BREAKING NEWS
latest

Monday, February 14, 2022

சர்வதேச பயணிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய சலுகைகள் குவைத் மற்றும் அமீரகத்திற்கு பொருந்தாது

சர்வதேச பயணிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன

Image : Chennai Airport

சர்வதேச பயணிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய சலுகைகள் குவைத் மற்றும் அமீரகத்திற்கு பொருந்தாது

சர்வதேச பயணிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய சலுகைகள் இன்று(14/02/2022) திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.இருப்பினும், குவைத் மற்றும் அமீரகத்தில் இருந்து தாயகம் செல்லும் பயணிகளுக்கு புதிய சலுகைகள் பொருந்தாது. அதன் விரிவான விபரங்கள் பின்வருமாறு:

குவைத் மற்றும் அமீரகம்( UAE) உள்ளிட்ட இரு நாடுகளைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசியை முடித்துவிட்டனர். அதுபோல் இந்த இரு நாடுகளிலும் கோவிட் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இருந்த போதும் ஏன் இந்த இரண்டு நாடுகளும் Green பட்டியலில் இடம்பெறவில்லை என்பது தெரியவில்லை. புதிய முடிவுகளின்படி வெளியிடப்பட்டுள்ள 87 நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR பரிசோதனை தேவை என்ற நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இவர்களுக்கு நடைமுறையிலுள்ள 7 நாள் தனிமைப்படுத்தலுக்குப் பதிலாக 14 நாட்கள் சுய கண்காணிப்பு போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த 87 நாடுகளில் இருந்து வருகின்ற நபர்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை உங்களுடைய தடுப்பூசி சான்றிதழை Air-Suvidha தளத்தில் பதிவேற்றுவது. அதேநேரம் தடுப்பூசி எடுக்காத நபர்களுக்கு PCR பரிசோதனை சான்றிதழ் கண்டிப்பாக தேவை. மத்திய அரசு வெளியிட்டுள்ள Green பட்டியலில் வளைகுடா நாடுகளான பஹ்ரைன், கத்தார், ஓமன், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அதேநேரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் ஆகியவை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இந்த முடிவுக்கு இந்த இரு நாடுகளைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று பலர் கருதுகின்றனர். வரும் நாட்களில் திருத்தப்பட்ட புதிய பட்டியில் வெளியாகுமா....??? என்பது குவைத் மற்றும் அமீரக இந்தியர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சர்வதேச பயணிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய சலுகைகள் குவைத் மற்றும் அமீரகத்திற்கு பொருந்தாது

« PREV
NEXT »