BREAKING NEWS
latest

Friday, November 22, 2019

வளைகுடா நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 34,000 இந்தியர்கள் மரணமடைந்தனர்; அதிர்ச்சி புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது:

குவைத் சவுதி கத்தார் உட்பட வளைகுடா நாடுகளில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில்....
34,000 இந்தியர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழப்பு என்ற அதிர்ச்சி புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது:



குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகளில் நாள்தோறும் சராசரியாக 15 இந்தியர்கள் உயிரிழப்பதாகவும் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள அவர், வளைகுடா நாடுகளில் 2014ஆம் ஆண்டு முதல் 33,988 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்து 823 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2014-ஆம் ஆண்டில் 5388 பேரும், 2015-ல் 5786 பேரும், 2016 ஆம் ஆண்டில் 6013 பேரும், 2017 ஆம் ஆண்டில் 5604 பேரும், 2018-ஆம் ஆண்டில் 6014 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இருநாடுகளில்தான் அதிக அளவில் உயிரிழப்புகள் நேரிட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் உயிரிழக்கும் இந்தியர்களில் அதிகபட்சமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 1200 பேர் உயிரிழந்துள்ளனர்.
WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to வளைகுடா நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 34,000 இந்தியர்கள் மரணமடைந்தனர்; அதிர்ச்சி புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »