BREAKING NEWS
latest

Wednesday, December 23, 2020

குவைத்தில் மரபணு மாற்றம் ஏற்பட்ட கோவிட் வைரஸ் அறிகுறி எதுவும் இதுவரை பதிவாகவில்லை

Dec-23,2020

குவைத்தில் மரபணு மாற்றம் ஏற்பட்ட கோவிட் வைரஸ் நாட்டில் இதுவரை பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் புதிய கோவிட் யாரையும் பாதித்ததாக அல்லது குவைத்துக்குள் நுழைந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். இதன் மூலம் நாட்டின் சுகாதார நிலை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தெளிவாகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் உலக சுகாதார அமைப்பு மற்றும் லண்டனில் உள்ள குவைத் தூதரகத்தின் சுகாதார பிரிவு அலுவலகத்தில் இருந்து புதிய கோவிட் வைரஸ் ஏற்படுத்தும் சவால்கள் குறித்து விரிவான அறிக்கைக்காக குவைத் சுகாதரத்துறை மற்றும் அமைச்சரவை காத்திருப்பதாக அதிகாரிகள் மேலும் தெரிவி்த்துள்ளனர்.

அதிகாரிகள் மேலும் கூறுகையில் இந்த புதிய கொரோனா பிரச்சினை தொடர்பான சுகாதாரத்துறை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், உலக சுகாதார அமைப்பு மற்றும் லண்டனில் உள்ள குவைத் தூதரகத்தின் சுகாதார பிரிவு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்பட்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

இதுபோல் சவுதி சுகாதாரத்துறையும் மரபணு மாற்றம் ஏற்பட்ட புதிய கோவிட் வைரஸ் அறிகுறி எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.


WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் மரபணு மாற்றம் ஏற்பட்ட கோவிட் வைரஸ் அறிகுறி எதுவும் இதுவரை பதிவாகவில்லை

« PREV
NEXT »