BREAKING NEWS
latest

Domestic Workers - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Domestic Workers செய்திகள், கட்டுரைகள், Domestic Workers புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Monday, January 18, 2021

குவைத்திற்கு புதிதாக வீட்டுத் தொழிலாளர்களை அழைத்துவர 990 தினார்கள் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

குவைத்துக்கு புதிதாக வீட்டுத் தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான கட்டணமாக  990 தினார்களை குவைத் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம், மனிதவளத்திற்கான பொது ஆணையம் இணைந்து நிர்ணயித்துள்ளது. ஆட்சேர்ப்பு அலுவலகங்கள் மூலம் கொண்டுவரப்படும் வீட்டுத் தொழிலாளர்களுக்கான செலவு 990 தினார்கள் எனவும் மற்றும் வீட்டுத் தொழிலாளர்கள் நேரடியாக Sponsore அழைத்துவர 390 தினார்கள் செலவும் நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

மேலும் ஏஜென்சி அலுவலகங்கள் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்படும் வீட்டுத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது முதலாளியின் வீட்டில் வேலை செய்ய வேண்டும், இல்லையென்றால், ஆட்சேர்ப்பு அலுவலகம் வீட்டு உரிமையாளருக்கு இழப்பீடு மற்றும் வீட்டுப் பணியாளரை திருப்பி அனுப்புவதற்கான செலவை செலுத்த வேண்டும்.  கோவிட் சூழலில், ஆட்சேர்ப்பு அலுவலகங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தொடர்ந்து குடிமக்கள் தொடர்ந்து
பல புகார்கள் எழுந்தன.  இந்த முடிவு குடிமக்கள் மீதான நிதிச்சுமையைக் குறைப்பதற்கான ஒரு நடவடிக்கையாகும் என்றும், அரசாங்கம் நிர்ணயித்த தொகையை விட கட்டணம் அதிகமாக இருந்தால் வர்த்தக அமைச்சின் நுகர்வோர் பாதுகாப்பு ஹாட்லைன் எண் 135 அல்லது domestic.workers@manpower.gov.kw மூலமாகவும் புகார் அளிக்க வேண்டும் என்றும் அமைச்சகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பி.சி.ஆர் சோதனை, சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தல் செலவுகளை ஆட்சேர்ப்பு அலுவலகங்கள் ஏற்க வேண்டும் என்பதால்,இப்படி புதிதாக அழைத்துவரும் தொழிலாளர்களை அரசாங்கம் நிர்ணயித்துள்ள தொகைக்கு குடிமக்கள்(அரபிகள்) வாங்க முடியாது என்று ஆட்சேர்ப்பு முகவர் தெளிவுபடுத்தியுள்ளது. வீட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான செலவு 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது எனவும், கோவிட் சூழ்நிலையில் வர்த்தக அமைச்சின் முடிவை ஏற்க முடியாது என்பது உள்நாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பு அலுவலக ஒன்றியத்தின் கருத்தாக உள்ளது.

Kuwait Recruitment | Domestic Workers | New Visa
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to Search results for Domestic Workers

Saturday, January 16, 2021

குவைத்தில் புதிதாக வீட்டுத்தொழிலாளர்கள் தேர்வு மீண்டும் நாளை முதல் துவக்குகிறது


குவைத்தில் கொரோனா பிரச்சினை துவக்கிய பிறகு ஏற்பட்டுள்ள கடுமையான வீட்டுத் தொழிலாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை முதல் புதிய வீட்டுத் தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு தொடங்கப்படும் என்று சிவில் ஏவியேஷன் அதிகாரப்பூர்வ தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் வீட்டுப் பணியாளர்களை வெளிநாடுகளில் இருந்து திருப்பி அழைத்துவர அறிமுகம் செய்துள்ள belsalamah.com  என்ற தானியங்கி தளத்தை அரசாங்கம் தொடங்கியது.  இந்த தளத்தின் மூலம்தான் தொழிலாளர்கள் மீண்டும் அழைத்து வரப்படுகிறார்கள் என்றும், இதற்கான ஆட்சேர்ப்பு ஞாயிற்றுக்கிழமை(17/01/21) முதல் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Kuwait Starting | Domestic Workers | Interview Tomorrow
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to Search results for Domestic Workers

Wednesday, July 3, 2019

குவைத்தில் வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் முதலாளிகளை கறுப்புப்பட்டியலில் சேர்க்க நடவடிக்கை:

குவைத்தில் வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் முதலாளிகளை கறுப்புப்பட்டியலில் சேர்க்க நடவடிக்கை:

குவைத்தில் தனியார் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் மற்றும் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர்ந்து புகார் வந்தால் அந்த நிறுவனங்களை கறுப்புப்பட்டியலில் சேர்த்து அந்த நிறுவனங்கள் தொடர்ந்து இயக்க முடியாதபடி குவைத் தொழிற்துறை அமைச்சகம் கறுப்புப்பட்டியலில் சேர்க்கும்.இப்படி நூற்றுக்கணக்கான கம்பெனிகளின் ஆவணங்கள் அரசு ரத்து செய்துள்ளது.

இதுபோல் குவைத்தில் வேலை செய்யும் வீட்டுத் தொழிலாளர்களின்(Domestic workers) உரிமைகளை பறிக்கும் முதலாளிகளை(Sponsor) கருப்புப் பட்டியல் சேர்க்க குவைத் தொழிலாளர் துறை அமைச்சகம் நடவடிக்கைகள் துவங்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.வீட்டுத் தொழிலாளர்களிடம் இருந்து தொடர்பு புகார்கள் வருவதால் இந்த புதிய நடவடிக்கைகள் துவங்கியுள்ளதாக தெரிகிறது.குவைத்தின் பிரபல தினசரி நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தொழிலாளர் துறை அமைச்சக இயக்குநர் ஜெனரல் அஹ்மத்-அல்-முசா இதை தெரிவித்துள்ளார்.

வீட்டுத் தொழிலாளர்களிடம் இருந்து சம்பளம் வழங்காத புகார்கள், துன்புறுத்தல் புகார்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட புகார்கள் தினசரி அதிகரிக்கும் நிலையில் இதை அமல்படுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.ஒரே முதலாளிகளின்(Sponsor) பெயரில் 7ழும் 8ட்டும் முறை தொடர்ந்து புகார்கள் வரும் நிலை ஏற்படுகிறது.இப்படிபட்ட முதலாளிகள் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வரவது முறையல்ல என்பதால் கறுப்புப்பட்டியலில் சேர்க்கும் புதிய நடவடிக்கைக்கு ஆலோசனை செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி தொடர்ந்து புகார் வரும் முதலாளிகளையும்( Sponsor) மற்றும் தொழிலாளர்களை அழைத்து வரும்  ஏஜென்சிகளையும்(Recruitment Agency)
கருப்புப் பட்டியல் சேர்க்க தொழிலாளர்கள் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அவர் பேட்டியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளார்.


Reporting by Kuwait tamil pasanga team.








WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to Search results for Domestic Workers

Wednesday, March 17, 2021

குவைத்துக்கான பணி ஒப்பந்தத்தை பிலிப்பைன்ஸ் கடினமாக்கியது;புதிய நிபந்தனைகளை ஏற்க பேச்சுவார்த்தை

குவைத்துக்கான பணி ஒப்பந்தத்தை பிலிப்பைன்ஸ் கடினமாக்கியது;புதுரக மொபைலை ஸ்பான்சர் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது

குவைத்துக்கான பணி ஒப்பந்தத்தை பிலிப்பைன்ஸ் கடினமாக்கியது;புதிய நிபந்தனைகளை ஏற்க பேச்சுவார்த்தை

குவைத்தில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் பிரதிநிதிகள் புதிதாக வீட்டுப் பணியாளர்களை தங்கள் நாட்டிலிருந்து அழைத்துவர குவைத் Domestic Workers Federation அமைப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளி மற்றும் வீட்டு உரிமையாளருக்கும் இடையே நடைமுறையிலுள்ள ஒப்பந்தத்தில் மேலும் புதிதாக சில விதிமுறைகள் சேர்ப்பது குறித்து விவாதித்தனர்.

இது தொடர்பாக தூதரக பிரதிநிதிகள் கூறுகையில் நவீன மொபைல் போனை பணியாளர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் மற்றும் அதை ஸ்பான்சரே தொழிலாளிக்கு வாங்கி வழங்க வேண்டும்,மேலும் அந்த தொகையை தொழிலாளியின் சம்பளத்திலிருந்து கழிக்கக்கூடாது. மேலும் உரிமையாளரின்(Sponsore) பெயரில் நிலுவையில் வீட்டுப் பணியாளர் தொடர்பான வழக்குகள் அல்லது வேலைவாய்ப்பு பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்யும் ஆணவத்தை தொழிலாளியை அழைத்துவரும் Sponsore சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையை முன்வைத்து உள்ளனர்.முன்னதாக, தங்கள் நாட்டின் வீட்டுத் தொழிலாளர்களை துன்புறுத்தியது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கவில்லை என்பது உள்ளிட்ட பல புகார்கள் எழுந்த நிலையில் தொழிலாளர்களை குவைத்துக்கு அனுப்ப பிலிப்பைன்ஸ் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to Search results for Domestic Workers