BREAKING NEWS
latest

Monday, May 10, 2021

சவுதிக்கு திரும்பிய ஒரே வாரத்தில் இந்தியர் உயிரிழந்த சோகமான செய்தி வெளியாகியுள்ளது

பல்வேறுபட்ட இன்னல்களுக்கு மத்தியில் சவுதிக்கு திரும்பிய ஒரே வாரத்தில் இந்தியர் உயிரிழந்த சோகமான செய்தி வெளியாகியுள்ளது

Image: உயிரிழந்த முகமது பஷீர்(வயது-50)

சவுதிக்கு திரும்பிய ஒரே வாரத்தில் இந்தியர் உயிரிழந்த சோகமான செய்தி வெளியாகியுள்ளது

சவுதியிலிருந்து விடுமுறைக்காக தாயகம் வந்து கொரோனா நெருக்கடி காரணமாக பல்வேறுபட்ட சிரமங்களை சந்தித்து மீண்டும்,ஒரு வாரத்திற்கு முன்பு சவுதிக்கு திரும்பிய இந்தியர் மரணமடைந்த செய்தி வளைகுடா இந்தியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.உயிரிழந்தவர் கேரளா மாநிலம்,மலப்புரம்,கொண்டொட்டி பகுதியை சேர்ந்த முகமது பஷீர்(வயது-50) எனறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அல்கோபரில் உள்ள அவரது குடியிருப்பில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டது. விடுமுறைக்காக தாயகம் வந்த முகமது பஷீருக்கு கோவிட் நெருக்கடி காரணமாக கடந்த ஒரு வருடமாக சவுதிக்கு திரும்ப முடியவில்லை. பின்னர் ஏப்ரல் நடுப்பகுதியில் பஹ்ரைனுக்கு வந்து அங்கு தங்கியிருந்து,அவர் பின்னர் கடந்த வாரம் தான் சவுதிக்கு திரும்பினார். இவருடைய மனைவி பெயர் சாகினா மற்றும் இந்த தம்பதிகளுக்கு அஷ்ஃபக் முஹம்மது, சித்தாரா,அஷ்மில் முஹம்மது என்ற 3 குழந்தைகள் உள்ளது. உடல் தமாம் மெடிக்கல் டவர் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இவருடைய உடல் தாயகம் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to சவுதிக்கு திரும்பிய ஒரே வாரத்தில் இந்தியர் உயிரிழந்த சோகமான செய்தி வெளியாகியுள்ளது

« PREV
NEXT »