BREAKING NEWS
latest

Monday, May 10, 2021

குவைத்தில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகள்;பயணிகள் தடை,ஊரடங்கு நீக்கம்,திரையரங்கில் நுழைய அனுமதி உள்ளிட்ட பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது

குவைத்தில் பயணிகள் நேரடியாக நுழைய தடை தொடரும்,இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் பல முக்கிய முடிவுகளின் விபரங்கள் வெளியாகியுள்ளது

Image credit: Official Soure MOI

குவைத்தில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகள்;பயணிகள் தடை,ஊரடங்கு நீக்கம்,திரையரங்கில் நுழைய அனுமதி உள்ளிட்ட பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது

குவைத்தில் பகுதி ஊரடங்கு உத்தரவை ஈத்-அல்-பித்ர் தினமான அன்று அதிகாலை 1 மணி முதல் நீக்க இன்றைய(10/05/21) திங்கட்கிழமை அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்த நிலையில் கடந்த மார்ச் முதல் பகுதிநேர ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தற்போது,ஊரடங்கு உத்தரவு இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கடைபிடிக்கப்பட்டு வருகின்றன நிலையில் இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் குவைத்துக்குள் நேரடியாக நுழைய வெளிநாட்டினருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தடையைத் தொடரவும் இன்றைய அமைச்சரவை இன்று முடிவு செய்தது. அதுபோல் மேலதிக அறிவிப்பு வரும் வரை உணவகங்களில் வீட்டு விநியோக சேவை மட்டுமே அனுமதிக்கப்படும். முந்தைய நாள், உணவகங்களின் செயல்பாட்டை சாதாரண நிலைக்கு கொண்டுவர கொரோனா உயர் மட்ட ஆய்வுக் குழு சமர்ப்பிக்க முன்மொழிவை அமைச்சரவை நிராகரித்துள்ளது. அதுபோல் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்கள் மட்டுமே திரையரங்கில் நுழைய அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குவைத்தில் உள்ள ஈத்-அல்-பித்ரிலிருந்து நாட்டில் பகுதி ஊரடங்கு உத்தரவை நீக்க முடிவு எடுக்கப்பட்ட அதே நேரத்தில் வணிக நிறுவனங்களுக்கு இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டது. உணவகங்கள், உணவு விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் கிளினிக்குகள் போன்ற நிறுவனங்களுக்கு இந்த முடிவிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. நேப்பாளம், பங்களாதேஷ், இலங்கை,பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து நேரடியாக விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது,எனவே இந்த நாடுகளில் இருந்து யாரும் குவைத் நாட்டிற்குள் நேரடியாக நுழைவதற்கு தடை விதித்துள்ளது. இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் நுழைவுத் தடை இல்லாத வேறொரு நாட்டில் 14 நாட்கள் தற்காலிகமாக தங்கியிருந்த பின்னரே குவைத்தில் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட்டது தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் 1,300 க்கும் மேற்பட்ட மசூதிகளில் "ஈத் தொழுகையை" நடத்த அனுமதி, 15 நிமிடங்களுக்கு மிகாமல் இந்த தொழுகை நடத்தப்பட வேண்டும்.அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களில் 60 சதவீதம் பேரை மட்டுமே அனுமதி முடிவு. சினிமாஸ் மற்றும் திரையரங்குகள் திறந்திருக்கும் மற்றும் அங்குள்ள இரண்டு Restaurant மட்டுமே திறக்க அனுமதி. கஃபேக்களில் ஹூக்கா சேவை தடைசெய்யும் முடிவை நீட்டித்தல் செய்யப்பட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகள்;பயணிகள் தடை,ஊரடங்கு நீக்கம்,திரையரங்கில் நுழைய அனுமதி உள்ளிட்ட பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது

« PREV
NEXT »