BREAKING NEWS
latest

Saturday, July 19, 2025

குவைத்தில் இந்திய விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பயணச்சீட்டு கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

குவைத்தில் இருந்து இயங்கும் இந்திய விமானங்களின் வாராந்திர இருக்கைகளின் எண்ணிக்கை 12,000-லிருந்து 18,000-ஆக அதிகரிப்பதால் பயணச்சீட்டு கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Image : பதிவுக்காக பதிவிறக்கம் செய்யப்பட்டது

குவைத்தில் இந்திய விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பயணச்சீட்டு கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்தியாவிற்கும்-குவைத்திற்கும் இடையே கடந்த வாரம் கையெழுத்தான புதிய விமான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்தியாவை தலைமையிடமாக கொண்ட பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்கள் அதன் வாய்ப்புகளை திறம்பட பயன்படுத்த முயற்சிகளைத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக விமான நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டு நெட்வொர்க்குகளை மறுசீரமைத்து வருவதாகக் கூறப்படுகிறது. புதிய விமான ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான வாரந்திர இருக்கைகளின் எண்ணிக்கை 6,000 அதிகரித்துள்ளது.

தற்போது இண்டிகோ, ஏர் இந்தியா, ஆகாஷ் ஏர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய இந்திய விமான நிறுவனங்கள் ஆகஸ்ட் 2025 முதல் குவைத்துக்கு புதியதாக கூடுதல் விமானங்களின் சேவை தொடங்கவும், ஏற்கனவே உள்ள சேவைகளை விரிவுபடுத்தவும் திட்டங்களைத் தயாரித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு விமான நிறுவனமும் தேவையான இடங்களை(ஸ்லாட்) பெற குவைத் சர்வதேச விமான நிலையத்துடன் தீவிரமான பேச்சு வார்த்தைகள் மூலம் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இண்டிகோ ஏர்லைன்ஸ் குவைத்துக்கு வாரத்திற்கு கூடுதலாக 5,000 இருக்கைகளை இலக்காகக் கொண்டுள்ளது. இதற்கிடையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஆகாஷ் ஏர் சுமார் 3,000 இருக்கைகளைக் கோரியுள்ளதாகவும், ஏர் இந்தியா 1,500 இருக்கைகளைக் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னை, திருவனந்தபுரம், கொச்சி மற்றும் பெங்களூர் போன்ற பயணிகள் அதிகமாக பயணம் செய்கின்ற நகரங்களிலிருந்து புதிய விமானங்கள் தொடங்கப்பட வாய்ப்புள்ளது.

ஜூலை 21 ஆம் தேதிக்குள் திறன் விரிவாக்கத்திற்கான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு குவைத் மற்றும் இந்திய விமான நிறுவனங்களை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(DGCA) கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவிற்கும் குவைத்துக்கும் இடையே ஜூலை 16-ஆம் தேதி புதிய விமான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் கீழ், வாராந்திர இருக்கைகளின் ஒதுக்கீடு 12,000-லிருந்து 18,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் இரு நாடுகளும் இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் தமிழர்கள் அதிகமாக பயணம் செய்கின்ற தமிழக-கேரளா எல்லையான திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளின் பயணச்சீட்டு கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கேரளாவின் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்களும் பயணம் செய்வதால் இந்தியாவின் எந்த விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணச்சீட்டு கட்டணத்தை விட திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வழியாக பயணிக்க பயணச்சீட்டு கட்டணம் எப்போதும் ஒருபடி அதிகமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Airport | Indian Airport | Flight Tickets

Add your comments to குவைத்தில் இந்திய விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பயணச்சீட்டு கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

« PREV
NEXT »