BREAKING NEWS
latest

Friday, November 22, 2019

குவைத்தில் வீட்டுத் தொழிலாளர்களை (Domestic Works) பாதுகாக்கும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது:

குவைத்தில் வீட்டுத் தொழிலாளர்களை (Domestic Works) பாதுகாக்கும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது:


குவைத்தில் வீட்டுத் தொழிலாளர்களை(Domestic Works) பாதுகாக்கும் புதிய உத்தரவு வெளியாகியுள்ளது. இதன்படி வெளிநாடுகளில் இருந்து வீட்டுத் தொழிலாளியை அழைத்துவரும் முதலாளி(Sponsor) தன்னுடைய Sponsorship மற்றும்  நபருக்கு மாற்றும்போது இனிமுதல் சம்மந்தப்பட்ட தொழிலாளியின் முன்னிலையில் மட்டுமே அவர்கள் அனுமதியுடன் அதற்கான ஆவணங்களை புதிய நபரின் பெயருக்கு மாற்ற முடியும் என்று அறிக்கையை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழிலாளர்கள் துறை பிரவு குவைத்தில் உள்ள அனைத்து தொழிற்துறை அமைச்சக அலுவலகங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் சம்மந்தப்பட்ட தொழிலாளியின் முன்னிலையில் அல்லாமல்  மற்றொரு Sponsor(முதலாளி)-யின் பெயருக்கு விசா மாற்றம் செய்ய அனுமதி வழங்கப்படமாட்டாது என்று அறிக்கையில் தெளிவுபடுத்தபட்டுள்ளது. இதன்மூலம் சம்மந்தப்பட்ட தொழிலாளியின் முன்னிலையில் மட்டுமே இனிமுதல் விசா மாற்றம் செய்ய முடியும் என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகின்றது.

இதன்மூலம் மனித கடத்தல், சட்டத்திற்கு புறம்பாக வீட்டுத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக  விற்பனை செய்வது உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பாக நடவடிக்கைகளை முற்றிலுமாக தடுக்க முடியும் என்றும், தொழிலாளர் துறை அமைச்சக அதிகாரி பிரிகேடியர் டைரக்டர் ஜெனரல்  அப்துல்-காதர்-அல்ஷா அவர்கள் தெரிவித்துள்ளார் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு Bcc News சமூக வலைதளங்களை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் தொழிலாளர்களுக்கு தெரியாமல் அனுமதி இன்றி தொழிலாளர்கள் விற்பனை செய்வது தொடர்பாக  ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம்.

Reporting by Kuwait tamil pasanga Team








WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் வீட்டுத் தொழிலாளர்களை (Domestic Works) பாதுகாக்கும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது:

« PREV
NEXT »