BREAKING NEWS
latest

Friday, November 6, 2020

குவைத்தில் 2 குழந்தைகள் மரணம் மற்றும் பிறந்த குழந்தை குப்பைத்தொட்டில் வீசிய செய்திகள் வெளியாகியுள்ளது:

குவைத்தில் 2 குழந்தைகள் மரணம் மற்றும் பிறந்த குழந்தை குப்பைத்தொட்டில் வீசிய செய்திகள் வெளியாகியுள்ளது:


நவம்பர்-6,2020

குவைத்தின் Al-Farwaniyah பகுதிகளில் இருந்து மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட 13-வயது குவைத் சிறுமி இறந்த நிலையில் காணப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த குழந்தையின் உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயங்கள் மற்றும்  கை பகுதியில் வெட்டுக்காயம்  கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து உள்துறை அமைச்சகம் தீவிர விசாரணை துவங்கியுள்ளது என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் குவைத்தின் Khaitan பகுதிகளில் 6-வயது எகிப்து குழந்தை குளிரூட்டியிலிருந்து ஏற்பட்ட மின் கசிவு காரணமாக உயிருக்கு போராடி நிலையில் Al-Osaimi சுகாதார நிலையத்திற்கு பெற்றோர் எடுத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்ததில் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது இதையடுத்து கவனக்குறைவாக இருந்த பெற்றோர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை துவங்கியுள்ளனர்.

இறுதியாக குவைத்தின் Al-Ahmadi போலிசார்  சட்டத்திற்கு புறம்பாக பிறந்த குழந்தையை அட்டைப்பெட்டில் வைத்து Mubarak Al-Kabee பகுதிகளில் குப்பை தொட்டியில் வீசிய நபரை போலிசார் கைது செய்தனர். இவர் குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இதையடுத்து குழந்தையை உயிருடன் மீட்ட போலிசார் அந்த பச்சிளம் குழந்தையை Al-Adan மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் 2 குழந்தைகள் மரணம் மற்றும் பிறந்த குழந்தை குப்பைத்தொட்டில் வீசிய செய்திகள் வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »