BREAKING NEWS
latest

Monday, March 29, 2021

குவைத் தினார் நோட்டுகளை கையாள்வது எப்படி என்பது குறித்து சி.பி.கே பொதுமக்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது

குவைத் தினார் நோட்டுகளை கையாள்வது எப்படி என்பது குறித்து சி.பி.கே பொதுமக்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது;உரிய மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்த வேண்டும்

Image credit: குவைத் மத்திய வங்க

குவைத் தினார் நோட்டுகளை கையாள்வது எப்படி என்பது குறித்து சி.பி.கே பொதுமக்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது

குவைத்தில் பயன்படுத்தப்படுகின்ற அனைத்து வகையான தினார் நோட்டுகளுக்கும் எந்தவிதமான சேதத்தையும் ஏற்படுத்த கூடாது எனவும் இது முடிந்த அளவுக்கு நாட்டில் வசிக்கின்ற பொதுமக்களின் பொறுப்பாகும் என்றும் குவைத் மத்திய வங்கி(சி.பி.கே) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தினார் நோட்டுகளில் உள்ள குறிப்புகள் குவைத் நாட்டின் அடையாளம், வரலாறு மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ஒரு முக்கியமான தேசிய அடையாளமாகும். எனவே அதை மக்கள் கண்ணியத்துடன் நடத்துவது தேசிய சின்னத்தை மதிப்பதற்கு சமம். நாட்டில் வசிக்கின்ற மக்களிடையே உள்ள பொதுவான தவறுகள் என்பது தினார் நோட்டுகளை ஒட்டுதல், முத்திரை குத்துதல், கிழித்தல், எரித்தல் மற்றும் நோட்டுகளில் எழுதுதல்.ரூபாய் நோட்டுகளை ஒரு அலங்கார பொருளாக பயன்படுத்துவது அல்லது அதை பலவகையில் மடித்து கைவசம் வைப்பது உள்ளிட்டவை முறையற்ற பயன்பாடாக கருதப்படுகிறது என்று மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

பணத்தாளில் ஏற்படுகின்ற எந்தவொரு சேதமும் அதன் சுழற்சி முறையில் பயன்படுத்தும் ஆயுள்காலம் முன்கூட்டியே முடிந்தால் அதை நிறுத்த வேண்டிய நிலைக்கு வழிவகை செய்கிறது. மேலும் அதே எண்ணில் புதிய நோட்டுகள் அச்சிடப்பட்டு மாற்றப்பட வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற தவறான செயல்களால் சேதமடைந்த நோட்டுகளை பயன்படுத்தி வைப்பை ஏடிஎம்களில் அதை செலுத்தி கணக்கில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுகிறது. வைப்பை ஏடிஎம்கள் இந்த வகையான நோட்டுகளை ஏற்கத் தவறிவிடுகின்றன. எனவே நோட்டுகளை கவனமாக கையாளவும், எந்தவிதமான சேதமும் ஏற்படாமல் இருக்கவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனவும்,குவைத் தினார் நோட்டுகள் குவைத்தின் இறையாண்மையின் அடையாளமாகும், எனவே அதை உரிய மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்த வேண்டும் என்றும் மத்திய வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத் தினார் நோட்டுகளை கையாள்வது எப்படி என்பது குறித்து சி.பி.கே பொதுமக்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது

« PREV
NEXT »