ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பெரிய மற்றும் சிறிய வாகனங்கள் உட்பட 19 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததார் மேலும்,எட்டு பேர் காயமடைந்தனர்.இன்று(19/01/21) செவ்வாய்க்கிழமை காலை, அபுதாபியின் Al- Mafraq பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய வாகனங்களில் லாரிகள்,பேருந்துகள் மற்றும் கார்கள் உள்ளிட்டவை அடங்கும்.
Today Accident - Arab Tamil Daily - The 24×7 Gulf News
சற்றுமுன் Today Accident செய்திகள், கட்டுரைகள், Today Accident புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.
Tuesday, January 19, 2021
Add your comments to
Monday, November 17, 2025
சவுதியில் பேருந்தும்-பெட்ரோல் டேங்கர் லாரியும் மோதி தீப்பிடித்த துயரமான விபத்தில் 42 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்த செய்தி வெளியாகியுள்ளது
Image : பேருந்து தீ பிடித்து எரிந்த காட்சிகள்
சவுதியில் இன்று அதிகாலையில் பேருந்து விபத்தில் சிக்கியதில் 42 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்
இந்தியாவின் ஐதராபாத்திலிருந்து மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளின் பேருந்தும் பெட்ரோல் ஏற்றி சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதி இந்த துயரமான விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து மக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. யாத்திரிகர்கள் மக்காவில் தங்கள் புனித கடன்களை முடித்துவிட்டு மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்தனர். விபத்து நடந்தபோது நள்ளிரவு என்பதால் அனைத்து பயணிகளும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர்.
இந்திய நேரப்படி இன்று(17/11/25) அதிகாலையில் சுமார் 1 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டது. பேருந்தில் 43 இந்தியர்கள் இருந்தனர். இதில் முகமது சுஹப்த்(26) என்ற இளைஞர் மட்டும் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். மீதியுள்ள 42 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு வாகனங்களும் மோதிக்கொண்ட அடுத்த நொடியில் பெரிய வெடிகுண்டு வெடித்து சிதறியது போன்று எழுந்த தீ பிழம்பில் சிக்கிய அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும், எங்களால் எந்த மீட்பு நடவடிக்கையும் மேற்கோள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கண்ணிர் மல்க தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கியவர்களில் 20 பெண்கள்,11 குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் 4 பேர், மீதியுள்ளவர்கள் இவர்களுடைய குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் ஆவார்கள். உயிரிழந்தவர்கள் அனைவரும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்ற கூடுதல் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. 43 பேருமே ஒரு ஏஜென்சி வழியாக இந்தியாவில் இருந்து புனிதப்பயணம் மேற்கொள்ள வந்தவர்கள் ஆவார்கள். விபத்துக்கான காரணம் குறித்த கூடுதல் விபரங்கள் வரும் மணிநேரங்களில் வெளியாகும்.
இதற்கிடையே உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக்க தேவையான வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடல்கள் மதினாவில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை, இவர்களை அழைத்து வந்த ஏஜென்சி மற்றும் சவுதி இந்திய தூதரகம் ஆகியவை ஒருங்கிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.
மதீனா பேருந்து விபத்தை தொடர்ந்து குடும்பத்தினரும் உதவ ஜித்தாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கட்டுபாட்டு அறையினை திறந்துள்ளது. 8002440003 (கட்டணமில்லா),0122614093,0126614276 0556122301(WhatsApp).தெலுங்கானா அரசும் கட்டண அறையினை திறந்துள்ளது +91 7997959754,+91 9912919545.
Indian Visitors | Saudi Accident | Today Accident
Add your comments to Search results for Today Accident
Sunday, February 11, 2024
குவைத்தின் சால்மியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரமான தீவிபத்தில் 11 பேர் வரையில் காயமடைந்தனர்
Image: தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பு
குவைத்தின் சால்மியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலையில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது
குவைத்தில் இன்று(11/02/23 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை Al-Bidaa மற்றும் Salmiya-வைச் சேர்ந்த தீயணைப்புபடை வீரர்கள் பிரிவு, தேடல் மற்றும் மீட்புக் குழுக்களுடன் இணைந்து சால்மியா பகுதியில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரமான தீயை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர்.
Image : மீட்பு நடவடிக்கையில் வீர்கள்
தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டு அணைக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் 11 நபர்களுக்கு மேல் காயங்கள் ஏற்பட்டன எனவும், மீட்கப்பட்ட அனைவருக்கும் காயங்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர் என்ற செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது. இவர்கள் எந்த நாட்டவர்கள் மற்றும் இவர்களுடைய நிலைமை குறித்த கூடுதல் விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Fire Accident | Salmiya Apartment | Today Morning
Add your comments to Search results for Today Accident
Stay Connected
Advertisement 4
Most Reading
-
Dec-12,2020 குவைத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு நேரத்தில் ஏர் லிப்ட்டிங் மூலம் சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்...
-
Dec-13,2020 உலகெங்கிலும் இருந்து துபாய்க்கு வரும் பார்வையாளர்களை ஈர்க்க எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதி...
-
Photo Credit: Monorama Dec-16,2020 பாகிஸ்தானின் லாகூர் ரயில் நிலையத்தில் டிசம்பர் மாதத்தின் கடும் குளிரில் அவ்வளவு நாட்கள் உடன் பயணித்த பாக...
-
Dec-14,2020 குவைத்தில் உள்ள முதலாளி(Sponsore) வீட்டில் இருந்து 20,000 தினார் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி இந்தியாவை சேர்ந்த வீட்டுப் பணிப்ப...
-
Dec-14,2020 குவைத்தில் கோவிட் வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டதால் ஷேக் ஜாபீர் ஸ்டேடியத்தில் பொதுப்பணி துறை அமைச்சகத்தால் குவைத...


