைத்து பொருட்களையும் கொண்டு வருகிறார்கள். இது ஆபத்தை உருவாக்குகிறது. இந்த பொருட்கள் வெடிக்கும் திறன் காரணமாக விபத்துகளின் தீவிரத்தை அதிகரிக்கின்றன.

எரியக்கூடிய பொருட்கள்:

கடந்த ஆண்டு, ஒரே மாதத்தில் பயணிகளின் செக்-இன் பைகளில் 943 காய்ந்த தேங்காய்கள் கண்டுபிடிக்கப்பட்டன. காய்ந்த தேங்காயில் அதிக அளவு எண்ணெய் இருப்பதால், அது தீயை உண்டாக்கும். இந்தியாவின் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி பணியகம் (BCAS) மார்ச் 2022 இல் இதை தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் சேர்த்தது. இதுபற்றி பெரும்பாலான பயணிகளுக்கு இன்னும் தெரியவில்லை.

பயணிகளின் கவனம்:

செக்-இன் சாமான்களை நிராகரிக்கும் போக்கு அதிகரித்து வருவது, விமானத்தில் எடுத்துச் செல்லப்படும் தடைசெய்யப்பட்ட அல்லது ஆபத்தான பொருட்களைப் பற்றி பொதுவான பயணிகளிடையே விழிப்புணர்வு இல்லாததைக் குறிக்கிறது. ஆபத்தான மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் தொடர்பாக விமான நிலையம் அல்லது விமான நிறுவனங்கள் வழங்கும் வழிகாட்டுதல்களை தெரிந்துகொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் முன்னுரிமை அளிக்குமாறு அதிகாரிகள் பயணிகளை கேட்டுக்கொள்கிறார்கள்.

செக்-இன் பேக்கேஜ் ஸ்கிரீனிங் செயல்முறை:

திரையிடப்பட்ட மொத்த பைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது நிராகரிக்கப்பட்ட செக்-இன் பைகளின் விகிதம் டிசம்பர் 2022 இல் 0.31 சதவீதத்திலிருந்து மே மாதத்தில் 0.73 சதவீதமாக அதிகரித்துள்ளது. மும்பை விமான நிலையத்தில் உள்ள பேக்கேஜ் அமைப்பு, டெர்மினல் இரண்டில் ஒரு மணி நேரத்திற்கு 9,600 பைகளையும், டெர்மினல் ஒன்றில் மணிக்கு 4,800 பைகளையும் கையாளும் 8 கிமீ பேக்கேஜ் பெல்ட்டைக் கொண்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட பொருட்களில் சில:

  1. காய்ந்த தேங்காய்(கொப்பரை) 
  2. பெயிண்ட் 
  3. பட்டாசுகள்
  4. தீப்பெட்டிகள்
  5. பெயிண்ட்
  6. கற்பூரம் 
  7. நெய் 
  8. ஊறுகாய் 
  9. எண்ணெய் உணவு பொருட்கள் 
  10. மின் சிகரெட்டுகள் 
  11. லைட்டர்கள் 
  12. பவர் பேங்க்கள் 
  13. ஸ்ப்ரே பாட்டில்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Indian Airport | Uae Travel | Banned Items

Add your comments to Search results for Indian Airport

Saturday, July 19, 2025

குவைத்தில் இந்திய விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பயணச்சீட்டு கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

குவைத்தில் இருந்து இயங்கும் இந்திய விமானங்களின் வாராந்திர இருக்கைகளின் எண்ணிக்கை 12,000-லிருந்து 18,000-ஆக அதிகரிப்பதால் பயணச்சீட்டு கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Image : பதிவுக்காக பதிவிறக்கம் செய்யப்பட்டது

குவைத்தில் இந்திய விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பயணச்சீட்டு கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்தியாவிற்கும்-குவைத்திற்கும் இடையே கடந்த வாரம் கையெழுத்தான புதிய விமான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்தியாவை தலைமையிடமாக கொண்ட பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்கள் அதன் வாய்ப்புகளை திறம்பட பயன்படுத்த முயற்சிகளைத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக விமான நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டு நெட்வொர்க்குகளை மறுசீரமைத்து வருவதாகக் கூறப்படுகிறது. புதிய விமான ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான வாரந்திர இருக்கைகளின் எண்ணிக்கை 6,000 அதிகரித்துள்ளது.

தற்போது இண்டிகோ, ஏர் இந்தியா, ஆகாஷ் ஏர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய இந்திய விமான நிறுவனங்கள் ஆகஸ்ட் 2025 முதல் குவைத்துக்கு புதியதாக கூடுதல் விமானங்களின் சேவை தொடங்கவும், ஏற்கனவே உள்ள சேவைகளை விரிவுபடுத்தவும் திட்டங்களைத் தயாரித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு விமான நிறுவனமும் தேவையான இடங்களை(ஸ்லாட்) பெற குவைத் சர்வதேச விமான நிலையத்துடன் தீவிரமான பேச்சு வார்த்தைகள் மூலம் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இண்டிகோ ஏர்லைன்ஸ் குவைத்துக்கு வாரத்திற்கு கூடுதலாக 5,000 இருக்கைகளை இலக்காகக் கொண்டுள்ளது. இதற்கிடையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஆகாஷ் ஏர் சுமார் 3,000 இருக்கைகளைக் கோரியுள்ளதாகவும், ஏர் இந்தியா 1,500 இருக்கைகளைக் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னை, திருவனந்தபுரம், கொச்சி மற்றும் பெங்களூர் போன்ற பயணிகள் அதிகமாக பயணம் செய்கின்ற நகரங்களிலிருந்து புதிய விமானங்கள் தொடங்கப்பட வாய்ப்புள்ளது.

ஜூலை 21 ஆம் தேதிக்குள் திறன் விரிவாக்கத்திற்கான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு குவைத் மற்றும் இந்திய விமான நிறுவனங்களை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(DGCA) கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவிற்கும் குவைத்துக்கும் இடையே ஜூலை 16-ஆம் தேதி புதிய விமான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் கீழ், வாராந்திர இருக்கைகளின் ஒதுக்கீடு 12,000-லிருந்து 18,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் இரு நாடுகளும் இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் தமிழர்கள் அதிகமாக பயணம் செய்கின்ற தமிழக-கேரளா எல்லையான திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளின் பயணச்சீட்டு கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கேரளாவின் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்களும் பயணம் செய்வதால் இந்தியாவின் எந்த விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணச்சீட்டு கட்டணத்தை விட திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வழியாக பயணிக்க பயணச்சீட்டு கட்டணம் எப்போதும் ஒருபடி அதிகமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Airport | Indian Airport | Flight Tickets

Add your comments to Search results for Indian Airport

Thursday, February 25, 2021

பி.சி.ஆர் எதிர்மறை முடிவு இல்லாமல் எங்கள் வீட்டு வாசலில் ஓட்டு கேட்க வர வேண்டாம்;பதிலடி கொடுக்கும் வெளிநாட்டினர்

பி.சி.ஆர் எதிர்மறை முடிவு இல்லாமல் எங்கள் வீட்டு வாசலில் ஓட்டு கேட்க வர வேண்டாம்; கடும் கோபத்தின் வெளிப்படையாக பதிலடி கொடுக்கும் வெளிநாட்டினர்

Image : Indian Airport

பி.சி.ஆர் எதிர்மறை முடிவு இல்லாமல் எங்கள் வீட்டு வாசலில் ஓட்டு கேட்க வர வேண்டாம்;பதிலடி கொடுக்கும் வெளிநாட்டினர்

வளைகுடாவில் இருந்து வேலை இழந்து நிர்க்கதியாக தாயகம் திரும்புகின்ற இந்தியர்கள் தாங்கள் வேலை செய்யும் வளைகுடாவில் இருந்து எடுக்கப்பட்ட பி.சி.ஆர் எதிர்மறை பரிசோதனை சான்றிதழுடன் நாட்டிற்கு சென்றால் அங்கும் மீண்டும் பி.சி.ஆர் சோதனை மற்றும் மூலக்கூறு சோதனை செய்ய வேண்டும் என்று கடந்த 23/02/21 புதிய உத்தரவு வெளியாகி இதற்காக பெரும்தொகை வசூலிக்கும் நிலையில் இந்தியர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதற்கு எதிராக குரல் கொடுக்க தயங்கும் அரசியல்வாதிகளுக்கு கேரளா மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வரவிருக்கும் தேர்தலில் வாக்குகள் கேட்க தங்கள் வீடுகளுக்கு வரும்போது அரசியல்வாதிகள் 72 மணிநேரத்தில் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் கையில் எடுத்து ஓட்டு கேட்பதற்காக வீட்டின் வாசலை மிதித்தால் போதும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக சமூக ஊடகங்களில் வெளிநாட்டினர் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

தங்கள் தேவைக்காக மட்டும் வெளிநாட்டினரை பயன்படுத்தி கொள்ளும் அரசியல்வாதிகள் வெளிநாட்டவர்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போது பேச தயங்குகின்றனர் என்றும் இந்த விஷயத்தில் தலையிடவில்லை என்று வெளிநாட்டவர்கள் கோபத்தில் உள்ளனர். உண்மை என்னவென்றால், வெளிநாட்டினரின் தற்போதைய அவல நிலையை நிவர்த்தி செய்ய மிகச் சில அரசியல்வாதிகள் எடுத்த முயற்சிகளும் பலனளிக்காத நிலையில் இந்த புதிய முடிவுக்கு மத்திய,மாநில அரசும் மற்றும் எதிர்க்கட்சியும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்திவிட்டு இந்த பிரச்சினையில் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் பிரச்சினை தீர்க்க முயற்சி செய்தால் அது ஆயிரக்கணக்கான சாதாரண வெளிநாட்டவர்களுக்கு பெரிய ஆசீர்வாதமாக இருக்கும் என்றும் பாதிக்கப்பட்ட வெளிநாட்டினர் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Add your comments to Search results for Indian Airport

Thursday, February 18, 2021

வளைகுடாவில் இருந்து பிப்ரவரி-23 முதல் தாயகம் செல்லும் நபர்களுக்கு;இந்திய சுகாதாரத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

வளைகுடாவில் இருந்து பிப்ரவரி-23 முதல் தாயகம் செல்லும் நபர்களுக்கு;இந்திய சுகாதாரத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, நினைவில் கொள்ளுங்கள்

Image : Indian Airport

வளைகுடாவில் இருந்து பிப்ரவரி-23 முதல் தாயகம் செல்லும் நபர்களுக்கு;இந்திய சுகாதாரத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

வளைகுடாவில் இருந்து இந்தியாவிற்க்கு செல்லும் பயணிகளுக்கு சுகாதார அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிடுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசிலிய வைரஸ் வகைகள் கண்டறிய பட்ட நிலையில் சுகாதார அமைச்சகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய வழிகாட்டுதல்கள் இந்த மாதம் 23 முதல் அமலுக்கு வருகின்றன.

புதிய வழிகாட்டுதலின் அடிப்படையில் இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் மக்களுக்கு பொருந்தும் எனவும் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் ஆர்டி பி.சி.ஆர் சோதனை எதிர்மறையாக இருந்தால் மட்டுமே இந்த இடங்களிலிருந்து பயணிகள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட மரணம் காரணங்களுக்காக அவசர தேவை அடிப்படையில் செல்லும் பயணிகளுக்கு மட்டுமே இந்த புதிய விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கபடும், மேலும் இந்தியாவுக்கு புறப்படுவதற்கு முன், கோவிட் தொடர்பான சுய சான்றளிக்க உங்கள் விபரங்களையும் மற்றும் ஆர்.டி பி.சி.ஆர் சோதனை எதிர்மறை அறிக்கை ஆகியவற்றைஇந்த Link:

(ஏர் சுவிதா போர்ட்டலில்) பதிவேற்றப்பட வேண்டும். தவறான தகவல்களைப் பதிவேற்றும் நபர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இதற்கிடையில், யு.கே யில் கண்டறியப்பட்ட மரபணு மாற்ற கோவிட் வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 187 நபர்களிடம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Add your comments to Search results for Indian Airport

Sunday, August 8, 2021

அபுதாபி மற்றும் துபாய் விமான நிலையங்களுக்கு இந்தியாவில் இருந்து பயணிக்கும் இந்தியர்கள் கவனத்திற்கு முக்கியமான அறிவிப்பு

அபுதாபி மற்றும் துபாய் விமான நிலையங்கள் வழியாக அந்தந்த எமிரேட்களில் குடியுரிமை விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்

Image : Dubai Airport

அபுதாபி மற்றும் துபாய் விமான நிலையங்களுக்கு இந்தியாவில் இருந்து பயணிக்கும் இந்தியர்கள் கவனத்திற்கு முக்கியமான அறிவிப்பு

அமீரகத்தில் கடந்த ஆகஸ்டு-5,2021 முதல் இந்தியர்கள் உள்ளிட்ட 6 நாடுகளை சேர்ந்தவர்கள் பயண விதிமுறைகளை பின்பற்றி பயணிக்க அனுமதி வழங்கியது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்தியர்கள் அமீரகத்திற்கு திரும்ப துவங்கியுள்ளனர். இந்நிலையில் இந்திய பயணிகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புதிதாக வெளியிட்டுள்ள செய்தியில் அந்தந்த எமிரேட்ஸின் Validity விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே அபுதாபி மற்றும் துபாய் விமான நிலையங்கள் வழியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய முடியும் என்று அறிவித்துள்ளது. அதாவது அபுதாபி விசா வைத்திருந்தால் அபுதாபி விமான நிலையம் வழியாகவும், துபாய் விசா வைத்திருந்தால் துபாய் விமான நிலையம் வழியாகவும் பயணிக்க முடியும், அதேநேரம் நாட்டின் மற்ற எமிரேட்டுகளின் பயணிகள் இந்த விமான நிலையங்கள் வழியாக பயணிக்க முடியாது. ஆனால் ஷார்ஜா மற்றும் ராஸ்-அல்-கைமா விமான நிலையங்கள் வழியாக எந்த எமிரேட்டின் விசா வைத்திருப்பவர்களும் பயணிக்க முடியும் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளன.

தற்போது, அமீரகத்தின் அனைத்து எமிரேட்ஸுக்கு செல்பவர்களும் துபாய் விமான நிலையத்தில் வந்து இறங்குகின்றனர். அதேபோல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் முன்பு அபுதாபிக்கு ஆகஸ்ட்-10,2021 முதல் விமான சேவைளை தொடங்கும் என்று கூறியிருந்தது. இருப்பினும், எட்டிஹாட் ஏர்வேஸ் நேற்று(07/08/21) சனிக்கிழமை முதல் சென்னை, திருவனந்தபுரம்,கொச்சி, பெங்களூர் மற்றும் டெல்லியில் விமான நிலையங்களிலிருந்து அபுதாபிக்கு விமான சேவைகளைத் தொடங்கியுள்ளது. அதுபோல் துபாய்க்கு வருபவர்கள் GDRFA- யின் அனுமதியும், அபுதாபி உள்ளிட்ட பிற எமிரேட்கள் வருபவர்கள் ICA-யில் இருந்து அனுமதி பெற வேண்டும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள இதை விதிமுறைகளை தான் எமிரேட்ஸ் உள்ளிட்ட பிற விமான நிறுவனங்களும் பின்பற்றுகின்றன என்ற தகவலும் வெளியாகியுள்ளது. எனவே அமீரகத்தின் எந்த எமிரெட்டுக்கு நீங்கள் வருகின்றீர்கள் என்பதை கணக்கில் கொண்டு அதற்கு பொருத்தமான விமானத்தில் மட்டுமே பயணச்சீட்டு முன்பதிவு செய்வது சிறந்ததாக இருக்கும். தற்போது அமீரகம் பயணிக்க அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் படிக்க இங்கே Click செய்யவும் https://www.arabtamildaily.com/2021/08/indian-travelers-arrived-directly-today-after-a-long-time-in-the-united-arab-emirates.html

Add your comments to Search results for Indian Airport