BREAKING NEWS
latest

Sunday, July 16, 2023

சவுதியில் பெரும் தீ விபத்து 5 இந்தியர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

சவுதி அரேபியாவில் உள்ள அல் ஹஸ்ஸாவின் ஹுஃபுஃபில் தொழில்துறை பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்

Image : தீயிணை அணைக்கும் காட்சி

சவுதியில் பெரும் தீ விபத்து 5 இந்தியர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணமான அல்-ஹஸ்ஸாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 இந்தியர்கள் உட்பட 10 பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அல் ஹஸ்ஸாவின் ஹுஃபுஃபில் தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு பட்டறையில் நேற்று(14/07/23) மாலையில் தீ விபத்து ஏற்பட்டது. நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, பட்டறையில் வேலை செய்த 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அடையாளம் காணப்பட்ட 8 பேரில் 5 பேர் இந்தியர்கள் மற்றும் 3 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள இருவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை

அடையாளம் காணப்பட்ட 5 இந்தியர்களில் ஒருவர் விபரங்கள் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம், திருவனந்தபுரம் நெடுமங்காடு அடுத்த அழிக்கோடு அருகே வசித்து வந்த அஜ்மல் ஷாஜகான் என்கிற நிஜாம் என்பவர் என்று தெரிய வந்துள்ளது. மற்ற 4 பேர் இந்தியாவில் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. அதேபோல் இருவர் அடையாளம் காணப்பட வேண்டியுள்ளது. கார் பணிமனையில் இருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது. இறந்தவர்கள் பட்டறைக்கு மேலே வசித்தவர்கள். உடல்கள் அல் ஹாசா சென்டரல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன. பல்வேறு இடங்களில் இருந்து வந்த 10 தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை

Saudi Arabia | Fire Accident | Indians Died

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதியில் பெரும் தீ விபத்து 5 இந்தியர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

« PREV
NEXT »