BREAKING NEWS
latest

Saturday, October 12, 2019

குவைத்தில் இந்திய இளைஞர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்து தற்கொலை என்ற செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தில் இந்திய இளைஞர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்து தற்கொலை என்ற செய்தி வெளியாகியுள்ளது:


குவைத்தில் Fintas பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பின் 6-வது தளத்திலிருந்து இந்தியாவைச் சேர்ந்த 26-வயது இந்திய இளைஞர் ஒருவர் இன்று குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

இந்த துயரமான சம்பவத்தில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என்றும் எகிப்து நபர் ஒருவர் இதுகுறித்து அவசர மையத்திற்கு தகவல் தெரிவித்தார் என்றும், தகவல் கிடைத்தது உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலிசார் மற்றும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்ததில் அந்த நபர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து உடலை கைப்பற்றி போலிசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை துவக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்கொலை செய்த இளைஞர் குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் தற்கொலைக்கான காரணம் எதுவும் உடனடியாக தெரியவில்லை.

 Reporting by Kuwait tamil pasanga Team

WhatsApp Icon ArabTamilDaily.com is now on WhatsApp Channel Follow Channel

Add your comments to குவைத்தில் இந்திய இளைஞர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்து தற்கொலை என்ற செய்தி வெளியாகியுள்ளது:

« PREV
NEXT »