BREAKING NEWS
latest

Monday, November 11, 2019

ஓமனில் பலத்த மழைக்கு இடிபாடுகளில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்:

ஓமனில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது; இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்:



ஓமனின் AL- Seeb பகுதியில் விமான நிலையம் தொடர்பாக கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தபோது திடிரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நீரில் மூழ்கி  இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது.


உயிரிழந்த தொழிலாளர்கள் அனைவரும் ஆசியா நாட்டவர்கள் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. 12 மணிநேரத்திற்கு மேல் போராடி தொழிலாளர்களின் உடல்களை தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மருத்துவ குழுவினர் பல்வேறு முயற்சிகள் செய்து மீட்டனர் என்று அங்கிருந்து வரும் முதல்கட்ட தகவல்கள் தெரிந்தவர்கள்.


இதுபோல் மற்றொரு சம்பவத்தில் மின்னல் தாக்கியதில் 3 பேர் படுகாயமடைந்தனர். அவர் ஓமன் குடிமக்கள் என்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையே இறந்த 7 தொழிலாளர்கள் இந்தியர்கள் என்ற  மற்றொரு தகவலும் சில உள்ளுர் தளங்கள் செய்தியாக வெளியாகியுள்ளது

Reporting by Kuwait tamil pasanga Team
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to ஓமனில் பலத்த மழைக்கு இடிபாடுகளில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்:

« PREV
NEXT »