BREAKING NEWS
latest

Accident Death - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Accident Death செய்திகள், கட்டுரைகள், Accident Death புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Saturday, October 3, 2026

சவுதி சாலையில் நடந்த கோர விபத்து தமிழகத்தை சேர்ந்த 2 செவிலியர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

அவர்கள் பயணித்த கார் மீது மற்றொரு வாகனம் பயங்கரமாக மோதியதில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்

Image : விபத்தில் உயிரிழந்த இந்திய செவிலியர்கள்

சவுதி சாலையில் நடந்த கோர விபத்து தமிழகத்தை சேர்ந்த 2 செவிலியர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

சவுதி அரேபியாவில் வார விடுமுறை தினத்தில் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கச் சென்றிருந்த போது நடந்த சாலை விபத்தில், இரண்டு தமிழக மற்றும் இரண்டு கேரளா மாநிலத்தை சேர்ந்த செவிலியர்கள் உட்பட ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகத் தற்போது(03/10/26) தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவர்கள் பயணித்த வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் பயங்கரமாக மோதியது. அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த தேவம்மா ஹெப்சசிபா(33) மற்றும் சென்னையைச் சேர்ந்த விஜயலட்சுமி(36) என்ற இருவரும், கேரளா கோட்டயம் மாவட்டம், பாலாவைச் சேர்ந்த ஜெய்சிமோல் மேத்யூ(46) மற்றும் கோட்டயம் மாவட்டம், குருமுல்லூர், அனச்சக்குன்னேலைச் சேர்ந்த ஜோபினா ஜானி(26) என்ற செவிலியர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதில் விஜயலட்சுமி மூணாரில் பிறந்து வளர்ந்து பின்னர் சென்னைக்குக் குடிபெயர்ந்தவர் ஆவார். வாகனத்தை ஓட்டிய சவுதி நாட்டவரான இளைஞரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார் என்ற கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. இந்த துயரமான விபத்து தொடர்பான கூடுதல் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

Accident Death | Saudi Accident | Indian Nurses

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to Search results for Accident Death

Wednesday, January 10, 2024

குளிர்காய நெருப்பு மூட்டிவிட்டு தூங்கிய இரண்டு தமிழர்கள் தமாமில் உயிரிழந்தனர்:

சவுதி அரேபியாவின் தம்மாமில் உள்ள தங்களுடைய குடியிருப்பில் நெருப்பு மூட்டிவிட்டு தூங்கிய இந்தியாவைச் சேர்த்த இருவர் புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்

Image credit: உயிரிழந்த தமிழர்கள்

குளிர்காய நெருப்பு மூட்டிவிட்டு தூங்கிய இரண்டு தமிழர்கள் தமாமில் உயிரிழந்தனர்

சவுதி அரேபியாவின் தம்மாமில் உள்ள தங்களுடைய குடியிருப்பில் நெருப்பு மூட்டிவிட்டு தூங்கிய இந்தியாவைச் சேர்த்த இருவர் புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் அங்கு வீட்டு ஓட்டுநர்களாக வேலை செய்து வந்தனர். உயிரிழந்தவர்கள் விபரங்கள் வெளியாகியுள்ளது. வாளமங்கலத்தை சேர்ந்த தாஜ் முஹம்மது மீரா மொய்தீன்(வயது-42) மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த முஸ்தபா முஹம்மதலி(வயது-66) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் குளிர்காலம் கடுமையாக நிலவி வருகின்ற நிலையில் குளிரில் இருந்து தப்ப நெருப்பு முட்டியதே இந்த துயரமான சம்பவம் ஏற்பட காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரியை பயன்படுத்தி உணவு சமைத்த பிறகு, குளிரில் இருந்து தப்பித்து தூங்குவதற்காக மீதமுள்ள நிலக்கரியை அறையில் தீப்படுக்கை தயார் செய்தனர். அவர்கள் தூங்கும் போது அறையில் இருந்த புகையை சுவாசித்ததால் மூச்சு திணறி உயிரிழந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், புகையை சுவாசித்ததே மரணத்திற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இருவரும் வேலைக்கு வராத காரணத்தால் தேடிய பொது காலையில் இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இருவரும் ஒரே ஸ்பான்சரின் கீழ் பணிபுரிந்து வந்தவர்கள். முஸ்தபா 38 வருடங்களாக இந்த ஸ்பான்சரின் கீழ் ஹவுஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார் என்பது குறி்ப்பிடத்தக்கது. நடைமுறைகள் முடிந்த பின் தம்மாமில் உடல் அடக்கம் செய்யப்படும் என சமூக ஆர்வலர் நாஸ் வக்கம் தெரிவித்தார். குளிர் காலநிலையில் தீமூட்டி குளிர் காய்தல் மற்றும் மின்சார ஹீட்டர்களைப் பயன்படுத்தும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிவில் பாதுகாப்பு மீண்டும் வலியுறுத்தியது. தமாமில் உள்ள கதீஃப்பில் என்ற இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற விபத்தில் கேரளாவை சேர்ந்த இருவர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு விழிப்புணர்வுகள் செய்ததாலும் குவைத் உட்பட வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த சாதாரண தொழிலாளர்கள் குளிரில் இருந்து தப்பிக்க இதுபோன்று தீ மூட்டி மூச்சுத்திணறி உயிரிழப்பது தொடர்கதை ஆகிறது. குவைத்திலும் கடந்த சில வருடங்களில் தமிழர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் இதே காரணத்திற்காக உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குவைத் தீயணைப்பு துறையையும் குளிர்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை நேற்று முன்தினம் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் முக்கியமாக மூடிய காற்றே வாராத அறைகளில் நிலக்கரி மற்றும் கரிக்கட்டை பயன்படுத்தி தீப்படுக்கை தயார் செய்ய கூடாது என்று எச்சரிக்கையாக வெளியிட்டுள்ளது. அப்படி செய்தால் தூங்கும் முன்னர் அதை அணைத்து விட்டு தூங்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Tamil Workers | Fire Accident | Death Dammam

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to Search results for Accident Death

Sunday, April 16, 2023

துபாயில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 16 பேர் வரையில் உயிரிழந்தனர்

அமீரகத்தில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்து நான்கு இந்தியர்கள் உள்ளிட்ட 16 பேர் பலி மற்றும் 9 பேர் காயமடைந்ததனர்

Image : உயிரிழந்த 4 இந்தியர்கள்

துபாயில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 16 பேர் வரையில் உயிரிழந்தனர்

துபாயில் உள்ள தேராவில் ஏற்பட்ட தீ விபத்தில் மலையாள தம்பதிகள் உட்பட 16 பேர் வரையில் உயிரிழந்தனர். மேலும் ஒன்பது பேர் காயமடைந்ததாக துபாய் சிவில் டிஃபென்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அல் ராஸ் பகுதியில் உள்ள ஃபிர்ஜ் முராரில் உள்ள தலால் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்தில் உள்ள சமூக சேவகர் நசீர் வதனாபள்ளி கூறுகையில், தீ விபத்தில் கேரளா தம்பதி உட்பட 4 இந்தியர்கள் உயிரிழந்தனர் எனவும், இதில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார். இதை தவிர மூன்று பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்த பாகிஸ்தான் நாட்டவர்கள் மற்றும் ஒரு நைஜீரிய பெண் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த மற்றவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியர்கள் யாராவது உள்ளார்களா என்பது மருந்துவ அறிக்கை வந்த பிறகே தெரியவரும். அதேபோல் காயமடைந்த 9 பேர் எந்தெந்த நாட்டவர்கள் என்ற விபரங்களும் வரும் மணிநேரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.

உயிரிழந்த 4 இந்தியர்கள் விபரங்கள் வெளியாகியுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த காவலாளியாக வேலை செய்துவந்த ரபீக் மற்றும் பெயிண்டிங் தொழிலாளியாக வேலை செய்துவந்த இமாம் காசிம் ஆகியோர் தீயினை அணைக்கும் முயற்சியில் உயிரிழந்தனர். உயிரிழந்த கேரளா தம்பதியினர் விவரங்களும் வெளியாகியுள்ளது. மலப்புரம் வெங்கரைச் சேர்ந்த களங்கடன் ரிஜேஷ், அவரது மனைவி ஜிஷி என்பதும் தெரியவந்துள்ளது. இறந்த ரிஜேஷ் தேராவில் டிராவல்ஸ் நிறுவன ஊழியராக உள்ளார். இவரது மனைவி ஜிஷி கிசைஸ் கிரசண்ட் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.பக்கத்து அறையில் தீப்பிடித்ததால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி ரிஜேஷ் மற்றும் அவரது மனைவி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் ரஷித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த கட்டிடத்தில் சனிக்கிழமை(நேற்று) மதியம் 12.35 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஐந்து மாடிக் கட்டிடத்தின் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக ஏசி வெடித்து தீப்பிடித்ததாக முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சிவில் பாதுகாப்பு துறையின் செய்தி தொடர்பாளர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Indians Death | Fire Accident | Dubai News

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to Search results for Accident Death

Saturday, October 3, 2026

சவுதியில் தமிழகத்தை சேர்ந்த இளம் தாய் மற்றும் 2 வயது மகள் என்று இருவர் எதிர்பாராத விபத்தில் உயிரிழந்தனர்

ஊதுபத்தியில் இருந்து பரவிய தீப்பொறி தரைவிரிப்பை ஓரளவு எரித்ததால், அறை முழுவதும் புகை சூழ்ந்ததால் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது

Image : உயிரிழந்த தாய் மற்றும் மகள்

சவுதியில் தமிழகத்தை சேர்ந்த இளம் தாய் மற்றும் 2 வயது மகள் என்று இருவர் எதிர்பாராத விபத்தில் உயிரிழந்தனர்

சவுதி அரேபியாவின் புரைதாவில் உள்ள தங்கள் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், தூக்கத்தில் புகை சுவாசித்து உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தாய் மற்றும் பச்சிளம் மகளின் உடல் விமானம் மூலம் தாயகம் கொண்டுவரப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் சென்னையைச் சேர்ந்த ஜெயபாரதி(37) மற்றும் அவரது மகள் கார்த்திகா ஸ்ரீ (2) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் கடந்த ஜூலை 21 அன்று நிகழ்ந்துள்ளது.

இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, தான் சவுதியில் பணிபுரியும் கணவர் கோகுல் ராஜைச் சந்திப்பதற்காக, தாயும் மகளும் விசிட்டர் விசாவில் புரைதாவிற்கு வந்திருந்தனர். புரைதாவில் உள்ள சஃபாரா அருகே ஒரு வீட்டில் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. ஊதுபத்தியில் இருந்து பரவிய தீப்பொறி, தரைவிரிப்பை ஓரளவு எரித்ததால், அறை முழுவதும் புகை சூழ்ந்தது. ஜெயபாரதியும் அவரது மகளும் புகை நுகர்வு காரணமாக உயிரிழந்தனர்.

விபத்து நடந்த நேரத்தில், கோகுல் ராஜும் வேலை முடிந்து அடுத்த அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். புகை வாசனையை உணர்ந்து அவரது எழுந்த போது தான், மனைவியும் மகளும் மரணமடைந்த தகவல் அவருக்கு தெரியவந்தது. இந்தியத் தூதரகம் மற்றும் புரைதா, கனீவ் அறக்கட்டளை ஆகியவற்றின் தலையீட்டால், நீண்ட சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிக்கப்பட்டு, அவர்கள் உடல்கள் கடந்த தினம் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

உடல் ரியாத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டு, உறவினர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டது. அலட்சியம் மற்றும் அறியாமையால் இதுபோன்ற துயரங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் இல்லங்கள் மற்றும் வசிப்பிடங்களுக்குச் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

Baby Death | Saudi Accident | Indian Family

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to Search results for Accident Death

Tuesday, July 8, 2025

ஒமானில் தூசிக்காற்றில் சிக்கிய வாகன விபத்தில் 4 வயது இந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்

ஒமானின் ஹைமா என்ற இடத்திற்கு அருகே உள்ள ஆதாமில் தூசிக்காற்றில் சிக்கிய வாகன விபத்தில் 4 வயது இந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த குழந்தை ஜாசா ஹைரா

ஒமானில் தூசிக்காற்றில் சிக்கிய வாகன விபத்தில் 4 வயது இந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்:

ஒமானின் ஹைமா என்ற இடத்திற்கு அருகே உள்ள ஆதாமில் நடந்த சாலை விபத்தில் இந்திய சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். கேரளா மாநிலம் , கண்ணூர் மாவட்டம், மட்டனூரைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி ஜாசா ஹைரா என்பது தெரியவந்துள்ளது. அவரது தந்தை நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சலாலாவிலிருந்து திரும்பி வரும் வழியில் ஆதாமில் வைத்து விபத்துக்குள்ளானார்கள்.

இன்று(07/07/25) திங்கட்கிழமை அதிகாலை 1 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. பலத்த தூசிக்காற்று காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்தது. வாகனத்திலிருந்து தெறித்து வெளியே விழுந்த ஜாசா ஹைரா பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் பெரிய அளவில் இல்லை, அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நடைமுறைகள் முடிந்ததும் உடல் இன்று மாலையில் இந்தியா கொண்டு செல்லப்படும் என்று KMCC அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Baby Death | Oman Accident | Indian Family

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to Search results for Accident Death